30/09/2017

சித்தர் ஆவது எப்படி - 5...


சிவமான சத்திய சித்தரின் பண்புகள்
இந்த தலைப்பில் வரும் தகவல்கள் மிகவும் சிக்கலானதும், திகைப்பினை தரக்கூடியதுமானது... ஆனாலும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும்....

முதலில் சித்தர்கள் தரிசனத்தை காண விரும்புவர்கள், அவரை எப்படி காண விரும்புகிறார்கள்.. தூல தேகத்திலா அல்லது சூட்சும தேகத்திலா ?..

இன்றைய கால கட்டத்தில் பலர் சித்தர்களை போல இருந்தாலும், அவர்களிடம் எதிர் பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து போனதினால், சித்தர்களை சூட்சும தேகத்திலே காண விரும்புகிறார்கள்.. அப்படி காண்பது ஒன்றே நம்ப தகுந்தாக உள்ளது...

முகநூல் பக்கங்களில் சித்தரை கண்டவர்கள் எல்லாம் அவர்களின் ஒளி தேகத்தை மட்டுமே படம் பிடித்து பதிவு செய்வார்கள்... சித்தரை பற்றி அறியாதவர்கள், வேறு உருவங்களை
படம் பிடித்து அவைகளை ஆவி என்று அநேக படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்..

இப்படி சித்தரா அல்லது ஆவியா என்ற குழப்பத்தில் பலர் இருந்து இருக்கிறார்கள்..

அவர்கள் சித்தரை பற்றி அறை குறையாக அறிந்தவர்களே..

இறைவன் தரிசனத்தை கண்டவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தையே சூட்சும தேக வடிவில் சற்று மங்கலான ஒளி வடிவில் கண்டு இருக்கிறார்கள்...

இப்படியாக கண்டு கண்டு களித்த மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்..

ஆனால் நேரடியாக எந்த உபதேசத்தையும், ஏதாவது பொருட்களையும் பெற்றதாக தெரிய வில்லை.. சிலருக்கு அப்படி நடந்து இருந்தாலும் அது மிகை படுத்திய ஒன்றாகவே முடிவில் இருந்து இருக்கிறது..

சிலருக்கு சித்தர் பழம் கொடுத்தார் என வைத்துக் கொள்ளுங்கள்.. அது எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தானே.. அதில் பரவசம் அடைய என்ன காரணம் ?

ஒரு விசித்திரமான பழமாக, உதாரணத்திற்கு பழத்தின் ஒரு பக்கம் ஆப்பிளாகவும் மறு பக்கம் ஆரஞ்சு ஆகாவும் விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் கொடுத்து இருந்தால், ஏதாவது அர்த்தம் இருக்கிறது...

ஆனால் அது போல் எதுவும் நடந்ததில்லை... இனியும் நடக்குமா என்பதிலும் ஐயமே உள்ளது..

மற்றொன்று, சித்தரின் விசித்திரத்தை கண்டவர்கள் அனைவரும் தனி தனியாகத் தான் கண்டார்களே தவிர கூட்டாக யாரும் காணவில்லை.. ஒருவர் அனுபவித்த அனுபவத்தை வேறு ஒருவர் உடன் இருந்து சாட்சியாக இருந்ததில்லை..

இந்த நிலையில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு...

அவர் இஷ்டப்பட்டு வரும் நேரத்தில் மட்டுமே பக்தன் கவனிக்க முடியுமே தவிர தான் நினைத்த நேரத்தில், ஏங்கும் நேரத்தில், ஒரு நாளும் தரிசனத்தை கண்டு களித்ததாக செய்திகள் எதுவும் இல்லை..

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலத்தை விட பெரியது என்றார் வள்ளுவர்.. காலத்தில் காட்சி தராத, உதவாத சித்தரால் என்ன பயன் என்று மனித குலம் சிந்திப்பது இல்லை...

ஏதோ நம்பிக்கையிலே மனித குலத்தின் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது; அதை ஏன் கெடுக்க முயற்சிக்க வேண்டும் என கேட்கலாம்..

மனிதனின் தவறான மீள முடியாத சிக்கி கொண்ட நிலையிலிருந்து மீள சில உண்மைகளை வெளிப் படுத்தும் பொழுது, சிக்குண்டதில் ஒடுங்கி போன நிலையில் இருந்து மனித குலம் மீள, சரியான வழி கிடைக்கலாம்...

உண்மைக்கு புறம்பான செய்திகளில் சிக்குண்ட இந்த மனித குலம் இதுவரை இந்த சித்தர்களிடமிருந்து என்ன பெற்றது ?..

ஞானத்தையா அல்லது அசாதாரமான பலத்தையா?...

முடிவில் மரணத்தை தவிர, அதையும் சமாதி என்ற கௌரவமான பட்டத்தை தவிர வேறு என்ன கிடைத்தது ?..

தனிப் பட்ட மனிதனுக்கு கிடைத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர ஒட்டு மொத்த மனித குலத்திற்கு என்ன செய்ய முடிந்தது ?..

காரணம் சித்தர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உள்ள மனிதகுலம் அத்தகைய மன கட்டமைப்பில் உள்ளவர்களையே அதாவது உடல் தோரணைகளில், உலக குடும்ப பந்தங்களில் இருந்து விலகி அன்பு என்பதையே என்னவென்று தெரியாதவர்களையே நம்மில் பெரும் பாலும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்..

அத்தகைய வேசதாரிகளிடம் இருப்பது, சோம்பலும், ஒழுக்கமின்னையும், போதை பொருள்களில் சிக்குண்டவர்களாய் ஆற்றல் அற்று ஆனால் மிக பெரிய ஆற்றல் உடையவர்கள் போன்ற நடிப்பும், நடமாடும் தூல தேக நடை பிணங்களாய், தங்கள் பிழைப்பு ஓட்ட பயமுறுத்தி வாழ்வதுமே நாம் கண்டு கொண்டு வருகிறோம்..

பயமுறுத்தல் என்பது மிக பெரிய ஆயுதமாக கையாண்டு, தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.. இது இன்றைய நிலை...

பின் சித்தர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம் ? பேரண்ட பேராற்றலை பெற்ற காரணத்தினால், ஆற்றல் மிக்கவர்களாய், எதையும் சாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்..

பொருள் உதவிக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை..

யாருக்காகவும் தன் இயல் நடை உடை பாவனைகளை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...

ஆற்றல் மிக்கவர்களாதலால் அன்பு என்ற மகா சக்தி உடையவர்களாதலால் உலக குடும்ப தொடர்புகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும் அவநிலை அவர்களுக்கு இல்லை..

உலகம் எத்தனை வஞ்சனைகள் செய்தாலும், எத்தனை தீங்குகள் செய்தாலும், தாய் உள்ளத்தோடு பொறுத்துக் கொண்டு, வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும், பாராபட்சமின்றி, வேண்டிய நேரத்தில் உதவக் கூடியவர்கள்..

இவர்கள் தன்னை தன் செயல்களை மறைத்துக் கொண்டு உலகிற்கு பலன் தரக்கூடியவர்கள்..

அரசாங்க பணத்தையே அள்ளி அள்ளி கொடுத்து தான் கொடுத்ததாக காட்டிக் கொள்ளும் விளம்பரதாரர்கள் அல்ல..

அன்பே உருவான இவர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மிக மிக எளிமையானவர்கள்...

அதனால் தான் அப்படி இன்றும் வாழும் இவர்களை அடையாளம் காண முடியாமல், விளம்பர புகழ்ச்சி உலகில் சிக்கி கொண்ட மனிதன் தவிக்கிறான்...

உண்மையான சித்தர் பண்புகளை அறிந்து கொண்ட இன்றைய எந்த மனிதனும், சித்தராக விரும்பமாட்டான்..

காரணம் எங்கும் எதிலும் ஆதாயம் தேடும் நிலையிலேயே மனிதன் உள்ளதால் சத்திய சித்தராக விரும்புவதே இல்லை..

ஆனால் சத்திய சித்தர் பண்புகளே அந்த சித்தர்க்கு பிரபஞ்சம் பேரண்டம் தன் பேராற்றலை வழங்கும் என்ற இரகசியத்தை மனிதன் அறிவதில்லை..

அதனால் தான் அன்பின் ஆற்றலே எழுந்த மனிதன் மட்டுமே சித்தராக முடியும் என்ற பெரும் பதிவினை மனதில் கொண்டு, அன்பே சிவம் என்ற சத்திய வார்த்தையில் சிவமாகி நின்ற சத்திய சித்தர் வழிமுறைகளை ஆராய்ந்து சித்தராக முனைவோம்..

தூலதேகத்திலும் சித்தராக இருப்பவரே சூட்சும தேகத்திலும் இருக்கும் வல்லமையை, பேரண்ட பேரறிவின் துணையால் பெற்ற காரணத்தினால், கண்டம் விட்டு கண்டம் நகரும் ஆற்றலும் உடையவராக இருப்பார்...

அவர் ஒருவரே வேண்டிய நேரத்தில் துணையாய் வந்து நிற்பார்..

முதலையிடம் சிக்கிய யானை ஆதி மூலமே என்று அலறிய அக்கணமே வந்து உதவிய இறைவனை போன்று உதவும் வல்லமை உடையவராகவும் இருப்பார்..

வெறும் காட்சிகளை மட்டும் அளித்து காணாமல் போகும் மாயா தோற்றங்கள் கொண்ட சித்தரை போல் இல்லாமல், சத்திய சித்தராய் தேகம் உருவிலும், கண்டம் விட்டு கண்டம் இயங்கக் கூடிய சூட்சும சக்தியிலும் இருப்பவரே உண்மை சித்தர் ஆவார்..

இத்தகைய சித்தர் ஆகும் உளவுகள் உலகிற்கு நன்மை தரும் என்பதை மறக்காமல் இனி வரும் பகுதிகளை உற்று கவனிப்போமாக...

முதலில் கண்ட சித்தர் பிம்பங்கள் அனைத்தும் தனி பட்ட மனிதனின் மாயா மன தோற்றங்கள்.. இவைகளை முதன்முதலில் கண்டு ஏமாந்த மனிதன் இன்று வரை ஏமாந்து கொண்டே இருக்கிறான்..

கண்டேன் கண்டேன் என பரவச புலம்பலை தவிர வேறு ஒரு பலனை பெற இயலாதவனாய் இருக்கிறான்...

இவைகள் எல்லாம் நெருப்பு என்ற பூதத்திலிருந்து பிரிந்து வந்த வெளிச்சம் என்ற கழிவால் ஆனது...

ஆனால் நெருப்பு என்ற பூதத்தை முறையாக பயன் படுத்தி கனல் என்ற உயிர் ஆற்றலை பெறும் போது மட்டுமே சத்திய சித்தர் உருவாகிறார்.. அதற்கு சிவ கலப்பே உகந்த வழி..

சிவ கலப்பு என்பது ஒரு மதத்தை சார்ந்த சொல் அல்ல... அது ஒரு பயிற்சி..

புத்தி அறிவும் இணைந்து செயலாற்றும் உன்னத பயிற்சி.. இனி வரும் பகுதிகளில் அதில் கவனம் செலுத்தி காண்போமாக....

அகத்தியர், போகர், வள்ளலார், திருமூலர் சிவ வாக்கியர் அருணகிரி நாதர் போன்ற மகான்களை நாம் சித்தர்களாக போற்றி வணங்குகிறோம்...

இப்போது நாம் அவர்களை மேலே குறிப்பிட்ட சித்தர் கருத்தோடு பொருத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு, அவர்களை பற்றி தெளிவான கருத்தினை பின்னால் பார்ப்போமாக...

வள்ளுவர் கோட்டம்...


வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும்.

இந்நினைவகம், சென்னையில் 1976 ஏப்ரல் 15 ஆம் தேதி அமைக்கப்பட்டது..

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும்.

இதன் அடிப்பகுதி 25 x 25 அடி அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது.

7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன.

கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை.

நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.

எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது.

இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன.

இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும்.

இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

அரங்கம்..

220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது.

இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன.

இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ்வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம்.

இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்க முடியும்...

பாஜக மோடியும் டூபாக்கூர் அரசியலும்....


கல்வியும் தாழ்த்தப்பட்டதா?


1922-25 வாக்கில் (மெக்காலே கல்விமுறை புகுத்தப்பட்ட பிறகும்) அதை விடுத்து மதராஸ் (சென்னை) மாகாணத்தில் பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 11,575 பள்ளிகளும் 1,094 உயர் கல்வி மையங்களும் இருந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் (இன்றைய) பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

(அதாவது இன்றைய சூழலில் SC, ST என்று குறிக்கப்படுவோர்)

அதாவது ஆங்கில ஆண்டைகளின் திராவிட அடிபொடிகள் கூறுவது போல பல நூறு ஆண்டுகளாக பார்ப்பனரே கல்வி பெற முடிந்தது.

ஈ.வே.ரா வந்துதான் எல்லாருக்கும் கல்வி கிடைத்தது என்பது வடிகட்டிய பொய்.

அவர்கள் காட்டும் புள்ளி விபரங்கள் பிரிட்டிஷ் அரசு நடத்திய ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர் நிறைந்திருந்தது பற்றியது தான்.

ஆங்கிலேய அரசு அங்கீகரிக்காத நாட்டுப்புற பள்ளிக் கூடங்களிலும் பாரம்பரியக் கல்வி நிலையங்களிலும் கல்வி கற்க சாதி ரீதியாக எந்த தடையும் இருந்திருக்கவில்லை.

ஆங்கிலேயர் வரும் முன்பு மக்கள் முட்டாளாக இருந்திருந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

ஐரோப்பாவை விடவும் இங்கே வேளாண்மையும், வானியலும், கணிதமும், கலையும், கட்டுமானங்களும் சிறப்பாக இருந்தன.

தகவல்: பிரிட்டிஷ் ஆவண ஆராய்ச்சியாளர் ராம்பால் அவர்களின் பேட்டி..

விரிவான பதிவு
www. tamilpaper. net/? p=4580

ஆதார் கார்டும் திருட்டு தினமும்...


புற்றுநோயின் எதிரி பப்பாளி...


எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி.

இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று.

இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன.

இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

திராவிடம் பகுதி-1...


இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு...

ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு,
ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,அதனால் விடுதலை அடைந்து..

அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு, மதவழி தேசியம் எனும் போலி தேசியத்தை இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.

இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி 1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.

அன்றைய எழுச்சி பெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.

அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.

கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம், ஓரிசா, பீகார், அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்...

பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து, மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்...

சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம், ஆந்திரா, கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.

மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.

இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மற்ற மொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.

அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந் தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்...

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது...


ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை நேற்று அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய உத்தரவினால் மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்துகளை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிய சாதனங்கள் வாங்குவதற்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரூ.10 கோடி அனுமதித்துள்ளார்.

கடமைகளை சரி வர செய்யாத அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்துள்ளார். இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவும், 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்...

டெல்லியில் பரபரப்பு...


மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகளை தடுத்து, டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மீடியாக்களால் மறைக்கப்படுகிறது...

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் நிகழ்ந்தவைகளா?


மகாபாரதப் போர் நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும், இலக்கிய ஆதாரங்களும், பழங்கால சிற்ப ஆதாரங்களும் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளது.

அதற்கான காரிய காரணங்களை ஆராய்ந்து வெளியிடும் முயற்சியில் தமிழ் பேரறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்து மதத்தினர் உண்மையான உள்ளத்துடன் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே வழக்கிற்கு வந்தது எனலாம்....

ஆனால், அதற்கும் முற்பட்ட காலத்திலேயே, பஞ்சபாண்டவர் இரதங்களுடன் சேர்த்து, ஏழு இரதங்கள் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது....

அவற்றுள், இரண்டு இரதங்கள் கடற்கோளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது..

முழ்கிய பகுதிகளில் கடைசங்க காலத்தைச் சேர்ந்த  பகுதிகளும் உள்ளதாக ஆய்வாளர்களின் முடிபுகள் கூறுகிறது.

ஆனால், கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக முனைவர். சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு "புராண உண்மைகள் " என்ற புத்தகமானது வெளிவரப்போவதாக இருக்கும் நிலையில்,  ''பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல'' என்கிற பரப்புரையானது, எவ்விதமான ஆதாரமும் இன்றி விக்கிபீடியா போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது..

மகாபாரதப் போர் என்பது தமிழர்களின் ஆதியில் கடைபிடித்து வந்த போர் நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த போராகும் என்பதை அதன் உயரிய போர் நெறிமுறைகளைக் கொண்டு அறியலாம்..

போர்க்களத்தின் எல்லைக்கு அப்பால் யாருமே தனியாக ஒருவரையும் தாக்கவில்லை.

பெண்களோ, குழந்தைகளையோ, முதியவர்களையோ, சம்பந்தமில்லாத பொது மக்களையோ தாக்குவதும், புறமுதுகிடுதலும், முதுகில் அம்பை எய்தலும், கேவலமானதாக கருதப்பட்டது.

உயரிய போர் நெறிமுறையானது, அறியப்படுகிற வரலாற்றுக் காலத்திற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது.

இத்தகைய ஒழுக்கமானது தமிழரைத்தவிர வேறு எந்த இனத்தாரிடத்திலும் இருந்ததாக வரலாறு கிடையாது.

ஆனால், மூலக்கதையில் வரும் போர்க்களமும், நதிகளும், சில காட்சிகளும் கடற்கோளால் மூழ்கடிப்பட்டும் இருக்கலாம்.

வனவாச காலத்தில், பாண்டவர்கள் கொல்லி மலையில் முனிவர்கள் (சித்தர்கள்) ஆதரவுடன் தங்கியிருந்தாக சொல்லப்படுகிறது.

இத்தகவல்கள் அங்கு வாழும் மக்கள் தமது அடுத்த தலைமுறைக்கு வாழையடி வாழையாக கூறிவரும் தகவலாகும்.

அவ்வாறு கூறப்பட்டுவரும் உண்மையான அதிசயமான தகவல்கள் ஆயிரம் தலைமுறைகள் கடந்து சென்றாலும்  நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை...

கொல்லி மலையில், பெரியண்ணசாமி கோவில் என்று அழைக்கப்படுவது பஞ்சபாண்டவர்களில் பெரியவராக இருந்த தருமருடைய கோவிலே ஆகும்..

கொல்லிப்பாவையாக இருப்பது திரௌபதியே ஆகும்.

அந்த இடங்களுக்கு நேரில் சென்ற போது, இவ்விவரங்கள் எனக்கு கிடைத்தது..

அங்குள்ள திரௌபதி அம்மன். துகிலுரியப்பட்டு இருக்கும். அதனால் முகத்தை மட்டும் பார்க்கும்படியாக திரை கட்டப்பட்டிருக்கும்.

அங்கு யாரும் பலி கொடுக்கவோ, அசைவம் புசிக்கவோ அனுமதி இல்லை. காரணம், அத்தேவதையானவள் விரதத்தை கடைபிடிப்பவள்.

வனவாசம் முடியும் காலத்தில், ஓராண்டு காலம் யார் கண்ணிலுமே படாமல் வாழவேண்டும் என்ற ஆணை இருந்தது.

அப்போது வெள்ளியங்கிரி மலையிலுள்ள பாண்டவர் குகைகள் என்று அழைக்கப்படும் இரகசிய குகைகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுவதற்கு எதுவாக அதன் அமைப்பு உள்ளது.

திரவ்பதி அம்மனது கோவில்கள்...

திரவ்பதி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கோவில்கள் அனைத்தும் தமிழ்நாடு, முன்னாளில் தமிழர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் தென்னிந்திய பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் போன்ற  இடங்களில் மட்டுமே அதிகமாக உள்ளது.

(கதை நடந்ததாக கூறப்படும் இடங்களில் மிகவும் பிற்காலத்தில் மட்டுமே ஒன்றிரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது)

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்..

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன்.

இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

புறநானூற்றில் கூறப்படும் “ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

பாரதப் பெரும்போரில், இருபடைகளுக்கும் சோறுகொடுத்த சேரமன்னன், உதியஞ்சேரலாதனைப் பற்றிய குறிப்புகள், புறநானுறிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளது. சோற்றை எவ்வளவு தூரம் கொண்டு சென்று கொடுக்கமுடியும் என்பதை நீங்களே யூகம் செய்து கொள்ளவும்.


திரு.முருகேசன் தனபால் அவர்களால் எழுதப்படும் "புராண உண்மைகள்" நூல் விமர்சனம்.

முனைவர் சு.சௌந்திரபாண்டியன் அவர்கள் எழுதிய "புராண உண்மைகள்"என்ற புத்தகத்தில் இருந்து..

கண்ணன் என்றும், கிருஷ்ணன் என்றும், கிருஷ்ணபகவான் என்றும், கிருஷ்ண பக்தி என்றும், ' அரே ராமா அரே கிருஷ்ணா ' என்று கூறி உலகெங்கும் பேசப்பபடுகிறாரே கிருட்டிணன் , அந்த கிருட்டிணன் ஒரு தமிழன்..

கிருட்டிணன் என்பவனின் மூலத் தமிழ் பெயர் கருப்பையா அல்லது கருப்பசாமி என இருத்தல் வேண்டும்.

கறுப்பு என்பதற்கான வடசொல்தான் கிருஷ்ணம்.

தமிழிலிருந்து பிரிந்த வடமொழி, தமிழன் வரலாறாகிய கிருட்டிணன் வரலாற்றை எழுதி வைத்த நூல்தான் அரியவம்சம்.

மகாபாரதம் கூறும் இக் கிருட்டிணன், ஒரு தமிழன்..

இதற்கு ஐயமே வேண்டாம்..

இதற்கு சான்று?

கிருட்டிணன் வரும் இடங்களை எல்லாம் உற்று நோக்குங்கள்.

உங்களுக்கே தெரியும், அவை எல்லாம் தமிழ் மண்ணில் நடந்தவையே என்று.

ஸ்ரீமத் பாகவதத்தை தமிழில் மொழி பெயர்த்த கடலங்குடி நடேசசாத்திரி அவர்கள், மதுரா என்று வட மொழியில் எழுதபட்ட இடங்களை எல்லாம், மதுரை என்று தான் மொழி பெயர்த்துள்ளார்.

அவர் தமிழ் நாட்டு மதுரையைக் குறிக்கவில்லையாயினும், உண்மையில வடமொழி நூல்கள் கூறும் ' மதுரா ' தமிழ் நாட்டு நம் மதுரை தான். இதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் பேருண்மை இது.
மிக பெரிய புராண உண்மை இது.

தமிழ் மக்கள் வரலாறே புத்துணர்ச்சி பெறும் உண்மை இது..

இத்தனை ஆண்டுகளாக மறைந்து போய்க்கிடத்த மாபெரும் வரலாற்று உண்மை இன்று தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

எனது 23 ஆண்டுகால ஆய்வின் பலன் என்று அடக்கத்தோடு கூற விரும்புகிறேன் இதை..

அதாவது, தமிழகத்து மதுரையில் தான் வாசுதேவருக்கும் தேவகிக்கும் கண்ணன் பிறந்தான்.

இதே நம் மதுரையில்தான் கம்சனின் அரன்மனை இருந்தது.

தமிழகத்தில், கஞ்சன் என்று சில தமிழ் நூற்களில் வருபவன் இதே தமிழனாகிய கம்சன் தான்.

அப்படியானால், யமுனைக் கரையில் கோகுலத்தில் வளர்ந்தான் கண்ணன் என்பது ?

அது உண்மை தான்.. ஆம்..

தமிழகத்து வைகை இருக்கிறதே , அதன் வடமொழிப் பெயர் தான் யமுனா.

இந்த சொல் மாற்றம் தான் தமிழகத்து வரலாற்றைத் தமிழர்களிடமிருந்து பறித்தது.

இனிமேல் வட மொழி நூல் எந்த நூலை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, அதில் யமுனா நதி என்று வந்தால், அது தமிழகத்து வைகை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக வரலாறு இனிமையாகத் துலங்கக் காண்பீர்கள்.

தமிழக வரலாறு என்றுகூடக் கூற வேண்டாம் உண்மை வரலாறு என்று கூறலாம்.

வை - நூனி
வைக்கோல் - கதிரின் நுனி
வை + கை = வைகை

யமுனை என்ற சொல்லை பாருங்கள்..
ய + முனை = யமுனை ; முனை = நுனி..
இப்போது விளங்குகிறதா ?

வைகைதான் யமுனை என்று ?

இதை ஏதோ சொல்லாராய்ச்சி என எண்ணி விட வேண்டாம்.

நமது ஆய்வு சொல்லாராய்ச்சி மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை.

நமது ஆய்வு நிலவியல் (Geography) உள்பட பல்வேறு கூறுகளின் மீது உட்கார்த்துள்ளது.

வைகை கரையில் தான் கண்ணன் விளையாடியது.

பலராமனுடன் கண்ணன் விளையாடிய கோகுலம் எது ?

நமது திருப்பூவனம் என்ற ஊர்தான்.. ஆம்..

வடமொழி நூற்களில் விரஜா என்று குறிப்பிடடும் இந்த ஊர் நந்தகோகுலம், தமிழகத்துத் திருப்பூவணம் என்ற ஊர்தான்.

மதுரையை ஒட்டி அமைத்துள்ளது. வைகைக் கரையில் உள்ளது.

இத் திருப்பூவணமே யமுனை கரையில் உள்ள நத்தகோகுலம் என்று சித்திரிக்கபட்டுள்ளது வடமொழி நூல்களில்.

எந்த வடமொழி நூல்களில் ?

மகாபாரதம், அரியவம்சம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய வடமொழி நூல்களில்..

எனவே, இந்த வடமொழி நூற்கள் விவவரிக்கும் கண்ணன் வரலாறு , தமிழக வரலாறே , கற்பனை கதை இல்லை..

நத்தகோகுல வருணனைகளைப் படித்துப் பாருங்கள்.. அப்படியே நமது வட்டாரத்திற்கு பொருந்தி வரும்.

திருப்பூவணத்துக் கடம்ப மரங்கள் எல்லாம் கூட அப்படி வடமொழி நூற்களில் அச்சுக் குலையயாமல் வருணிக்கப்படுகின்றன.

நான் இங்கு ஒன்றைக் கேட்கிறேன்..

எந்த வடமொழி நூலிலாவது, 'மதுரா' 'கோகுலம்' முதலியன வடநாட்டில் இருப்பனவாக எழுதப்பட்டுள்ளதா? இல்லையே..

அப்படி இருக்கும் போது, இவற்றை ஏன் வடநாட்டுக்குத் தள்ள வேண்டும்..

யமுனை ஒன்றுதான் இதுவரை கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ளிக் கொண்டிருந்ததுது.

அந்த இரகசியம் இன்று விடுபட்டு விட்டது.

தமிழக வைகை தான் யமுனை என்று தெளிவான பின்.

வேறு எதை வைத்து கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ள முடியும்?

தமிழகத்து வைகைக்கு 'யமுனை ' என்று பெயரிட்டவர்களும் தமிழர்களே..

பழந்தமிழர்கள் வடநாடு பரவிய போது, அங்கே இருந்த ஒரு பெரிய நதிக்கு யமுனை என்று பெயரிட்டார்கள். அதுவே யமுனை எனப்பட்டது..

வடநாட்டு யமுனா, தமிழகத்து வைகையைவிடச் சிறப்பாக, வளமாக இருந்ததால் 'யமுனா' என்றாலே அது வடநாட்டு யமுனாதான் என்ற நிலை ஏற்ட்டது..

யமுனையின் இரகசியம் இன்று வெளிப்பட்டு விட்டதால் எத்தனையோ வரலாற்றுக் கருத்துகள் இனி தமிழர் பக்கம் ஒதுங்கும். இந்த அதிசயத்தை இனித் தமிழகம் துய்க்கும், தமிழர்கள் நிச்சயமாக ஏற்றம் பெறுவர்..


கண்ணனை ஒரு கடவுளாக வணங்குவது வேறு, அவனை ஒரு பழந்தமிழ் அரசனாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது வேறு..

கண்ணன் எனும் ஆற்றல் வாய்ந்த தமிழக அரசனின் வரலாறு மிக பெரிய தமிழக வரலாறு.

இதை நம் இளைய சமுதாயத்திற்குக் கூற வேண்டியது கடமை நமக்கு உள்ளது.

இந்த வரலாறு தமிழர்களின் சொத்து.

இதை இழந்தால், தமிழர்களைப் போல் ஏமாளிகள் எருவம் இருக்க மாட்டார்கள்.

கடவுள் பக்தி இல்லாதவர்களும், தமிழக வரலாற்றை வெளிப்படுத்தலாம், பக்தியில் பரவவசபட்டுத் தான் கண்ணன் வரலாற்றை பேச வேண்டும் என்பதில்லை.

சுற்றுலாத் துறையினர் இங்கு விழித்துக் கொள்ள வேண்டும்..

மதுரையில் "இது தான் கண்ணன் பிறந்த ஊர். மதுரா என்பது இது தான்." என்று எழுதி வைக்க வேண்டும். உலக மக்களைத் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும்.

தமிழகம் அப்போது ஒரு மெக்கா ஆக, ஒரு வாடிகன் ஆக ஆகும்.

திருப்பூவணத்தில், "இதுதான் கண்ணன் விளையாடிய கோகுலம்" என்று ஒரு விளம்பர பலகை எழுதி வைக்க வேண்டும், அப்போது அவ்வூரே செழுமையாகும்.

என்னினிய தமிழர்களின் வாழ்வு பூத்து குலுங்கும்.

கண்ணன் கையில் உள்ள புல்லாங்குழல், அதுவே தமிழகத்து இசைக் கருவி அல்லவா..

ஏழு சுரங்களை கண்டறிந்த இனம் தமிழினம் அல்லவா?

இப்படி எத்தனையோ கருத்துகளை அடுக்கி கொண்டே போகலாம்.

கண்ணன் தமிழன் என்றால் அவரை ஒட்டிய எத்தனையோ வரலாறுகள் உள்ளனவே.

அவை எல்லாம் தமிழர்களின் வரலாறுகள் தான். இதில் ஐயம் இல்லை.

இவை பற்றிய எனது விரிவான ஆய்வு பின்னர் வெளிவரும், அதுவரை பொறுத்தருள்வீர்...