01/07/2018

வணிகப் போர் - 4...


பேய்கள் பற்றிய பல உண்மைகள் -பயபடாதிங்க...


மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?

பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

தனி மனிதனாக நின்று மக்களை விழிப்படையச் செய்ய முயன்றவன் மைக்கேல் ஜாச்சன்...


முடி வளர சித்த மருத்துவம்...


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்...

வணிகப் போர் - 3...


பெண்களுக்கு பாதுகாப்பில்லாத பட்டியலில் இந்தியா ஏன் முதலிடமாக காட்டப்படுது ?





மேலும் சன்டிவி விஜய்டிவி மூலமாகவும் இவை திணிக்கப்படுகின்றன...

குடிப்பழக்கத்தால் ஒட்டு மொத்த குடும்பத்தையே விற்ற நபர்.. சொந்த அண்ணனுக்கு மனைவி, மகள்களை விற்றார்...


ஆந்திராவின் கர்னூல்  மாவட்டம் கோயிலகுண்ட்லா பகுதியை சேர்ந்தவர் பசுபுலேதி மட்டிலேட்டி. இவரது மனைவி வெங்கடம்மா. இவர்களுக்கு  5 மகள்கள். 

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு பசுமலேதி மட்டிலேட்டிக்கு ஏற்பட்ட குடிபழக்கத்ததால் நாசமானது. குடிப்பழக்கத்திற்கு ஆளா£ன மட்டிலேட்டி தனது 10 வயது மகளை உறவினர் ஒருவருக்கு 1.5 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

அதாவது தனது மகள் பெரியவளானதும் உறவினருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். இது குறித்து குடும்பத்தார் யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் கடந்த மாதம் தனது சொந்த அண்ணனுக்கு மனைவி மற்றும் 4 மகள்களை 5 லட்சத்திற்கு விற்றுள்ளார். கடந்த மாதம் மட்டிலேட்டியின் அண்ணன் வந்து மனைவி மகள்களை விற்றது குறித்து முறைப்படி பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும் என கேட்டபிறகுதான் இந்த விஷயமே குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வெங்கடம்மா தனது மகள்களை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்று கொள்ளவில்லை. இதனால் அவர் ஐசிடிஎஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. போலீசாரும் இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்...

வணிகப் போர் - 2...


என்ன செய்தும் தூக்கி நிறுத்த முடியவில்லை.. பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியில் சரிவு...


பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் எதிபார்த்து காத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு அந்த எதிர்பார்ப்பு எல்லாமே புஸ்வானமாகி விட்டது. டல்லடிக்கும் நிகழ்ச்சியை என்ன செய்தும் தூக்கி நிறுத்த முடியவில்லை.

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியில் உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. ஆனால் இந்த முறை டிஆர்பியில் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்த தவிற விட்டது. கடந்த ஞாயிற்றுகிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் விஜய் நடித்த தெறி படம் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அந்த தொலைக்காட்சிதான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்ததாக புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது. இதனால் விஜய் டிவி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது...

தமிழினத்தை உரிமை பறிப்பு...