30/04/2018

ஆங்கிலேயன் சாதித்தது நம்மால் முடியாதா?


தமிழர்நாடு வல்லரசாகும், பேரரசாகும் என்று நாம் சொன்னால் சிரிக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தை விட சிறிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்தான் உலகிலேயே பெரிய பேரரசை உருவாக்கி ஆண்டனர் என்ற உண்மை தெரியுமா?

வரைபடத்தில் சிவப்பாக இருப்பது 1922ல் ஆங்கிலேயர் ஆண்ட பகுதி.

வெள்ளைப் பகுதி அவர்கள் படையெடுக்காத நாடுகள்.

பச்சை நிறம் அவர்கள் தாய்நிலம்.

உலகில் கால் பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

உலக மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தனர்.

உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் உள்ளன.
இதில் ஆங்கிலேயர் படையெடுக்காத நாடு வெறும் 22 மட்டுமே.

அவை,
Andorra, Belarus, Bolivia, Burundi, Central African Republic, Chad, Congo, Republic of Guatemala, Ivory Coast, Kyrgyzstan, Liechtenstein, Luxembourg, Mali, Marshall Islands, Monaco, Mongolia, Paraguay, Sao Tome and Principe, Sweden, Tajikistan, Uzbekistan, Vatican City.

அதாவது உலகத்தில் 90% நிலப்பரப்பு அவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்ற முயற்சி நடந்துள்ளது.

33 கோடி பேர் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவை (இன்றைய இந்தியாவை போல்  ஒன்றரை மடங்கு) வெறும் ஒரு லட்சம் வெள்ளையர்கள் ஆண்டனர்.

ஆக தாய்நிலமோ மக்கட்தொகையோ முக்கியமில்லை.

பிற நாடுகளை அடக்கி பேரரசாக வரவேண்டிய எண்ணம் கூட நமக்கில்லை.

நம் தாய்நிலத்தை நாம் முப்படைகளுடன் எவரும் அடிபணியாமல் ஆள நினைக்கிறோம்.

இது முடியாதா?

ஆங்கிலேயர் ஒருகாலத்தில் ரோமானியப் பேரரசிடம் அடிமையாக இருந்தது போல தற்போது நாம் இருக்கிறோம்.

நம்மால் ஏன் முடியாது?

பாஜக ஆர்எஸ்எஸ் கலாட்டா...


புதிய கட்சிகள்/தலைவர்களின் கவனத்திற்கு...


1. மனதை கவரும் செயல்பாட்டு வரைவுகளை (தேர்தல் வாக்குறுதி) மக்களிடம் கொண்டு செல்வதால் மட்டும் பயனில்லை..

2. அதில் குறிப்பிட்டதை நிறைவேற்ற கால அவகாசம் எவ்வளவு தேவை என்பதையும், அதற்குள் நிறைவேற்றாவிட்டால் உமது ஆட்சியை தூக்கி எறிவது எப்படி என்பதையும் குறிப்பிடவும்..?

3. தயார் எனில் அதற்கான உறுதிமொழி பத்திரத்தை வாக்கு சேகரிக்கும்போது கொடுக்க முடியுமா..?

4. ஆட்சியை பிடித்தவுடன் உமது/உமது ஆதரவாளர்களின் நிலை மாறினால் என்ன தண்டனை கொடுப்பது..!

5. எந்த ஒரு திட்டத்தையும் தொடங்குமுன் (ரூ.1 முதல் பல ஆயிரம் கோடிகள் வரை) மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றால் மட்டுமே நிறைவேற்றுவது..

6. உமது வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வாழ்வில் ஒருமுறைக்கு மேல் (5 வருடங்கள்) அரசியல்வாதியாக பதவி வகிக்க கூடாது..

7. வருட வருமானம் 3 லட்சத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்..

8. முந்தைய ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி அவர்களை சிறையில் அடைக்க தயாரா..? இதை செய்தாலே பல ஆண்டுகளுக்கு வரி வசூலிக்காமல் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும்.

9. அல்லது சிலநூறு கோடிகளுக்கு நீயும் விலை போய் விடுவாயா..?

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது...


தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது.

சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும், செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது, கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு, கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன...

சித்தராவது எப்படி ? - 17...


அன்பே நிகழ் காலம் என்றால் அதுவே உண்மையாகும்...

தோல்விகளில் துவண்டு கிடக்கின்ற மனிதன், உலகத்தாரையும் உலக சார்புகளையும் தான் குறை கூறி கொண்டு இருக்கின்றானே தவிர தானே அந்த தோல்விக்கு முழுக் காரணம் என்பதை ஒருபோதும் அறிவதில்லை..

கடவுள் சன்னதியில் புலம்பி அழுகின்றான்.. தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் புலம்பும் மனிதனுக்கு நிகழ் காலத்தில் வாழும் அன்பே வடிவான இறைவன் அந்த நொடியே தீர்வு தருகின்றான்..

ஆனால் நிகழ் காலத்தில் வாழ தெரியாத மனிதன், தனக்கு கிடைத்ததை அடையாளம் காண முடியாமல், இறைவன் கொடுத்த அத்தனையும் புறகணிக்கின்றான்..

இறைவன் நிகழ்காலத்தில் இருகின்றான் என்பதை புரிந்து கொள்ள மனிதனுக்கு முடிவதே இல்லை..

காரணம் கடந்த கால அனுபவமான எண்ண ஆதிக்கத்தில் அடிமையாக உள்ள மனிதன் நிகழ் கால சுதந்திரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை..

நிகழ் காலமே சிவம் நிலை என்று எத்தனை சிவ பாடல்களை கற்றாலும், மனிதன் சவ நிலை நோக்கி தான் திரும்பி பார்த்து பயணப் படுகிறான்...

நிகழ் காலத்தில் நிற்க தெரியாத, நிற்க முடியாத மனிதன், இறைவன் கொடுக்கும், கொடுத்துக் கொண்டே இருக்கும் நிலையை உணர முடியாத அவல நிலையில் உள்ளான்..

எப்பொழுதோ ஒருவேளை குருட்டு வாக்கில் நிகழ் காலத்தில் விழும் போது, இறைவனுடைய அருளை பெறுகின்ற போது, தனக்கு எந்த நிலையில் அது கிடைத்தது என உணர முடியாமல் தவிக்கின்றான்..

நான் பெற்றேன் பெற்றேன் என பூரித்து மகிழும் பக்தன் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்று மகிழ்வோடு இருப்பதை காணவே முடிவதில்லை..

பக்தியின் உச்சத்திலே பயணப்பட்ட பிரசித்தி பெற்ற பக்தகோடிகள் நிலையும் அப்படியே....

காரணம் நிகழ் காலத்தில் நொடி பொழுது கூட நீடிக்க முடியாத மனிதன், எதிர் காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ சென்று விடுவதால் நிகழ் கால பெருமை, அதனுடைய மகிமை அறியாது போய் விடுகிறது..

நிகழ் காலத்தை பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் அதை கடந்த கால அனுபவ நிலையாகிய எண்ண ஆதிக்கங்களில் கேட்பதால் நிகழ் கால செய்திகள் கடந்த கால வண்ணம் பூசப் பட்டு அந்த செய்திகளின் உண்மை நிலை கெட்டுப் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்களால், இறைவனே சத்தியத்தை வழங்கினாலும், அது பலன் அற்று போய் விடுகிறது..

ஆகவே மனிதன் எண்ண ஆதிக்கம் எதுவும் அற்ற தோன்றா நிலை அனுபவமாகிய நிகழ் காலத்தை அனுபவப் பட வேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது...

அப்பொழுத்து தான் நிகழ் காலத்தில் அகப்படும் இறைவன் தரிசனம் நமக்கு கிடைக்கும்... பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதே இறை தரிசனம் ஆகும்.. அதுவே நிகழ் காலம் ஆகும்... அதுவே எல்லா செய்யக்கூடிய, செய்யும், செய்யப் போகும் மூலாதாரம் ஆகும்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்று ஆகும்.. நிகழ் காலம் என்பது அந்த ஒன்றே..

நமக்கு ஒரு சொகுசு கார் வேண்டும் என்று விரும்புகிறோம்.. இறைவனிடம் மண்டியிட்டு, அழுது, பிரார்த்தனை செய்கிறோம் .. இறைவன் நேரில் வந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நான் தருகிறேன் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்..

கார் என்ற ஒன்றிலே கற்பனையில் திளைத்து சதா காலமும் பிரார்த்தனை பண்ணிய மனம், கார் என்ற எண்ண பதிவில் பலமான காரணத்தினால், கார் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம்  என்று சொல்லும்..

இறைவன் நம்மை ஏதோ ஒன்றை சொல்லி ஏமாற்றி விடுவானோ என்ற ஐயப்பாட்டில் அனைவரும் கார் வேண்டும் என்றே கேட்பார்கள்.. பின் கார் சம்பந்தப்பட்ட அனைத்தையும், ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்...

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டும் பெற விரும்பவே மாட்டார்கள்...

இறைவனுடைய விருப்பமே மனிதனுடைய பூரண தேவைகளை பூர்த்தி செய்யும் கருணையை உடையவன்.. ஆனால் அவன் விருப்பத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. எண்ண ஆதிக்கங்களால் நம் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பெற வேண்டியதை பெறாமல் குறைவுபட்ட ஒன்றையே பெற்று பெற்று அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..

எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சரணாகதியில் இறைவன் முன், இறைவன் கொடுக்க நினைப்பதை அந்த நிகழ் காலத்தை இழந்து, கடந்த கால எண்ணப் பதிவுகளில் சிக்கி, எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒரு அரிய, அற்புத ஒன்றை பெறாமல், அற்ப சொற்பமான ஒன்றை பெற்றுக் கொண்டு அல்லல் அடைகின்றோம்...

இப்படியாக நிகழ் காலத்தின் பெருமையை உணர்ந்து நிகழ்கால தொடர்பு உள்ளவர்களை தான் சிவநிலை பெற்றவர்கள் என்கிறோம்...

இப்படி இருப்பவர்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பார்கள்..

வற்றாத செல்வம் உடையவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு வாரி வழங்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை நிகழ் காலத்திலே இறைவனிடம் பெற்றவர்கள் மட்டுமே வற்றாத செல்வம் பெற தகுதி பெற்றவர்கள்..

அதனால் அன்பும் நிகழ் காலமும் ஒன்று என அறியும் அறிவு நமக்கு வேண்டும்.. அந்த அறிவு தோன்றா நிலையில் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது...

மனிதன் நிகழ் காலத்தில் இருக்கின்றான் என்றால் அவன் தோன்றா நிலையில் பூரண சரணகதி தத்துவத்தில் இறைவன் முன்நிலையில் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை கிடைக்கப் பெற தகுதி உடையவன் ஆகிறான்..

அந்த ஒன்று வேறு ஒன்றும் இல்லை.. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றல் தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?

நிகழ் காலத்தில் இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெற முடியாதவர்கள், அன்பை பற்றி பேசலாம்.. ஆனால் அன்பாய் இருக்க முடியாது..

காரணம் அன்பாய் இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லாததே...

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று பெறாததாலே, கொடுக்கும் தகுதியை இழந்து விடுவதால், அவர்கள் அன்பாய் இருக்க முடியாது..

நிகழ் காலத்தில் ஆற்றலோடு அறிவும் பெறுவதால் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தங்கள் அன்பின் செயல் பாட்டினை வெளிப் படுத்துவார்கள்..

முடிவாக நிகழ் காலத்தில் மட்டுமே இறைவன் இருக்கிறான்; நிகழ் காலத்தை கெடுப்பது கடந்தகால எதிர்கால எண்ண ஆதிக்கங்கள்.

நிகழ்காலத்தில் பெற்ற ஆற்றலால் மட்டுமே ஒருவன் சகலத்தையும் பெற முடியும்; அப்படி பெற்றவன் ஒருவனே அன்பாய் இருக்க முடியும்; இதனால் அன்பே நிகழ் காலம் என உணரப் படுகிறது...

நிகழ் கால தொடர்புக்கும் சித்தர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளது.. அவர்கள் அளவற்ற ஆற்றலை நிகழ் கால தொடர்பின் மூலமே பெற முடிந்தது...

மேற் சொன்னவற்றை நன்கு நினைவில் கொண்டு தோன்றா நிலையில் இருக்கும் கால அளவினை படிப் படியாக பயிற்சியின் மூலம் விரிவாக்கம் செய்து அன்பே வடிவாய் சித்தராக முனைவோமாக....

தடுப்பூசி உண்மைகள்...


மனம் என்றால் என்ன்.?


மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
 
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.

இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.

ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.

ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.

3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.

4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.

5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,

6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.

இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.

ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.

இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.

ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.

ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.

மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.

ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.

இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.

குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.

ஆகவே தான் மனிதப்பிறவியில் அதே நிலையில் இருப்பதால்தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்து விடுமாம்...


மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால்
கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’
விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச் சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம்.

இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது.

அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக
இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும்
ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்.

அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து விடும் என்று நம்பப்படுகிறது.

அந்த நாளில் இந்த உலகமும் அழிந்து விடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது...

மருத்துவ மாப்பியா - தடுப்பூசி உண்மைகள்...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 10...

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 10-ம் பகுதியாகும். இது பல்வேறு குறிப்புகள் அடங்கிய தீர்க்கதரிசனப் பகுதியாகும்.


இந்த 10-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்கத்தரிசனம் என்னவெனில் தமிழகத்தில் இயற்கையின் சீற்றங்கள் 90% இருக்கும் எனவும், இது வடதமிழகம், தென்தமிழகம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் புயல், மழை, சூறாவளிக் காற்று, கடல் சீற்றம் என இருக்கும்படி அமைய உள்ளதாக இந்த 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



மலேசியா நாட்டில் வரலாறு காணாத அளவில் மழை பொழிந்து பலத்த சேதங்களை அங்கு ஏற்படுத்தும் என்றும், இது ஒரு வரலாற்று சோகம் போல் அமையும் என சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



அமெரிக்க நாட்டில் வரலாறு காணாத அளவு மழையும், பனியும் இருக்கும் எனவும், கடல் பொங்குதல் போன்ற நிகழ்வுகள் இனி அங்கு அதிகமாக காணப்படும் என்றும், மக்களின் இறப்பு சதவீதம் அங்கு அதிகமாக காணப்படும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


உக்ரைன் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்பட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


தமிழக அரசியலில் இனி பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும் என்றும், தமிழக நடிகர்களின் பங்கீடுகள் அதிகமாகவே காணப்படும் என்றும், இதனால் நாட்டு மக்கள் வேதனைப்படும் அளவிற்கு கூச்சல், குழப்பங்கள் தற்போது நிலவ உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் தமிழகத்தின் அவல நிலையை படம்பிடித்து காட்டுகிறது.

பாமரனும் பதவி ஏற்கும் ஆசையில் பல வினோத கருத்துகளை இணையதள வாயிலாக அறிக்கைவிடும் படுகேவலமான அவல நிலை இனி தமிழக அரசியல் களத்தில் நிகழ உள்ளதாகவும், இனி தமிழகத்தில் புதுப்புது கட்சிகள் நிறைய உதயமாகிட உள்ளதாகவும், இதனால் உலக மக்களே தமிழகத்தை திரும்பி பார்க்கும்படி பல மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


வரும் ஆவணி மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக தமிழக மக்கள் எண்ண வேண்டும் என்றும், இந்த மாதத்தில் தமிழகத்தில் பல தெய்வீக அதிசய நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்க இருப்பதாக தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.


மும்பை மிகுந்த மழை சேதங்களை சந்திக்க உள்ளதாகவும், 35 % வீதம் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை இழக்கும் சூழல் உருவாக இருப்பதாக நமது சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.


இனி தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தற்போது வரக்கூடிய “சத்திய யுகத்தை“ பற்றி விளக்கங்கள் கூறும் கல்வெட்டுகளாக இருக்கும் என 10-ம் தீர்க்கதரிசனம் இங்கே தமது கருத்தை பதிவு செய்கிறது.


பதஞ்சலி எனும் அமைப்பு இனி மக்களால் அடையாளம் காணப்படும் என்றும், அதனுடன் கைகோர்த்துள்ள பிற அமைப்புகளைப் பற்றி குறிப்புகள் இனி செய்தி ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிடுவார்கள் என்றும், இதனால் இந்திய தேசத்தில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாக இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


வீர மன்னன் சிவாஜி வாழ்ந்த ஊரில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்படும் என்றும், அக்கல்வெட்டில் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும், அதில் மிகப்பெரியதாக ஒரு குறியீடு இருக்கும் என்றும், அது ஆதிசக்தியின் இரகசிய குறியீடாக அமைந்திருக்கும் என்றும், அதனை மக்கள் இனி எங்கு, இந்த குறியீடு காண முடியும் என்று தேடுவார்கள் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சோழவந்தான் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு இனக்கலவரங்கள் அதிகம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


ஜப்பான் நாட்டில் ஆழிப்பேரலைகள் தாக்கும் மிக கொடுரமான சோகச் சம்பவம் ஒன்று தற்போது ஏற்பட போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கோடைவாசஸ்தலம் ஒன்று மிகப்பெரிய பூமி அதிர்வால் பூமிக்குள் அமிழப் போவதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தெரிவிக்கின்றது.


மரித்தவர், எழுந்தவர், தோன்றியவர் என்ற சொற்களுக்கு (அடைமொழியாக) உரிய இயேசுவின் இரண்டாம் வருகை தமிழகத்தில் தான் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒரு விஷயம் என்றும், இது மிக, மிக அருகில் நடக்கும் ஒரு சுப நிகழ்வு என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடல்கன்னிகள் என்ற கதாபாத்திரங்கள் நிஜம் என்று நிருபிக்கும் வகையில் இந்த கடல்கன்னிகளை மக்கள் தங்களது புறக்கண்களால் காணும் பாக்கியத்தை அடைவார்கள் என்று 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.  கடல்கன்னிகள், அரிய கடல்வாழ் உயிரினங்கள், அவைகளின் வசிப்பிடங்கள் போன்ற செய்திகள் இனி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் சமயத்தில், வேற்று கிரகவாசிகள் இம்மண்ணில் நிலையாக இறங்குவார்கள் என்றும், இதனால் இப்பூமி பல வியத்தகு ஆச்சர்யங்களை சந்திக்க உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட தனது கருத்தை எடுத்துக் கூறுகிறது.


அலவாய் மலை இனி பிரசித்திப் பெறும் என்றும், அம்மலையில் சித்தர்களின் நடமாட்டத்தை இனி பல மக்கள் காண்பார்கள் என்றும், “குதம்பை“ எனும் சித்தரின் அற்புதங்கள் அங்கு இனி வெளிப்படும் என்றும், பல பக்தர்களுக்கு அவரின் தரிசனம் கிட்ட உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


குதம்பை சித்தரின் பிரவேசம் சேலம் மலைத்தொடர்களில் இனி அதிகமாக இருக்கும் என்றும், மலைகளில் உள்ள தெய்வீக தன்மைகளை மக்களுக்கு இவர் வழிமூலமே இனி தெரியவரும் என்றும், இது சத்திய யுகத்திற்கான வேலையாக மக்கள் கருத வேண்டும் என 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.



கன்னியாகுமரி, வேதாரண்யம், விசாகப்பட்டினம் போன்ற கடல் சார்ந்த ஊர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று 10-ம் தீர்க்கதரிசனத்தின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


இறைவன் இடம்பெறும் அந்த இறுதி சபையில் இறைவனின் அற்புதங்களை மக்கள் காணும்படி பல அதிசய சம்பவங்கள் துவங்கிட இருப்பதாகவும், அது துவங்கும் சமயத்தில் சென்னையில் உள்ள “மெரினா பீச்“ பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அது ஒரு வரலாற்றை பதிய வைக்க இருப்பதாக சத்திய யுகத்தின் 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய இறை சார்ந்த குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

மன்னர்கள் ஆண்ட இப்பூமியை இனி மன்னர்கள் போன்ற மக்கள் ஆள்வார்கள் என்றும், அவர்களை இறைவனே தேர்ந்தெடுத்து அரியணையில் அமர வைத்து ஆட்சி செய்யும் பொற்காலம் இப்பூமியில் விரைவில் வந்துவிடும் என்றும், இனி இப்பூமியில் இறைவனின் இறையாட்சி துவங்கிட இருப்பதாகவும், அதன் தூதுவராக ஒரு யோகா அமைப்பு தமிழகத்திலிருந்து செயல்படும் என்றும், அதற்கு அறிகுறியாக இனி தமிழகத்தில் மழை அதிகமாக பெய்யும் என்றும், இனி காவேரியின் வரலாறு தமிழகத்தில் மட்டுமே பேசும் அளவிற்கு அமைய உள்ளதாக 10-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


கடலோர மாவட்டங்களுக்கு பலத்த கனமழை எச்சரிக்கைகள் தரப்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், மரணத்தின் ஓலம் மிகுந்த உச்சத்தில் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசன குறிப்புகள் நமக்கு வரக்கூடிய பேராபத்துகளை சுட்டிக் காட்டுகின்றன.


வரக்கூடிய “மாசி“ மாதம் மிகுந்த மாற்றங்களை தமிழகத்தில் உருவாக்கும் என்றும், தமிழனின் பெருமைமிக்க ஆட்சியை இறைவன் இப்பூமியில் அமைக்கும் துவக்க காலமாக அக்காலம் இருக்கும்மென 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

இனி புண்ணிய ஷேத்ரங்கள் யாவும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும், அதற்கான நிகழ்வுகள் இனி ஒவ்வொன்றாக துவங்கிட இருப்பதாக 10-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


புகழ்மிக்க ஒருவனின் வருகை இந்தியாவில் தற்போது நிகழ இருப்பதாகவும், அவனின் வருகையை மக்கள் எதிர்நோக்கும் இக்காலமே சத்திய யுகம் என்றும் அதனை காண நாமும் காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...