24/01/2019
10 சதவீத இட ஒதுக்கீடு பிப்ரவரி 1 முதல் அமுலுக்கு வருகிறது...
வருடத்திற்கு எட்டு லட்ச ரூபாய் குடும்ப வருமானம், 5 ஏக்கர் நிலம், ஆயிரம் சதுரஅடி வீடு - இவை எல்லாம் புதிய ஏழைமை வரையறை.
தனிநபர் வருமான வரி வரம்பு என்பதே 2.5 லட்சம் தான்.
வாங்க ஏழைகளா.. வாங்க...
குஜராத்தில் பாரதிய ஜனதாவும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி விட்டன.
திமுக-காங் கூட்டு. அதிமுக-பாஜ கூட்டு=திமுகவும் அதிமுகவும் கூட்டணி ?
இந்த நிலையை மாற்றி நமக்கு நன்மை கிடைக்க தமிழக அரசு யாகம் மூலம் முயற்சிக்கிறது... சுத்தம்...
நான் கூற வருவதை அனைவரும் புரிந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்...
நம் உரிமைக்காக நம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுகிறோம் அல்லவா, அதுதான் தமிழ் தேசிய அரசியலின் தொடக்கம்..
ஒரே நோக்கத்தில் தமிழ் தேசிய நாம் பேசும் வரை அவர்கள் நம்மை பலவிதமாக பிரித்துக் கொண்டே இருப்பார்கள்...
நாம் என்றைக்கு களத்தில் இறங்கினோமோ, அன்றைக்கு தமிழ் தேசிய அரசியலின் விதை விதைக்கப்பட்டு விட்டது..
ஏனெனில் நாம் போராடிய எந்த போராட்டத்திற்கும் திராவிடமும் வரவில்லை, மற்ற எந்த கட்சிகளும் வரவில்லை...
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத சீ(ஜி)வ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி...
எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது. அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.
எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன.
எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.
விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...
1.கேளுங்கள் (ASK).
2.நம்புங்கள் (BELIEVE).
3.பெறுங்கள் (RECEIVE).
1. கேளுங்கள் : உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும் போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.
2. நம்புங்கள் : கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.
கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.
3. பெறுங்கள் : வேண்டும் என்று விரும்புபவற்றிக்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்
வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவது தான் அக்க்காட்சிப் படைப்பாகும். . அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.
மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...
Subscribe to:
Posts (Atom)









