12/08/2018

அரசியல் தலைவன் எனும் பிராடுகள்...


புளூவேல் போய் மோமோ வந்துள்ளது...


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இளளஞர்கள் மத்தியில் பரவிய ஒரு ஆபத்தான விளையாட்டு புளூவேல் என்பது தெரிந்ததே...

இந்த விளையாட்டில் தமிழகத்தில் கூட ஒருசில தற்கொலை மரணங்கள் ஏற்பட்டது. தற்போது இந்த விளையாட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான தற்கொலை விளையாட்டு ஒன்று உலகின் முன்னணி நாடுகளில் வைரலாகியுள்ளது மோமோ விளையாட்டு என்பது ஆன்லைனில் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும்.

அதன்பின்னர் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் நுழைந்த யாரும் வெளியே வரமுடியாது.

அப்படி வெளியேற முயற்சித்தால் அவர்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் அவர்களுடைய மொபைலுக்கு மெசேஜ் வரும்.

அதுமட்டுமின்றி இந்த விளையாட்டில் உள்ளே நுழையும் போது பதிவு செய்யப்பட்ட விளையாடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் பயமுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு வந்த மிரட்டல் காரணமாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுகுறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்த சேலஞ்ச் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதாகவும், இந்த விளையாட்டை உடனடியாக முடக்கி இளைஞர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்...

நெகிழி (பிளாஸ்டிக்)ஆலைகளை ஒழிக்காமல் நெகிழி ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பே...


அரசாங்கம் மக்களுக்கு தடை விதிப்பது போல, நெகிழி உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு கெடு விதித்து தடை செய்ய முயற்சியாவது எடுக்குமா?

பாஜக மோடியின் ஸ்வெச் பாரத் வியாபாரம்...


வன்மம் எனப்படுவது யாதெனில்...


காலையில் தினத்தந்தியில் திருமுருகன் கைது செய்தியை படித்தபோதே அவ்வளவு ஆத்திரமாக இருந்தது.

ஒரு செய்திக்குள் ஒளிந்திருக்கும் வன்மம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு இந்த செய்தியை உதாரணமாக சொல்லலாம்.

இந்த செய்தியில் இருக்கும்.. `தலைமறைவாக இருந்தவர்.. சிக்கினார்...’ போன்ற வார்த்தைகளை கவனியுங்கள்..

அந்த வார்த்தைகள் உருவாக்கும் தோற்றத்தை உள்வாங்கினால்.. திருமுருகன் காந்தி ஒரு மாபெரும் ரவுடி.. அல்லது மக்கள் பணத்தை ஆட்டையப் போட்டு விட்டு தலைமறைவாக இருந்தவர் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

தினத்தந்தியின் நோக்கமும் அதுதான்.

திருமுருகன் அரசியல் மீது நமக்கு கருத்தியல் உடன்பாடு இருக்கலாம்.. முரண்பாடு இருக்கலாம்..

ஆனால் மக்களுக்காக களத்தில் வேலை பார்க்க கூடிய ஒரு இயக்கத்தை வழிநடத்தக் கூடியவர்.

அதுவும் நாசகார ஸ்டெர்லைட் குறித்தும் அதற்காக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்தும்.. சேலம் எட்டு வழிச்சாலை மக்கள் எதிர்ப்பு குறித்தும் ஐநா.வில் பேசிவிட்டு இந்தியா வரும்போது கைது செய்திருக்கிறது போலீஸ்.

தேசத்துரோக வழக்கில் தலைமறைவாக இருந்தவராம்..

தலைமறைவாக இருக்கும் வார்த்தைக்கு பொருள் தெரியுமா.. தெரியாதா..

கடந்த மே மாதத்தில் இருந்து ஜெனிவாவில் இருக்கிறார் திருமுருகன். அங்கு ஐ.நா. மனித உரிமை கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்..

தலைமறைவாக இருப்பவர் செய்யும் வேலையா இது..

ஆக.. தினத்தந்திக்கு இதெல்லாம் தெரியாமல் எழுதுவது இல்லை.. இந்த செய்தி திருமுருகன் மீதான வன்மத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.

2009 ஈழப்படுகொலைக்குப்பின் தீவிர அரசியல் களத்திற்கு வந்திருக்கும் இன்றைய தலைமுறை இயக்க செயல்பாட்டாளர்களில்.. வெறுமனே.. ஏ.. வந்துப்பார்.. என்றெல்லாம் சவுண்ட் விடாமல் தர்க்க ரீதியாக ஆதாரங்களுடன் விவாதம் செய்வதில் திருமுருகன் முக்கியமானவர்.

எதிரியை அவன் பயன்படுத்தும் அதே யுக்த்தியை கொண்டு எதிர்கொள்வது மிக முக்கியமான அரசியல் பணி. அதை திருமுருகன் செய்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை இத்தனை உயிர் பலிகளுக்குப்பின்னரும் மீண்டும் இயக்கப்படுவதற்கான காய் நகர்த்தல்கள் தென்படுகின்றன.. ஆலையின் நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த புள்ளியில் இருந்துதான் நாம் இந்த செய்தியை அணுக வேண்டும்.

தினத்தந்தியின் இந்த வன்மத்திற்கு காரணம் ஸ்டெர்லைட் காரன் தூக்கிப்போடும் விளம்பரம் எனும் எலும்புத்துண்டுகளும் காரணமாக இருக்கலாம்...

- கார்ட்டூனிஸ்ட் பாலா...

கன்னட கமலும் ஏமாற்று வேலையும்...


சர்வதேச சிலை கடத்தல் கும்பல் அரசியல்வாதிகள்...


இப்போது புரிந்திருக்குமே காய்கள் ஏன் நகர்த்தப்படுகின்றன என்று...

இதே வாய் பொன் மாணிக்கவேல் வேண்டும் என்று கூறியது..

தற்போது மெயின் இடத்தை ஆட்டுவது தி.மு.க-வைகோ பதைபதைக்கிறது...

மேகதாது அணை: கர்நாடகத்தின் தூதராக மத்திய அரசு செயல்படுவதா - பாமக அறிக்கை...


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும்  பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார்  நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின்கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருப்பவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில அமைச்சர்களையும் அழைத்துப் பேசுவது நியாயமானதாக இருக்காது. ஏனெனில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள அமைச்சகம் நீதிபதி நிலையில் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான அனுமதி கோரும் மனுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவுடன், மேகதாது அணை கட்டுவதற்கான தமிழகத்தின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்தால், அதை ஏற்று அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கலாம்; இல்லாவிட்டால் மனுவை திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு எதையும் மத்திய அரசு செய்ய முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி கொடுங்கள் என்று தமிழகத்திடம் கூறவோ அல்லது இதுதொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவோ மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு  தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 09.06.2015 அன்று உமாபாரதி  எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கியிருந்தார்.

‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பிய போது அதனுடன் தமிழகத்தின் அனுமதி இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது’’  என்று உமாபாரதி கூறியிருந்தார். உமாபாரதியின் இந்த விளக்கம் அமைச்சர் கட்கரிக்கும் பொருந்தும்.

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இருப்பவர் நீதியின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஒரு தரப்பு கேட்டுக் கொண்டதற்காக இரண்டாம் தரப்பை அழைத்து நீதிபதி பேச்சு நடத்த முடியாது. அதேபோல் தான் மேகதாது அணை விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிதின்கட்கரி, கர்நாடகத்தின் பக்கம் நின்று மேகதாது விவகாரத்தில் பஞ்சாயத்து பேச தமிழகத்தை அழைக்கக்கூடாது. அது அநீதி. கடந்த காலங்களில் தமிழகம் வறட்சியில் தவித்த போது, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்  என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும்படி கர்நாடகத்தை அறிவுறுத்தாத, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முன்வராத நிதின் கட்கரிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க எந்த உரிமையும் இல்லை.

அதுமட்டுமின்றி,கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும். இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு,  ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்...

தற்சார்பை பற்றிய விழிப்புணர்வு சொல்வதால் மட்டுமே ஒன்றும் நடந்து விடபோவதில்லை...


தற்சார்பை நோக்கி பயணிக்கும் அனைவருமே இதை போல் வாய்ப்பு கிடைத்தால் உங்களால் முடிந்தளவு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

ஏளனம் செய்வார்களே என்று என்ன வேண்டாம், அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்து செயலாற்றுங்கள்...

சக்தி - THE POWER...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெறமுடியும் என்கிறார் ரோண்டா பைர்ன்.

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனத்தில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதை மட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக்கொண்டுவருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு ரோண்டா மூன்று சாவிகளைச் சொல்லித்தருகிறார். அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டைமட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுடகுலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வ தென்றால், சும்மா பூந்து விளையாடுங்க.

சிறுவயதில் நாமெல்லாம்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால்தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக்கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓடவிடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது பைபிள். நம் ஊரிலும் ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்று ஒரு வாசகம் உண்டு.

ரோண்டா பைர்ன் சொல்லும் மகாசக்தி எது என்று நமக்குப் புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று நமக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...