13/12/2017

உளவியல் - பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர் கொள்ளும் ஏழு நிலைகள்...



சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார்.

முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.

எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது.

அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்..

ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது..

அதிர்ச்சி
மறுப்பு
கோபம்
பேரம்
மனச்சோர்வு
சோதித்து பார்த்தல்
ஏற்றுக்கொள்ளுதல்
இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்..

உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை

(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)

தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்..

இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..

அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.

மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”

கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா..

மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”

சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்

ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்

உதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர் விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்.

இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.

மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”

கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”

பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”

மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”

சோதித்தல் : ”விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”

மூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.

பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
கோபப்பட்டால் மூன்றாவது நிலை
அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை.

முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு...

நம் அடிமைத்தனம் எவ்வாறு வளர்க்கப்படுகினது..?


சித்தர்கள் என்பவர்கள் யார்?


கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்கிறது தேவார பதிகம்.

மனிதன் யார் ? அவன் எப்படி பட்டவன்?உலகில் அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னவர்கள் இந்த சித்தர்கள்.

சித்தர் என்ற சொல் 'சித்' என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்ததாகும். இவர்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். பழங்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் "நிறைமொழி மாந்தர்கள்", "அறிவர்" போன்றவைகளாகும். சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இவர்களை "சாரணர்" என்று அழைத்ததாக  தஞ்சை தமிழ் பல்கலை கழக வாழ்வியற் களஞ்சியம் என்கிற நூல் கூறுகிறது.

இவர்கள் எல்லா சமயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் பார்க்க முடியாததை பார்க்கின்ற, செய்ய முடியாததை செய்கின்ற, தெரியாததை உணர்த்துகின்ற அதீத சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அண்ட வெளிகளில் ஏற்படும் சலனங்கள், சப்தங்கள் ஆகியவற்றை மந்திரங்களாக பிடித்து தரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

இறைவனை இடைவிடாது தியானித்து தம் சித்தத்தை அடக்கி அக கண்ணால் இறைவனை கண்டு உணர்ந்து, தம் ஆத்ம சக்திகளால் செயற்கரிய செயல்களை செய்பவர்கள்.

உயிரும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் யோக சமாதியை விரும்பி உணர்ந்தவர்கள். மௌனத்தை பிரதானமாக கொண்டு சித்தி அடைந்தவர்கள்.

இவர்கள் ரசவாத கலையை அறிந்தவர்கள். மண்ணை பொன்னாக்குவார்கள். கல்லை கற்கண்டாக மாற்றுவார்கள். தகரத்தை தங்கமாக்குவார்கள்.இவர்கள் எட்டு வகை பேராற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

எட்டுவகை ஆற்றல் (அஷ்டமா ஷித்தி)...

1.அணிமா : யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஓர் அணுவாக சஞ்சரிப்பது.

2.மகிமா : ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது.

3.லகிமா : காற்றை விட உடல் எடையை குறைத்து மிதப்பது.

4.கரிமா : உடல் எடையையும்,வலிமையையும் மலைக்கு சமமாக உயர்த்துக் கொள்வது.

5.பிராப்தி : நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்றுவது.

6.ப்ரகாம்யம் : விரும்பிய அணைத்தையும் எளிதாக பெறுவது.

7.ஈசித்துவம் : எந்த வித சக்தி படைத்தவரையும் அடக்கி ஆழ்வது.

8.வசித்தும் : உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.

இவைகள் அஷ்டமா சித்தியாகும்.
இவைகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் என்றும் அழியாத (காயகல்ப முறை) உடலை பெற்றவர்கள்.

கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றவர்கள். மூச்சடக்கி உடலை இலகுவாக்கி பல நாடுகளையும் கண்டு மீண்டும் தன் பழைய உடலை அடைந்த அதிசய மகான்கள். முக்கால நிகழ்வுகளை அறியும் தன்மை பெற்றவர்கள். நினைத்த வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

நீரிலும், நெருப்பிலும், வானிலும் நடக்கும் ஆற்றலை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசியத்துவம் பெற்றவர்கள். இயற்கைக்கு மாறாக அற்புதங்களை செய்ய கூடியவர்கள். என்பவைகள் அணைத்தும் சித்தர்கள் பற்றிய செய்திகள்.

சித்தர்கள் என்றால் சித்துக்கள் செய்பவர்கள் என்று அர்த்தம். சித்து என்பதன் பொருள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும். இவர்கள் சிவானுபூதி பெற்றவர்கள்.

சிவத்துடன் கலந்ததால் பிறப்பு, இறப்பு அற்று என்றும் எப்போதும் ஒன்று போல் இருப்பவர்கள். கடவுளை காண முடியும் என்று கருதி கண்டு, அவரை அறிந்து, தெளிந்து சித்தி அடைந்தவர்கள். இறைவனே சித்தராக வந்து சித்துக்கள் நடத்தியதை கலம்பக இலக்கியங்கள் கூறுகின்றன.

மண்ணில் அடங்கியும், இறைவனுடன். இரண்டர கலந்தும் அழியாத வரம் பெற்ற இந்த சித்தர்கள் ஞானிகளால் கால ஓட்டத்தில் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுகங்களை தாண்டி வாழும் இவர்களின் உடல் பாதுகாப்பு இரகசியங்கள் ஏராளம்.. ஏராளம்.. பல கற்பகாலம் இவர்கள் வாழ்ந்ததர்க்கு ஆதாரங்கள்.. அதுவும் ஏராளம்....

ஒரு சித்தர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொன்னால் நம்ப முடியுமா நம்மால்?

ஆம் அதுதான் உண்மை.. உடலை விட்டு உயிர் பிரிந்து கூடுவிட்டு கூடு பாய்ந்த மகா யோகிகள் இவர்களில் பலர்.

இப்படி உருவமாக அருவமாக திரிபவர்கள் சித்தர்கள். இவர்களில் பெயர் தெரிந்தவர்கள் சிலர். பெயர் தெரியாதவர்கள் பலர்.

துறவு பூண்டு, காடு மேடுகளையெல்லாம் சுற்றி திரிந்து. உலகியல் விதிகளை புறந்தள்ளி நிற்பவர்கள் சிலர்.

பித்தராகவும், சித்தராகவும் மற்றவர்கள் தன்னை இழிவு படுத்தி பேசவும் ஏசவும் மறைந்தும் தோன்றியும் வாழ்பவர்கள் சிலர். தாம் கண்ட அனுபவங்களை விளக்க நூல்கள் எழுதி மனிதர்கள் அறியும் படி செய்தவர்கள் சிலர். வாய் மூடி மௌனமாக காணப்படுபவர்கள் சிலர். பிறர் தம்மை இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் நாம் நிறைவுடனும், அமைதியுடனும், ஆத்ம திருப்தியுடனும், வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்த சித்தர்கள்...

ஆணுறை விளம்பரங்களை பகலில் ஒளிபரப்ப வேண்டாம் , இரவு 10 மணிக்க மேல் ஒளிபரப்பலாம் - மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்...


ஸ்மிருதி இரானி தற்போது ஒளிபரப்பு துறை அமைச்சராக உள்ளார்...

அதிமுக ஒபிஎஸ் - இபிஎஸ் சின் கேடுகெட்ட செயல்...


இலுமினாட்டி களும் கடல் வணிக அரசியலும்...


தமிழா விழித்துக்கொள்...


மராட்டிய கன்னடன் ரஜினி கலாட்டா...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவும்.. தமிழினமும்...


2002ல் பயன்படுத்திய விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கடல்வழி விமானத்தை..

இந்தியா 2017 இன்றுதான் முதன்முதலாக பயன்படுத்த தொடக்கி (மோடி தொடங்கியுள்ளார்) உள்ளது...

இந்தியா அந்த அளவுக்கு வளர்ச்சியில் உள்ளது...

தமிழனுக்கு மட்டும் தனிநாடு இருந்து இருந்தால் உலக வல்லரசாக மாத்தி இருப்பான்...

பள்ளி மாணவர்களுக்கு அரேபிய பெல்லி டான்ஸ் காண்பித்த கேடுகெட்ட அதிமுக இபிஎஸ் - ஒபிஎஸ்...


இந்த மாதிரி ஒரு கேவலம் கெட்ட அரசாங்கம் இந்த உலகத்திலேயே இல்லை...

நம் மாணவ சமூகத்தை சீரழிக்க திட்டம்..

இடம் நாமக்கல்

அடுத்த தலைமுறையை இப்போதே பழுக்க வைக்கும் முயற்ச்சி...