29/04/2018

மரமும் மனிதனும்...


இந்தியாவின் மிகப் பழமையான மரம்...

ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது.

பழங்களே பிரதானம்...

Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும்.

இயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் வளர்க்கப்பட்டுவரும் மரங்களில் இது முக்கியமானது. மரத்தின் முக்கியமானபாகங்கள் அதன் பழங்களே. தமிழகத்தில் வளரும் மரங்களின் பழங்கள் சற்றுச் சிறியவை, வட இந்திய மரங்களின் பழங்கள் பெரியவை; மிகுந்த சுவையுடையவை.

பழங்கள் அதிகமாக இருப்பதால் வடஇந்தியாவில் கிளிகளுக்குச் சிறந்த புகலிடமாக இந்த மரம் திகழ்கிறது. பழங்கள் நிறைய உண்டாக்கப்பட்டால் அந்தக் காலகட்டம் உளுந்து, எள் போன்ற பயிர்களுக்குச் சிறந்த காலமாக அமையும் என்றும், இந்த மரம் மிகவும் செழிப்பாக வளரும் இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் என்றும், அந்த மண்ணில் தங்கத் தாதுகள் மிகுந்திருக்கும் என்றும் பிரஹத்சம்ஹிதா குறிப்பிடுகிறது.

சுரபாலரின் விருக்ஷாயுர்வேதத்தின் 232-வது பாடலில் இதன் பழத்துடன் “பவளம், வெட்டி வேர் சேர்த்து அரைத்த விழுதை மாமரத்தின் வேர்ப்பகுதியில் பூசி, நீர் கலந்து தெளித்தால், மாமரம் மணம் நிறைந்த மலர்களை உருவாக்கித் தேனீக்களை ஈர்த்து நல்ல சுவையுள்ள மாம்பழங்களை உண்டாக்கும்” என்கிறது

இந்தியாவின் மரம்...

‘ஜம்பூத்வீபே’ என்ற வடமொழி மந்திரத்தின்படி பண்டைய ‘இந்தியத் தீவில்’ நாவல் மரங்கள் (ஜம்பு மரங்கள்) நிறைந்து காணப்பட்டதால், இந்தியாவே இந்த தாவரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ‘நாவலந்தீவு’ என்ற பெயரும் உண்டு.

ஒரு புராணக் கதையின்படி மேகக் கடவுளான வருணன் நாவல் மரமாக மாறினார். இதன் காரணமாகவே, ஐம்பூதங்களில் நீருக்கான தலமாகத் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தலமரமாக நாவல் (வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை – திருஞான சம்பந்தர்) மரம் திகழ்கிறது. மற்றொரு சிவன் கோவிலான திருநாவலூரிலும் நாவல் மரம் தலமரமாக உள்ளது.

வடநாட்டில் பழத்தின் நிறம் கருதி இது கிருஷ்ணருக்கும், மகாராஷ்டிரப் பகுதியில் விநாயகருக்கும், தமிழகத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் உரித்தானதாக இந்த மரம் கருதப்படுகிறது. அவ்வையார் ‘முருகனிடம் சுட்ட பழம், வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டது, நாவல் பழத்தைத்தான் என்று கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும்கூட நாவல் மரம் ஒரு புனிதத் தாவரம். புத்தக் கபிலவஸ்தா இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். பதிமூன்றாவது சமணத் தீர்த்தங்கரரான விமலநாதர், நாவல் மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி..

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை

விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.

நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.

ஆக்சிஜன் அமுதசுரபி...

சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது..

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது.

எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்..

பெருசங்கர்.. ஈரோடு  மாவட்டம்...

கேளிக்கையாக இருக்கலாம் ஆனால் நம்மை எப்படி நம்ப வைத்து இருக்கிறார்கள் என்று பாருங்கள் இந்த அடிமை பாடத்திட்டத்தில்...


ஆன்மா...


உடலை விட்டு வெளியேறும் ஆன்மா...

மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன.

அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள்.

மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது.

தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும்.

தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்...

உனது சிந்தனைகளை மழுங்கடிக்கவே ஊடகங்கள்...


மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிற்பகலில் உத்தரவு...


உடனடியாக தமிழக அரசு இதனை எதிர்த்து  மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அய்யாக்கண்ணுவுக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை உத்தரவு...

The God must be crazy...


இப்படம் உண்மையான மனிதனை காட்டும் மனிதனிடம் செயற்கையாக திணிக்கப்பட்ட வார்த்தை, உணர்ச்சி முதல் கொண்டு எந்த மண்ணில் ஒரு மனிதன் பிறந்தானோ அந்த இடத்தில் அவன் வாழ்வதற்கான சூழ்நிலை உண்டு எனவும் அவன் அந்நிலத்திற்கான படைப்பு எனவும் எளிமையை சொல்லப்பட்டிருக்கும்...

மொத்தத்தில் உண்மையான மனிதன் எப்படி இருப்பான் என அழகாக சொல்லிருப்பார்கள்.... 

கடைசி வாய்ப்பு களம் இறங்குவோம் தோழர்களே.. மெரினா புரட்சி தொடங்கட்டும்...


மனம் என்றால் என்ன்.?


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
 
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று...


வங்கிகளின் உண்மை நிலை...


நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?

காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா...

எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?

உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.

சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்?

அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல்.

கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?

இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை.

நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது.  தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.

இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.

பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.

இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர்   Imperial Bank Of India,British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India.

பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை...

இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது. 

மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி யின் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன. அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்.

பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.

முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.

வங்கிகளின் மோசடி...

ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும். இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது..

நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.

புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை.

நாம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம்...