13/12/2017

சித்தர்கள் என்பவர்கள் யார்?


கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்கிறது தேவார பதிகம்.

மனிதன் யார் ? அவன் எப்படி பட்டவன்?உலகில் அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னவர்கள் இந்த சித்தர்கள்.

சித்தர் என்ற சொல் 'சித்' என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்ததாகும். இவர்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். பழங்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் "நிறைமொழி மாந்தர்கள்", "அறிவர்" போன்றவைகளாகும். சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இவர்களை "சாரணர்" என்று அழைத்ததாக  தஞ்சை தமிழ் பல்கலை கழக வாழ்வியற் களஞ்சியம் என்கிற நூல் கூறுகிறது.

இவர்கள் எல்லா சமயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் பார்க்க முடியாததை பார்க்கின்ற, செய்ய முடியாததை செய்கின்ற, தெரியாததை உணர்த்துகின்ற அதீத சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அண்ட வெளிகளில் ஏற்படும் சலனங்கள், சப்தங்கள் ஆகியவற்றை மந்திரங்களாக பிடித்து தரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

இறைவனை இடைவிடாது தியானித்து தம் சித்தத்தை அடக்கி அக கண்ணால் இறைவனை கண்டு உணர்ந்து, தம் ஆத்ம சக்திகளால் செயற்கரிய செயல்களை செய்பவர்கள்.

உயிரும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் யோக சமாதியை விரும்பி உணர்ந்தவர்கள். மௌனத்தை பிரதானமாக கொண்டு சித்தி அடைந்தவர்கள்.

இவர்கள் ரசவாத கலையை அறிந்தவர்கள். மண்ணை பொன்னாக்குவார்கள். கல்லை கற்கண்டாக மாற்றுவார்கள். தகரத்தை தங்கமாக்குவார்கள்.இவர்கள் எட்டு வகை பேராற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

எட்டுவகை ஆற்றல் (அஷ்டமா ஷித்தி)...

1.அணிமா : யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஓர் அணுவாக சஞ்சரிப்பது.

2.மகிமா : ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது.

3.லகிமா : காற்றை விட உடல் எடையை குறைத்து மிதப்பது.

4.கரிமா : உடல் எடையையும்,வலிமையையும் மலைக்கு சமமாக உயர்த்துக் கொள்வது.

5.பிராப்தி : நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்றுவது.

6.ப்ரகாம்யம் : விரும்பிய அணைத்தையும் எளிதாக பெறுவது.

7.ஈசித்துவம் : எந்த வித சக்தி படைத்தவரையும் அடக்கி ஆழ்வது.

8.வசித்தும் : உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.

இவைகள் அஷ்டமா சித்தியாகும்.
இவைகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் என்றும் அழியாத (காயகல்ப முறை) உடலை பெற்றவர்கள்.

கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றவர்கள். மூச்சடக்கி உடலை இலகுவாக்கி பல நாடுகளையும் கண்டு மீண்டும் தன் பழைய உடலை அடைந்த அதிசய மகான்கள். முக்கால நிகழ்வுகளை அறியும் தன்மை பெற்றவர்கள். நினைத்த வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

நீரிலும், நெருப்பிலும், வானிலும் நடக்கும் ஆற்றலை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசியத்துவம் பெற்றவர்கள். இயற்கைக்கு மாறாக அற்புதங்களை செய்ய கூடியவர்கள். என்பவைகள் அணைத்தும் சித்தர்கள் பற்றிய செய்திகள்.

சித்தர்கள் என்றால் சித்துக்கள் செய்பவர்கள் என்று அர்த்தம். சித்து என்பதன் பொருள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும். இவர்கள் சிவானுபூதி பெற்றவர்கள்.

சிவத்துடன் கலந்ததால் பிறப்பு, இறப்பு அற்று என்றும் எப்போதும் ஒன்று போல் இருப்பவர்கள். கடவுளை காண முடியும் என்று கருதி கண்டு, அவரை அறிந்து, தெளிந்து சித்தி அடைந்தவர்கள். இறைவனே சித்தராக வந்து சித்துக்கள் நடத்தியதை கலம்பக இலக்கியங்கள் கூறுகின்றன.

மண்ணில் அடங்கியும், இறைவனுடன். இரண்டர கலந்தும் அழியாத வரம் பெற்ற இந்த சித்தர்கள் ஞானிகளால் கால ஓட்டத்தில் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுகங்களை தாண்டி வாழும் இவர்களின் உடல் பாதுகாப்பு இரகசியங்கள் ஏராளம்.. ஏராளம்.. பல கற்பகாலம் இவர்கள் வாழ்ந்ததர்க்கு ஆதாரங்கள்.. அதுவும் ஏராளம்....

ஒரு சித்தர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொன்னால் நம்ப முடியுமா நம்மால்?

ஆம் அதுதான் உண்மை.. உடலை விட்டு உயிர் பிரிந்து கூடுவிட்டு கூடு பாய்ந்த மகா யோகிகள் இவர்களில் பலர்.

இப்படி உருவமாக அருவமாக திரிபவர்கள் சித்தர்கள். இவர்களில் பெயர் தெரிந்தவர்கள் சிலர். பெயர் தெரியாதவர்கள் பலர்.

துறவு பூண்டு, காடு மேடுகளையெல்லாம் சுற்றி திரிந்து. உலகியல் விதிகளை புறந்தள்ளி நிற்பவர்கள் சிலர்.

பித்தராகவும், சித்தராகவும் மற்றவர்கள் தன்னை இழிவு படுத்தி பேசவும் ஏசவும் மறைந்தும் தோன்றியும் வாழ்பவர்கள் சிலர். தாம் கண்ட அனுபவங்களை விளக்க நூல்கள் எழுதி மனிதர்கள் அறியும் படி செய்தவர்கள் சிலர். வாய் மூடி மௌனமாக காணப்படுபவர்கள் சிலர். பிறர் தம்மை இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் நாம் நிறைவுடனும், அமைதியுடனும், ஆத்ம திருப்தியுடனும், வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்த சித்தர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.