29/04/2018
இரண்டு கால்களிலும் அணியப்பட்ட சிலம்பு...
சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும்.
கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.
'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.
சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும்.
இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும் பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது...
தொட்டாற் சுருங்கி செடி...
சிறுபிள்ளைகளாக இருக்கும் சமயம் இந்த செடியைப் பார்த்தால் தொட்டு விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விளையாட்டு, ஆச்சர்யமும் கூட...
இப்போதும் இந்த அதிசயச் செடியின் மருத்துவ குணங்களைப் படித்தாலே அதே ஆச்சர்யம் அடைவீர்கள்...
மருத்துவ குணங்கள்...
தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும்..
இதன் வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை 10 கிராம் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் கடுப்பு நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்.
உடல் சூடுபிடித்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதை குணமாக்க 10 கிராம் தொட்டாற் சுருங்கி இலையை தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 நாட்கள் சாப்பிட்டால் அந்த எரிச்சல் குணமாகும்.
ஆண்மை பெருக இரவில் 15 கிராம் இலையை பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
இதன் இலையை ஒருபிடி அரைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
ஒரு பங்கு இலைக்கு 10 பங்கு கொதிக்கிற தண்ணீர் ஊற்றி ஆறின பின் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை குடித்து வந்தால் நீர் அடைப்பு, கல்லடைப்பு சரியாகும்.
இலை மற்றும் வேரை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பசுவின் பாலில் போட்டு குடித்துவர மூலம் குணமாகும்.
இதன் இலைச்சாற்றை மூல பவுத்திர ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறிவிடும்.
தொட்டாற் சுருங்கியின் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம் மற்றும் கை கால் மூட்டுகளின் வீக்கம் இவைகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.
இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.
இதன் இலையை ஒரு பெரிய மண் பானையில் போட்டுச் தண்ணீர் விட்டு வேக வைத்து மிதமான சூட்டில் இடுப்பிற்கு ஊற்றி நீவி விட இடுப்பு வலி நீங்கும்...
மரணத்திற்குப் பின் என்ன?
அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.
ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது.
இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான்.
இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?
மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி.
இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது.
ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை.
இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.
பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான்.
காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள்.
கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே.
ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......
அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.
ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.
உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.
அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது...
1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.
இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.
மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?
ஒவ்வொரு முறையும் இங்கே இருக்கும் இரண்டு கட்சிகளை மாற்றம் வேண்டும் என கூறி ஒன்று தேர்ந்தெடுத்து, மற்றொன்டை புறக்கணிக்கிறார்கள் வாக்களித்த மக்கள்...
எப்போதும் இதே போல்தான்..
மக்கள் புத்தி இதுதான் போல என்று கட்சிகளும் கருதி, அவர்கள் ஒன்றிணைந்து மக்களை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறார்கள்..
அவ்வளவே இங்குள்ள அரசியல்..
மாற்றம் வேண்டுமென ஒவ்வொரு தேர்தலின் ஆரம்பித்தில் மக்கள் மனதில் எழுகிறது,
தேர்தலுக்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகள் கழித்து புறக்கணித்த மாற்றத்தையே மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுக்கிறார்கள்...
கற்கள் நகரும் அதிசயம் – மரணப் பள்ளத்தாக்கின் மர்மம்...
நம்ப முடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம் பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்..
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும்.
டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏனெனில் கலிபோனியா தங்க நெருக்கடி நேரத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போது பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் வைத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து கனிய வள ஆய்வாளர்களால் Death Valley எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 1850ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி 1933ஆம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. மேலும் 1994ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்கா 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும்.
தற்போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 1940ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுற்றுப்பிரயாணிகளும் அங்கு சென்று வருகின்றனர். இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு.
சரி, இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம்.
குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள்.
இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948 லேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக் ஆரம்பித்து சமாந்தரமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது.
இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியாதுள்ளது. ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது. இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது. இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும்.
வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் இப்பகுதியில் கோடைகாலத்தில் சாதாரணமாக 49 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இங்கு அதிகூடிய வெப்பநிலையாக 1913 ஜுலை மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. வரட்சியான காலத்தில் இப்பிரதேசத்தில் வெடிப்புகள் விழுந்து அவ்விடங்களில் ஐஸ் படர்ந்திருக்கும்.
கோடை தவிர்ந்த காலங்களில் ஒரு சில வகையான உயிரினங்கள் தோன்றி மறைகிறது. ஆனால் தொடர்ச்சியாக இங்கு வாழும் உயிரினங்கள் என எதுவுமில்லை.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம்.
ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது கூடவே கற்களும் தான்...
Subscribe to:
Posts (Atom)









