09/04/2018

பாஜக மோடி தமிழகத்தை விற்பனை செய்யும் நாள் ஏப்ரல் 12...


இலக்கு அடையும் இயந்திரம்...


தனி மனிதன் – தனி மனித கூட்டு பங்களிப்பு கொண்ட சமுதாயம் என பல தளங்களிலும் இந்த கேள்வி மிக எளிதாகவே எழுந்து பிரதிபலிக்கும்.

நாம் நம் மனதில் உருவாக்கியிருக்கும் நம் சுய மதிப்பு உயரம் ( DETERMINATION OF SELF ESTEEM ) அதே அளவில் நாம் எதிர் நோக்கும் இடங்களில் கிடைத்து விடுவதில்லை.

அப்போது நம் மனதில் இந்த கேள்வி எழும்.

பொதுவாகவே மனித மன அமைப்பை இது போன்ற கேள்விகள் ஆக்கிரமித்தால் தொடர்ந்து ஊக்கமுடன்  முன்னேறும் தன்மையை மனம் இழக்கும் என்பதால் இதை உளவியல் அணுகுமுறையோடு ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.

முதலில், முன்னேற்ற இலக்கு என எதை குறிப்பிடுகிறோம் ? என்பதை நாம் தெளிவுற நிர்ணயிக்கவேண்டும்.

ஏனென்றால், புற ஆசைகளால் உந்தப் பெற்று தானாகவே நம் மனதில் உருவாகும் கவர்ச்சி இலக்குகள் ( ARTIFICIAL ATTRACTED TARGET ) நோக்கி முயற்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை.

நம் திறன்களை சுமந்து சென்று சரியான இலக்கு நோக்கி பயணிக்கும் மனம் நமக்கு வசமானால் நம் இலக்கு எய்வது நமக்கு சுலபமாகும்.

வழக்கமான நம் தன்னம்பிக்கை புத்தகங்கள் இலக்கு நிர்ணயிப்பது  – செயலாக்க விதிகள் – இறுதி இலக்கு அடையும் வழிகள் என நம்மை இலக்கு அடையும் இயந்திரம் போல பாவித்து கருத்து வடிவம் கொண்டு புத்தகங்கள் தயாரிப்பார்கள்.

அவர்கள் கூறும் விதிகள் படி நாம் பின்பற்ற ஆரம்பமாகும்போது நம் குடும்பத்திலிருந்தும் / சமூகத்திலிருந்தும் அந்நியப்படுவது போல் தோன்றும்.

காரணம், நம் தன்னம்பிக்கை புத்தக எழுத்தாளர்கள் அனைவரும் ஐரோப்பிய வாழ்வியல் அடிப்படை கொண்டு எழுதப்பட்ட சுய முன்னேற்ற நூல்களை நமக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

நம் சமூக / அரசியல் / தனிநபர் ஒழுக்க கள யதார்த்த அடிப்படைகளில் அந்த நூல்கள் அமைவதில்லை.

ஆனால், நம் இணைய கட்டுரைகள், நம் இலக்கு நோக்கி செல்லும் பாதையில் எங்கெல்லாம் கடும் சவால்கள் எதிர்கொள்ளும் என்பதை அடையாளம் காண உதவும்.

நகரின் சிறு கடையில் வேலை செய்வோருக்கும் – இந்த தேசத்தின் விஞ்ஞானிகளுக்கும் இலட்சியம் வெவ்வேறு திசைநோக்கி இருக்கலாம்.

ஆனால் அவைகளின் உயிர் மதிப்பீடு ஒன்று தான்...

காவிரி பிரச்சனை...


தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...


இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக் காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டு பிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது தான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன.

செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது...

தினகரன் ஆட்கள் நல்லா வச்சு செய்யுறானுங்க எடுபுடியை...


தண்ணீருக்கு எதற்கு கணக்கு பார்க்கிறீர்கள் என சிலர் கேட்கலாம்...


ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியது தானே?

அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை.

ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்...

வெல்க புரட்சி ஆரம்பம் சென்னையில் விரைவில் உலகெங்கும்...


மக்கள் போராட்டங்களை கண்டுக் கொள்ளாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் சமூக ஆர்வலர் திரு.அக்ரி பரமசிவன் கோரிக்கை...


முதலமைச்சர் மற்றும் தலைமை செயலருக்கு கடிதம்...

1 மாநகராட்சி , 2 நகராட்சிகள், 3 வருவாய் கோட்டங்கள் , 9 தாலுகாக்கள் , 12 ஊராட்சி ஒன்றியங்கள் , 19 பேரூராட்சிகள், 437 கிராம நிர்வாக அலகுகளை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 05.06.2017அன்று 24வது மாவட்ட ஆட்சியராக திரு.வெங்கடேஷ் ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை முதன்மையாகவும் முழுவதுமாகவும் தீர்ப்பேன் என உறுதியளித்தார்.

ஆனால் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்(328 கிராமங்களில் ) குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பயிர்க்காப்பீடு தொகைக்காக கோவில்பட்டி மற்றும் பிற பகுதி விவசாய பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கிடைக்க வேண்டி போராடி வருகின்றனர்.

திங்கள் குறைத்தீர் கூட்ட மனு நாளில் தினசரி பல நூறு வயதான முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் உதவித்தொகை கேட்டு மனு வழங்கி வருகின்றனர்.

கிடைப்பது என்னவோ அலைச்சலும் அலைகழிப்பும் தான்.

அதுமட்டுமன்றி கடந்த 2017அக்டோபர் மாதம் முதல் பல்வேறு தாலூகா அலுவலர்களின் நிர்வாக தவறுகளால் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

விவசாய நீர் தேவைகளை கொள்ளையடித்து நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபார நோக்கத்தில் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டுமென கடந்த 2017 ஜூலை மாதம் முதல் பல மனுக்கள் அளித்தும் சமூக ஆர்வலர்களின் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கண்டுக்கொள்ளாமல் தொழிற்நிறுவனங்களுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசாணை நிலை எண்:233 எம்எம்சி2 ன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 625 குளங்களில் கரம்பை மண்/சவுடு மண் எடுக்க விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மண் திருட்டு நடைப்பெற்றது இதனை எதையும் பெரிதுப்படுத்தாமல் ஊமையாகிவிட்டது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களின்  கோரிக்கை மனுக்களை ஜனநாயக வழியின் அகிம்சை போராட்ட வடிவில் மனு கொடுக்க வரும் நபர்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுவதாக உள்ளது மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டுக் கொள்ளாததால் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மையப்பகுதியான விவிடி சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும் பழைய பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வசதி செய்துகொடுக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டும் பலனில்லை.

நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தும்,கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பது மட்டுமே பணியாக உள்ளது.

 ஒவ்வொரு மனுநீதிநாள் முகாம் ,அம்மா முகாம் ,கிராம சபை கூட்டம்,மற்றும் பொதுமக்களின் போராட்ட களங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை  களைய  நடவடிக்கை மேற்க்கொண்டதில்லை.

சட்டம்ஒழுங்கு மற்றும் குற்றவியல் நிகழ்வுகளை நேர்முக உதவியாளர் (குற்றம்) மூலம் அறியும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் தினசரி நிகழ்கின்ற செயின்பறிப்புகள்,வீடு புகுந்து கொள்ளை ,கொலைக்குற்ற சம்பவங்கள் இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்க்கொண்ட நடவடிக்கைகள் என்னவாக உள்ளது.

வருவாய் கோட்டாச்சியர் , கலால் உதவி ஆணையர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான லஞ்ச முறைகேடு  பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியதில் பல கோடி முறைகேடு ,குளம் பராமரிப்பில் பல கோடி மோசடி இவை யாவும் அறிந்தும் விசாரணை மேற்கொள்ளாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1730க்கும் மேற்பட்ட தொழிற்சாலை இருக்கின்றன.இதில் மக்களுக்கும், கால்நடை உயிரினங்களுக்கும்,நீர் நிலம் காற்று மற்றும் வளிமண்டலங்களை சீர்கெடுக்கும் 8 அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய சிகப்பு வகையிலான தொழிற்சாலைகளை அகற்ற தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எவ்வித முன்முயற்சியும் எடுக்க வில்லை.

நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அத்தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல மாதங்களாக தன்னெழுச்சியுடன் போராடி வரும் பொது மக்களை நேரிடையாக சென்று சந்திக்காமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தனது போக்கை கடைபிடித்து வருகிறார்.

மேலும் பல்வேறு நிர்வாக திறமையின்மை காரணமாக பல மாதங்களாக தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல நலத்திட்ட உதவிகள் கிடைக்காமலும் பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைககளுக்காக போராடி வரும் சூழலை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உடனடியாக பணி மாறுதல் (இட மாற்றம்) செய்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் மதிப்பிற்குரிய தலைமைச்செயலர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
அக்ரி.எஸ்.பரமசிவன்.
(சமூக ஆர்வலர்)
தூத்துக்குடி. செல்:9787305625...

காங்கிரஸ் சோனியா காந்தி ரஷ்யா பயணம்...


RGBஅல்ல... தவறு KGB...

நாசக்கார ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக தூத்துக்குடியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது...


தற்போது  தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு மக்களும் ஸ்டெர்லைட் க்கு எதிராக போராட ஆரம்பித்தது விட்டார்கள் இதனால் ஸ்டெர்லைட் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டு இருக்கிறது..

இதிலிருந்து மக்களை திசை திருப்ப பல்வேறு விளம்பரங்கள், கைது நடவடிக்கைகள் எல்லாம் செய்தும் மக்கள் போராட்டம் குறைந்த பாடில்லை நாலுக்கு நாள் வலுவாகி கொண்டே போகிறது.

இவ்வாறு நீடித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய உத்தரவு வந்துவிடும் என்ற காரணத்தினால், மக்களை ஒட்டுமொத்தமாக திசை திருப்ப புது முயற்சியே இந்த செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு உருவாக்கிறார்கள்..

3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது எந்த வித காரணமும் இல்லாமல் 8 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோகம் செய்ய படவில்லை.

கோடை காலத்தின் ஆரம்பத்தில் இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்பும் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடு செய்து மக்களை திசை திருப்பி ஸ்டெர்லைட் போராட்டத்தை மூழ்கடிக்க துடிக்கிறது.

நம் போராட்டம் சரியான முறையில் செல்கிறது இதனால் கலங்கிய ஸ்டெர்லைடின் பயமே நமது வெற்றி. அதனால் எந்த வித திசைமாற்றமும் இல்லாமல் நமது போராட்டத்தை வெற்றி பெற செய்து நாசக்கார ஸ்டெர்லைடை ஒழிப்போம்..

 நாம் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியமே..

இப்படிக்கு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு...