13/09/2018
திருட்டு திராவிடர்ஸ்...
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ்மொழிக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இன்று ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்த் தோற்றத்தைத் தமிழகத்திலே உருவாக்கி வந்தனர்.
இன்னும் உருவாக்கி வருகின்றனர்...
ஆனால் ‘தமிழர் தலைவர்’ என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரை சொல்கின்றார்களே – அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா?
கண்ணப்பர் தெலுங்கர், நான், கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (ஆனால் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர்) (பெரியார் ஈ.வே. ரா. சிந்தனைகள் – முதல் தொகுதி).
என்றும்,
நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன் (குடியரசு 22.08.1926).
என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
‘நான் கன்னடியன்’ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக் கொண்டவரைத்தான் ‘தமிழர்’ என்றும், ‘தமிழர் தலைவர்’ என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்...
முதுமையை போக்கி என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.
உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.
எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.
நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே..
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.
கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...
இன வெறிக் கொள் தமிழா...
பிற மாநில மொழிப் பற்றாளர்கள் அவர்கள் மாநில வங்கியில் பணம் செலுத்தும் போது அவர்களின் மொழியில் படிவத்தை நிரப்புகிறார்கள்..
இதில் என்ன அதிசயம் உள்ளது என்று நினைகிறீர்கள் அல்லவா?
ஒரு உதாரணம் கர்நாடக மாநிலம்...
அவர்கள் எழுத்துக்களை மட்டும் கன்னடத்தில் எழுதவில்லை.
வங்கிக் கணக்கு எண்ணையும் கன்னடத்தில் எழுதி உள்ளதை கவனியுங்கள்...
தமிழகத்தின் இந்தி வங்கிகளில் தமிழில் படிவத்தை நிரப்பிக் கொடுத்தாலே நம்மை ஏற இறங்க பார்க்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.
இந்த நிலையில் நாம் தமிழில் எண்களை நிரப்பினால் நம் படிவத்தை வாங்கவே மாட்டார்கள் வங்கி அதிகாரிகள்.
ஆனால் கர்நாடகத்தில் அந்த வங்கிப்படிவத்தை வாங்கிக் கொண்டு ஒப்புதலும் கொடுத்துள்ளது வங்கி.
கர்நாடகம் அல்லது தமிழகம், எந்த தேசமாக இருந்தாலும் இந்தி அரசு அலுவலகங்களில் அவரவர் மாநில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்யாதவரை இந்தியின் ஆதிக்கம் தொடரும்.
இது போன்ற செய்கைகள் மூலமாக நாம் நமது மொழி மற்றும் மாநில உரிமையை நிலைநாட்டலாம்...
உங்களுக்கு vanta black என்றால் என்ன தெரியுமா ?
பொதுவாக நமக்கு நிறங்களை பற்றி ஒரு குறிப்பிட்ட விஷயம் தெரியும்.
(அல்லது சிலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம்) அதாவது உண்மையில் நாம் என்ன பொருளை என்ன நிறத்தில் பார்க்கிறோமோ உண்மையில் அந்தப் பொருள் அந்த நிறம் கொண்டது அல்ல.
உதாரணமாக ஒரு நீலநிறத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அந்த பொருள் நீல நிறத்தை தவிர மற்ற அனைத்து நிறத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு நீலத்தை மட்டும் நமது கண்களுக்கு பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.
ஒரு பொருள் எந்த நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த பொருளை நாம் வெள்ளை நிறத்தில் காண்போம்.
ஒரு பொருள் அனைத்து நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றால் அதைதான் நாம் கருப்பு நிறமாக காண்போம். நாம் காணும் அனைத்து கருப்பு நிற பொருட்களும் ஒளியை உள்ளே இழுத்து கொள்பவை தான் ஆனால்... அது 100 சதம் அல்ல..
எப்பேர் பட்ட அடர்த்தியான கருப்பு நிறமும் கொஞ்சம் ஒளியை நமக்கு மிச்சம் அனுப்புகிறது ஒரு பொருள் கிட்ட தட்ட 100 சதம் ஒளியை உட்கிறகித்தால் அது எப்படி இருக்கும்.
அந்த பொருள் தான் vanta black.
1000 வாட்ஸ்.. மிக பிரகாசமான விளக்கை இதன் மேல் பாய்ச்சினாலும்..
இதை வெளிச்சமிட்டு பார்க்க முடியாது..
எவ்ளோ பளிச்சிடும் ஒளியையும் உள்ளே இழுத்து குடித்து..... பார்க்க ஒரு குட்டி பிளாக் ஹோல் ஐ கையில் பிடித்திருபது போல இருக்கும்.
அப்படி ஒரு அடங்காத கருப்பு.
இது தன் மீது விழும் ஒளியில் 99.96 சதம் உள்ளிழுத்து கொள்ளும்.
ஒரு பிளாக் ஹோல் பார்க்க எப்படி இருக்கும் என்பதை பார்க்க மாடலாக இதை வைத்துக் கொள்ள முடியும்.
VAnta black என்பது " Surrey NanoSystems Limited " வைத்த ஒரு ட்ரேட் மார்க் பெயர். இதை தயாரித்தது அந்த பிரிட்டிஷ் நிறுவனம் தான்.
உண்மையில் அது என்ன பொருள்.. ??
"hollow carbon tubes " களால் நெருக்கமாக பின்ன பட்ட ஒரு பொருள் தான் இந்த vanta black.. என்ன ஒன்னு ஒவொரு டியுபின் அகலமும் கிட்ட தட்ட ஒரு அணுஅளவு மட்டும் தான். (அதாவது ஒரு சதுர சென்டிமீட்டரில் 1000 மில்லியன் நேனோ டியுப்கள் இருக்கும்.) இந்த டியூப்களில் ஒளி படும் போது அவைகள் ஒரு முடிவில்லாத பொறியில் சிக்கி வெளியே வர முடியாமல் வெப்பமாக மாறுகின்றன. உள்ளே போகும் ஒளி வெளியே வருவதே இல்லை. எனவே உண்மையில் இது ஒரு நிறம் அல்ல.. மாறாக நிறம் ஏதும் அற்ற நிலை.
இதன் சூட்சுமம் இதன் கட்டமைப்பில் இருக்கிறது என்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் இதை எப்படி வர்ணிக்கிறார்கள் என்றால்
" நீங்கள் ஒரு கோதுமை வயலில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த கோதுமை செடிகள் மூன்று நான்கு அடி உயரம் இல்லாமல் கிட்டத்தட்ட 10,000 அடி உயரம் இருந்தால் எப்படி இருக்கும் அப்படி தான் இதன் டியுப்கள் நெட்டுகுத்தாக மிக நீண்ட அமைப்பாக அடுக்க பட்டுள்ளது "
இதை சாதாரண பெயிண்ட்டை போல தொட முயற்சித்தாலோ அல்லது பொருளில் பூச முயற்சித்தாலோ.. இது இதன் தன்மையை இழந்துவிடுகிறது.
எனவே இதை பூச நிபுணர்களின் உதவி தேவை.
( சரி விலைக்கு வாங்கலாம் என்று பார்த்தால் இதன் விலை தங்கம் மற்றும் வைரம் இவை இரண்டையும் சேர்த்து அதைவிட அதிகம்)
ஆனால் சுவிஸ் வாட்ச் கம்பெனி நிறுவனம் ஒன்று லிமிடெட் எடிஷனாக ஒரு வாட்சை தயாரித்தது அதில் டயல் பின்னணி கருப்பு நிறம் vanta black ஆல் செய்ய பட்டது. அந்த கடிகாரத்தில் முட்கள் பின்னணி அற்ற அந்தரத்தில் மிதப்பது போல இருந்ததாம்.(அந்த வாட்ச் இன் விலை நம்ம ஊர் கணக்குக்கு கிட்ட தட்ட 50 லட்ச ரூபாய் )
சரி இதை எதற்காக தயாரித்தார்கள் இதன் பயன்பாடு தான் என்ன ??
இவற்றின் முக்கிய பயன்பாடு விண்வெளி ஆய்வாளர்களுக்கானது
அவர்கள் பயன்படுத்தும் டெலஸ்கோப்பில் உள்பகுதியில் இதை பூசுவதன் மூலம் டெலஸ்கோப்பில் கிடைக்கும் ஒளி விண்வெளியில் இருந்து தான் கிடைத்தது பக்கத்தில் ஏதும் இடையில் நுழைந்த ஒளி அல்ல என்பதை உறுதி செய்ய உதவுகிறது.
மேலும் சில சக்திவாய்ந்த கேமராக்களை உருவாக்க இதைப் பயன்படுத்த முடியும்.
அதன் வீடியோ காண லிங்க்...
https://youtu.be/DI7tLclZyrE
வேற்றுகிரகவாசி உண்மைகள்...
நமது கடவுள்கள் ஏன் வெளிக்கிரக வாசிகளாக இருக்கக்கூடாது? அவர்கள் நம்மைவிட தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அறிவியல் மேதைகள். சில உள்கிரக பிரச்சினைகளாலும் , அறிவியலில் பெற்றிருந்த மாபெரும் வளர்ச்சியாலும் , தேடல் ஆர்வத்தாலும் (நம்மைப்போலவே) மானுடக்கிரகத்தை தேடி தேடி ஏன் அறிந்திருக்க கூடாது?
ஹரப்பா மக்கள் நம்மை விட அறிவியலிலும், விண்ணியலிலும் வளர்ச்சியடைந்து இருந்தனர்.
அவர்களின் நகர அமைப்பு பிரமிக்க வைக்கிறது.
மாயன் மக்களின் கிரக விண்ணியல் ஆய்வை பற்றி தனி பல்கலையே துவக்கலாம்.
இவர்களுக்கான விண்ணியல் அறிவை பிளீயட்ஸ் நட்சத்திர தொகுதியில் இருந்தது வந்த வேற்று கிரகவாசிகளினாலே பெற்றிருக்ககூடும்.
அவர்கள் வந்து சென்றதையும்,
அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அமைக்கப்பட்டதே இந்த பிரமிடு அமைப்புகள்..
மேலும் பூமியின் சகோதர கோள் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கும் இது பொருந்திப் போகிறது...
Subscribe to:
Posts (Atom)












