30/04/2018

Gaia Spacecraft...


நாம் இருக்கும் பால்வெளி மண்டலத்தின் மிகதுல்லியமான, தெளிவான 3Dimension கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்க தயார் ஆகிவிட்டனர் விண்வெளி ஆராய்ச்சியாளார்கள். 

European Space Agency[ESA] ஆனது கைய [Gaia] என்னும் செயற்கைகோளை வெற்றிகரமாக டிசம்பர் 19,2013 அன்று விண்ணில் ஏவியது, அது நிர்ணயிக்கப்பட்ட தனித்துவமான L2 என்னும் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக ஜனவரி 8,2014 ல் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இப்போது Gaia செயற்கைகோள் எதற்க்காக அனுப்பபட்டது ? அதன் வேலை என்ன என்பதை முழுமையாக பார்ப்போம்.

முன்பு கூறியது போல் பால்வெளி மண்டலத்தின் மிகதுல்லியமான, தெளிவான 3Dimension கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்க மற்றும் இது பால்வெளியில் உள்ள ஒரு பில்லியன் [10^9]  நட்சத்திரங்கள், கோள்கள், எரிகற்கள் போன்றவற்றின் தொலைவு, சுழற்சி, இயக்கம், திசைவேகம், ஒளிர்திறன், வெப்பநிலை, ஈர்ப்பு போன்ற பல தகவல்களை அறியவும் அவற்றை ஒரு கட்டமைப்பாக வகைப்படுத்தவும் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் தனிசிறப்புகள்...

1. இந்த space craft ஆனது பூமியிலிருந்து விலகி தனித்துவமான L2 [Lissagous] என்ற சுற்றுவட்ட பாதையில் 45 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது [படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது ].

2. இது ஐந்து வருடங்களில் சுமார் 1.3 பில்லியன் நட்சத்திரங்களை ஆராயவுள்ளது

3. இது ஓவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டதட்ட லட்சம் நட்சத்திரங்களை அளவிட கூடியது மற்றும் இது மொத்த வெளியும் இரண்டு மாதங்களில் ஆராயகூடியது.

4. இதில் உள்ள தொலைநோக்கியானது [Telescope] 30,000 ஒளியாண்டு தூரம் உள்ள நட்சத்திரங்களை மிக துல்லியமாக ஆராயகூடியது.

5. இது ஐந்து வருடங்களில் தனது ஓவ்வொரு இலக்கையும் 70 முறை ஆராய்ந்திருக்கும்.

6. இவை ஆராயும் அளவிடானது பால்வெளியின் ஒரு சதவிகிதம் மட்டுமே [1%]. 

Gaia என்னும் இந்த Spacecraft  ஆனது பால்வெளி அண்டத்தின் கட்டமைப்பு வரைபடத்தை உருவாக்கும் ஆரம்ப அடித்தள மட்டுமே இன்னம் பல ஆய்வுகள் செய்ய உள்ளனர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.