02/04/2019
மன்னா ( Manna) வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
'மன்னா'(Manna) என அழைக்கப்படுவது. விண்ணிலிருந்து பொழிந்த ஒரு மர்மமான உணவுப்பொருளாகும், இது கடவுளால் அனுப்பப்பட்டு, யாத்திராகமத்தின் கடைசி நாற்பது வருட காலப்பகுதியில் பாலைவனப் பயணத்தின் போது இஸ்ரவேலருக்கு உணவாக கொடுக்கப்பட்டது.
இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் சினாய் பாலைவனத்தை கடக்க வேண்டியிருந்தது. நிறைய இஸ்ரவேலர்கள் வேறு இருந்தனர், இந்த கட்டத்தில், மக்கள் பட்டினியால் மடிவதை தடுப்பதற்காக,அவர்களின் கடவுள் மன்னாவை பரலோகத்திலிருந்து பூமியில் அனுப்பினார். சனிக்கிழமை தவிர, ஒவ்வொரு நாளும் உணவை வழங்கினார் என்று கூறப்படுகிறது.
யாத்திராகமத்தின் விவிலியத்தில் கூறப்படுகிறது: ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் பனி தோன்றி மறைந்து, சூரியன் உஷ்ணத்தில் உறிஞ்சுவதற்கு முன்பு அதை சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் அது தேனோடு தயாரிக்கப்பட்ட பாசியை போல் இருக்குமாம். இது கடவுள் அனுப்பிய ஒரு உணவு இருந்தாலும் அது என்னவென்று சரியாக தெரியவில்லை.
ஆனால் சதி கோட்பாட்டாளர்கள்: இந்த மர்மமான உணவு ஆதாரத்தைப் பற்றியும் அந்த கடவுளை பற்றியும் யுதர்களின் புனித நூல்களான #சோஹார் #தோரா மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #மாய_கஸ்பலா ஆகியவற்றில் விளக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நூல்களில் அந்த உணவை வழங்கிய கடவுளை வர்ணிக்கும் போது பல்வேறு அளவிலான மூளை, வெவ்வேறு அளவிலான முகங்கள் மற்றும் ஒளி ஆதாரங்களுடன் இணைந்த வெவ்வேறு அளவிலான உடல் உறுப்புகள் என்றே விவரிக்கிறது.
இது கடவுள் பற்றிய ஒரு விளக்கமாக இருக்கிறது என்று போதித்த போதிலும்கூட, பண்டைய தத்துவவாதிகள், நவீன கண்ணோட்டத்தில், இது ஒரு கடவுள் உருவம் அல்ல, மாறாக இது ஒரு வகை இயந்திரம் என்று வாதிடுகின்றனர்: இவற்றில் மன்னா உணவு ஒரு கடவுளிடமிருந்து வந்த உணவு என்பதை விட, அது ஒரு இயந்திரம் உருவாக்கம் என்றே கூறுகின்றனர்.
மேலும் இந்த இயந்திரம் இஸ்ரேலியர்கள் எங்கிருந்து வந்ததது என்பதற்கான விளக்கங்களை சதி ஆலோசனை குழு அளிக்கின்றன. எகிப்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அதை அவர்களிடமிருந்து யூதர்கள் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. சரி இந்த இயந்திரம் எகிப்தியர்களுக்கு எப்படி கிடைத்தது.
முதலாவதாக நாம் அறிய வேண்டியது, #அக்னேடென் Akhenaten (ஆக்கியநாதன்) எகிப்திய பாரவோன்களிலே வித்தியாசமானவராக இருந்தார். நீண்ட மெல்லிய கழுத்து, நெற்றிக்கண், மற்றும் நீளமான மண்டை ஓடுகள் என்று. அவரது உடலின் ஒட்டுமொத்த விசித்திரமான வடிவம், அவர் நம்மிலிருந்து அன்னிய தோற்றத்தை இருப்பதையும். அவர் ஒரு வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
மேலும் "அக்னனேடன்" என்ற பெயர், "ஆவி உலக வாழ்க்கை" அதாவது "வேற்றுலக வாழ்க்கை" என்று எகிப்திய மொழியில் பொருள்படுகிறது. மேலும் சூரியனை போன்ற வட்டவடிவ ஒளி பிழம்பு ஒன்றை வணங்குவார். அது விண்ணில் தென்படும் மறைந்து விடும் என்றும், ஒருவேளை இந்த "வட்ட வடிவம்" ஒரு யுஎஃப்ஒ என்றும்,
அதனுள் உள்ள ஒரு பொருளின் ஆற்றலே அந்த ஒளிப் பிழம்பு என்றும் கூறப்படுகிறது. அது சூரியன் என்று எதிர் வாதம் செய்தாலும் அகேனெட்டன் அதைக் பூமிக்கு கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.!
அதாவது அவர் ஒரு விண்கலம் வைத்திருந்ததாகவும், மக்களின் கண்ணிலிருந்து மறையக்கூடிய அந்த விண்கலத்தினுள் உள்ள ஒஒரு பேழை இருந்ததாகவும், அதன் மூலம் பாலைவனத்தில் மழை பொழியச் செய்ததாகவும், செங்கடலையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த விண்கலம், ஒரு நகரும் மேகம் என்றே பைபிளில் விவரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மன்னா உணவும் அந்த பேழையின் ஆற்றலின் மூலம் வெளியிடப்பட்டது என்றும். அந்த இயந்திரத்தையே இஸ்ரேலியர்கள் அபகரித்து சென்றதாக Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் மன்னா உணப்பொருள்: உடன்படிக்கை பேழையில் உண்டாகும் ஒருவித அணுக்கரு ஆற்றலை மையமாகக் கொண்டு காற்றிலுள்ள ஈரப்பதத்தை, ஒருவித உண்ணத்தகுந்த பாசிகளாக மாற்றியதாக கூறப்படுகிறது. யூதர்கள் இஸ்ரவேலை அடைந்தபோது, மன்னா இயந்திரம் உணவை வழங்குவதற்கு இனி தேவைப்படாது என்று உணர்ந்து, சாலமன் ஆலயத்தில் உள்ள பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
பின்னர் ஆலயமானது பாபிலோனிய படையெடுப்பில் அழிக்கப்பட்டு பிறகு
பேழையானது எகிப்து கிசா பிரமிடில் தஞ்சமடைந்நிருக்கலாம்.! இதை கூற காரணம் முன்னர் ஒரு பதிவில் கிசா பிரமிடில் வெப்பம் அலை சிக்னல்கள் விண்ணிற்க்கு செல்வதை பார்த்தோம். பேழையின் ஆற்றல் மூலமே இது சாத்தியம். எனவே இது ஒருவேளை தங்கள் எஜமானர்களுக்கு இந்த கிரகத்தினை பற்றிய தகவல்களை அனுப்பும் இயந்திரமாகவே தோன்றுகிறது.
காரணம் இந்த பேழையின் பிரதிபலிப்பினாது. மனித இனத்தின் வளர்ச்சியடைந்து நாகரீகங்கள் முதல், பழங்குடியினர் வரை அனைவரிடமும் காணப்படுகிறது.
வேற்றுக்கிரகதின் ஒரு இனம். பேழையின் மூலம் நம்மை வழிநடத்துகிறார்களா? அல்லது நமது கிரகத்தை எடுத்துக் கொள்வதற்க்கா காத்துக் கொண்டிருக்கிறார்களா!? காலம்தான் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்...
மிளகின் மருத்துவ பயன்கள்...
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது..
மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.
மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
உணவு சரியான முறையில் செரிக்கப்பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.
இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.
இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டு விடுவார்கள்.
வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்...
பிரபஞ்ச இரகசியம்...
நமக்கு தேவையான அனைத்தையும் இப் பிரபஞ்சத்திடம் இருந்து நாமே பெறலாம்.
இப் பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம்.
இப் பிரபஞ்ச பேராற்றல் நமக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பதற்கு தயாராக உள்ளது, நாம் தான் பெறுவதற்கு தயராக இல்லை. தவறு நம் மீது தான்..
அனைவருக்கும் சூரியன். சந்திரன் காற்று என இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் சமமாகவே கொடுக்கிறது.
நாம் விரும்பியதை அடைய நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
இதற்காக நாம் யாரும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நமக்கு நாமே குரு.. நாம் தான் பில்கேட்ஸ்க்கு ஒரு சூரியன் நமக்கு ஒரு சூரியன் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.
நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் இப் பிரபஞ்சத்திடம் கேட்கும் விதத்தில் தான் தவறு நடக்கிறது.
ஆக மொத்தத்தில் நம்முடைய புரிதல் கோணம் தான் தவறானது.
சரி இப்பொழுது இப் பிரபஞ்ச பேராற்றலை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதை பார்ப்போம்.
மிக மிக சுலபமான வழி முறையாக உள்ளதே, பலன் அளிக்கு்மா என நினைக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள் பலன் நிச்சயம்.
மந்திரம் சொல்ல வேண்டாம. தியானம் செய்ய வேண்டாம். பணம் செலவு செய்ய வேண்டாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.
நாம் சாதாரணமாக செயல்களில் ஈடு பட்டுக்கொண்டே இப் பிரபஞ்ச சக்தியிடம் அனைத்தையும் பெறலாம்.
இதற்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் மிக சுலபம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனதார நன்றி மூன்று முறை கூற வேண்டும்.
அவ்வளவு தான் மற்றதை இப்பிரபஞ்சம் நமக்கு தேவையானதை நடத்தி காட்ட தயாராகி விடும்.
இதை நாம் செய்வதற்கு மறந்து விடுவோம் இதையும் விட சுலபமான ஒரு வழி உள்ளது.
அது என்ன வென்றால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாமல் யாரும் இல்லை ஆகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும் போதும் நன்றி என்ற ஒரு மாயாஜால வார்த்தயை கூறிவிட்டு பச்சை நிற வண்ணத்தை தொட்டு பேச தொடங்குங்கள்.
பிறகு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல ஒரு உயர்ந்த நிலையை அடையவதற்க உண்டான தொடக்க பாதைக்கு இப்பிரபஞ்சம் பச்சை நிற கொடி அசைத்து காட்டி விடும்..
சரி இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.
நமக்கு ஒருவர் பரிசு பொருட்கள் அல்லது உதவி செய்யும் பொழுது நாம் என்ன கூறுகிறோம் நன்றி என்கின்ற வார்த்தையை கூறுகிறோம் அல்லவா அதே போல் தான் இதுவும்.
ஐஸ்டீன் சூத்திர படி எந்த ஒரு நேர் வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு..
அது போலவே இப்பொழுது இங்கே நமக்கு கொடுப்தற்கு முன்பே நன்றி கூறி விடுகிறோம். இப்பொழுது பிரபஞ்சம் நமக்கு கடமை பட்டு விடுகிறது நமக்கு தேவையை நிறைவு செய்யகிறது...
மூலிகைக் குடிநீர்...
மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர்.
வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர் போன்றவை அடங்கும்.
நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே..
சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.
ஆவாரம்பூ குடிநீர்...
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துளசி குடிநீர்...
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வல்லாரை குடிநீர்...
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
கரிசாலை குடிநீர்...
ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி..
என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்...
பிரபஞ்ச சக்தி...
உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்..
விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்..
அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்..
நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்..
உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்...
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்..
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்..
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...
Subscribe to:
Posts (Atom)









