30/04/2018

புதிய கட்சிகள்/தலைவர்களின் கவனத்திற்கு...


1. மனதை கவரும் செயல்பாட்டு வரைவுகளை (தேர்தல் வாக்குறுதி) மக்களிடம் கொண்டு செல்வதால் மட்டும் பயனில்லை..

2. அதில் குறிப்பிட்டதை நிறைவேற்ற கால அவகாசம் எவ்வளவு தேவை என்பதையும், அதற்குள் நிறைவேற்றாவிட்டால் உமது ஆட்சியை தூக்கி எறிவது எப்படி என்பதையும் குறிப்பிடவும்..?

3. தயார் எனில் அதற்கான உறுதிமொழி பத்திரத்தை வாக்கு சேகரிக்கும்போது கொடுக்க முடியுமா..?

4. ஆட்சியை பிடித்தவுடன் உமது/உமது ஆதரவாளர்களின் நிலை மாறினால் என்ன தண்டனை கொடுப்பது..!

5. எந்த ஒரு திட்டத்தையும் தொடங்குமுன் (ரூ.1 முதல் பல ஆயிரம் கோடிகள் வரை) மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றால் மட்டுமே நிறைவேற்றுவது..

6. உமது வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வாழ்வில் ஒருமுறைக்கு மேல் (5 வருடங்கள்) அரசியல்வாதியாக பதவி வகிக்க கூடாது..

7. வருட வருமானம் 3 லட்சத்திற்குள் இருப்பவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்..

8. முந்தைய ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி அவர்களை சிறையில் அடைக்க தயாரா..? இதை செய்தாலே பல ஆண்டுகளுக்கு வரி வசூலிக்காமல் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும்.

9. அல்லது சிலநூறு கோடிகளுக்கு நீயும் விலை போய் விடுவாயா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.