08/01/2018

பிரபஞ்ச இரகசியம்...


புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...

1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..

கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.

பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.

2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..

கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.

3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..

விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.

4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..

நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.

பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.

நல்லது மட்டுமே உள்ளது.

எது நிகழ்ந்தாலும் சரி,

அது இயற்கையின் விருப்பம்.

அது நல்லதாகவே இருக்கும்.

5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...

இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.

மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.

என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.

மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.

6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...

அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.

மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.

7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...

அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்

இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.

9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...

உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.

மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக  சக்தியைப் பெறுவீர்கள்.

10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...

கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?

கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.

நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.

பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை  மூன்று முறை கூறுங்கள்.

உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...

நெஞ்சு வலி குணமாக...


உணவே மருந்து - எளிய இயற்கை மருத்துவம்...


1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...


காவு வாங்க காத்திருக்கும் 1187 குழிகள்...


திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் ரோடு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழுது அடைந்து வாகன ஓட்டிகளுக்கும் ,பயணிகளுக்கும் மிக ஆபத்தான நிலையில் உள்ளது இது.

திருநெல்வேலி மேம்பாலத்தில் இருந்து தென்காசி பழைய பேருந்து நிலையம் முடிய மொத்த குழிகள் 1187.

இதில் லாரி மற்றும் பேருந்தை கவிழ்த்து விபத்தை உட்படுத்தும் குழிகள் மொத்தம் 142 உள்ளது.

நான்கு சக்கர வாகனங்கள் கார் மினிலாரிகளை கவிழ்த்து விபத்தை உட்படுத்தும் குழிகள் மொத்தம் 640.

இருசக்கர வாகனங்களை கவிழ்த்தி விபத்தினை ஏட்படுத்தும் குழிகள் மொத்தம் 405 உள்ளது.

வழக்கம் போல் மண்ணை போட்டும், தெர்மாகோல் போட்டும் மூடாமல் பெரிய விபத்தை உட்படுத்தும் முன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வழியில் ஐயப்ப பக்தரின் வாகனங்கள் ஒருநாளைக்கு 500 மேல் திருநெல்வேலில் இருந்து தென்காசி செல்கின்றன.

இருநாட்களுக்கு முன்னதாகக் கூட லாரியுடம் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஓர் அரசு பேருந்து ஓட்டுநரின் கடிதம்...



அறிவுகெட்ட அரசின் அமைச்சர்களை சென்றடையுமா ?

படித்து பகிர்வோம்...

ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..

நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன்.
பல நாட்கள் அந்த இன்ஜின் வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன்.

ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.
உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன்..

இதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது,என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான். நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.

அந்த பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.

மாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள்.. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.

முன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

இன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
நாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை.. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.

எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்.
நீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா. உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா.

தயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்...

இதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடி நன்றிகள்!

- Sirima

இன்னும் நாங்கள் கூறும் உலக வல்லாதிக்க வணிகர்களை நம்பாதவர்களுக்கு இந்த பதிவு...


சென்னையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதாக கூறி பல கோடிகள் சம்பாதிக்க செய்யும் சதி அம்பலம்...


அதற்கு உறுதுணையாக செயல்படும் பூர்விகா மோபைல்ஸ் நிறுவனத்தை எதிர்த்து அக்கடையின் முன்பு மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது...

மராட்டிய ரஜினி கலாட்டா...


நம்மாழ்வார் எப்படி இயற்கை விவசாயம் தற்சார்பு பொருளாதாரம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்வளவு பெரிய சமூக மாற்றத்தை செய்தார்னு நினைச்சா...

ஒரு நிமிசம் தலைசுத்திருச்சு...

டென்மார்க் தமிழர்கள்...


இவர்களில் 99%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்.

இங்கு ஏறத்தாழ 10,000 தமிழர் வசிக்கின்றனர்...