14/08/2017
மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து...
மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய் சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.
மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.
மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும் குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும். ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.
இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்...
RSS BJP காவிகளுக்கு சாட்டையடி கொடுத்து மத்திய அரசை எச்சரித்து நமது எம்ஜிஆர் நாளேட்டில் வந்த காவி அடி..... கழகத்தை அழி.... என்கிற தெறிக்கவிட்ட கவிதை...
உத்தரகாண்ட்டில்
ருத்ர தாண்டவமாடி,
அருணாசலபிரதேசத்தில்
அத்துமீறி அடாவடிகள்
நடத்தி,
கோவாவில்
காங்கிரசின் குடி கெடுத்து
பீகாரில்
லாலு-நித்தீசை பிரித்து
பின்வழியே
அதிகார பீடத்தைப்பிடித்து,
அரவிந்த் கெஜ்ரிவாலின்
அதிகாரச்செங்கோலை
முடக்கி,
புதுச்சேரி
நாராயணசாமிக்கு
புதுசு புதுசா
தொல்லைகளை அடுக்கி,
மணிப்பூரில்
மக்கள் தீர்ப்புக்கு எதிராக
மகுடத்தைப் பறித்து,
ஆளுநர்களை
அரசியல்
ஏஜெண்டுகளாக்கி
அக்கிரமங்கள் நடத்தி,
நீதித்துறை,
அரசியல் சாசனம்,
அமலாக்கப் பிரிவு,
வருமான வரி,
தேர்தல் ஆணையம்
சி.பி.ஐ., எனும்
தன்னாட்சி அமைப்புகளை
தலைகுனிய வைத்து,
அரசியல் அரிப்புக்கு
அவற்றை
சொறிகின்ற ஆயுதமாக்கி,
ஜனநாயகப்
படுகொலைகளை
சகஜங்களாக்கி,
சர்வாதிகார
பகல் கொள்ளையை
சாதனையென பீற்றி,
எழுபதாண்டு கால
இந்தியத்தின்
அரசியல் பண்பாட்டுக்கு
இழிவுகளைச் சேர்த்து
அப்பழுக்கற்ற
பாரதத்தின்
பன்முகத்தன்மையை
ஆழக்குழிதோண்டி
புதைத்து,
உச்சநீதிமன்றத்துக்கும்
அதிகாரம் இல்லையென
உக்கிரமான
அக்கிரமத்தை நிகழ்த்திய
இந்த உத்தமர்கள்தான்...
ஆண்டுக்கு
2.5 கோடி பேருக்கு
வேலை என
ஆசை வலை வீசியவர்கள்...
ஆளுக்கு 15 லட்சம்
ரொக்கம் என
வாய்ஜாலம் பேசியவர்கள்...
அலைமீது
வலைகொண்டு
வாழும் மீனவர்க்கு
அமைச்சகமென
அள்ளி வீசியவர்கள்...
அமெரிக்க
டாலர் மதிப்பை
35 ரூபாய்க்குள்
அடக்குவோம்,
பெட்ரோல்&டீசல்
விலையை
பாதியாகக் குறைப்போம்...
என்றெல்லாம்
வகை வகையான
வாயாலே
வடை சுட்டவர்கள்...
வாய்மையால்
விடை சொல்ல
வழியற்றவர்கள்...
விளைநிலங்களை
வெடிகுண்டு
கிட்டங்கிகளாக்கி
விவசாயி வயிற்றில்
அடிப்பவர்கள்...
வாக்களித்த மக்களை
‘வரி’ குதிரை
ஆக்கியவர்கள்...
கரன்சியை வெற்று
காகிதமாக்கி
‘கருப்பு பணம்
ஒழித்தோம்’ என
கதையளப்பவர்கள்...
இவர்கள் முன்னின்று
நடத்தியதெல்லாம்
மோசடிகளும்
கூடவே
மோடியா? இந்த
லேடியா? என
சவால் விட்ட இயக்கத்தை
மூன்றாகப் பிளந்ததும்
ஈரிலையை முடக்கி
இன்னல்கள்
தந்ததும்தானே!
- நமது எம்ஜிஆர் நாளேடு...
பாஜக குழந்தைகளை கொல்வது புதுசு அல்ல...
குஜராத்தில் 450 குழந்தைகளை மிக பெரிய பள்ளம் வெட்டி அதில் குழந்தைகளை வைத்து petrol ஊற்றி தீ வைத்து எரித்தார்கள் பாசிச பயங்கரவாதத்தின் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி..
இன்று உத்திர பிரதேசத்தில் பாசிச பயங்கரவாதத்தின் முதல் அமைச்சர் யோகி 65 பச்சிளம் குழந்தைகளை கொன்று இருக்கிறான்..
சுதந்திரத்திற்கு இன்னும் இரண்டு நாள்கள் உள்ள நிலையில் இந்த கோர சம்பவம் நெஞ்சை பதைத்துள்ளது..
மாட்டுக்கு பிறந்த சாக்கடைகள் மனித உயிரை பார்ப்பதில் இந்த சுதந்தரம் கருப்பு நாளாக மாறியிருக்கிறது..
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து மனித உயிர்களில் விளையாடுகிறார்கள் இந்து ராஷ்டிரத்தின் பயங்கரவாதிகள்...
வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை...
தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம்.
இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.
எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்...
அதிமுக எனும் எஃகு கோட்டையை காக்க தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்...
சிறையில் இருக்கும் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர். இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது.
முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் '' என குறிப்பிட்டுள்ளார்...
ONGC குழாயில் எரிவாயு கசிவு, பொதுமக்கள் அதிர்ச்சி...
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் இன்று காலை ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, எரிவாயு கசியத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
கசிவை தடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் குழாய்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
Subscribe to:
Posts (Atom)









