15/09/2020

Godliness is the state of Blissfulness...



நீ கேட்பவன் இல்லை..

கொடுக்கப் பிறவி எடுத்து பிறந்தவன்..

நம்மிடம் நிறைய கொடுப்பதற்கு இருக்கிறது..

கேட்டுப் பெற வேண்டியது ஒன்றும் இல்லை..

நமக்குள் பேரானந்த நிலை இருக்கிறது  என்பதை தெரியாததனால்..

அதை உணராததால் தான் பிறரிடம் அன்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்..

இறைவனிடம் பிரார்த்தனை என்ற பெயரில்..

கை ஏந்திக் கொண்டும் இருக்கிறோம்..

நம்மில் இருக்கும் அன்பை உணர்ந்தால்..

நம்மை நோக்கி வரும் அன்பின் அலைகளை உணர முடியும்..

இறைவனிடம் கையை ஏந்தி கேட்டால் இறைவனை அவமானப் படுத்துகிறோம் என்பதை...

ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதுவே நிதசர்ணமான உண்மை...

நாம் கேட்காமலே இறைவன் எவ்வளோ கொடுத்து அருளி இருக்கிறான்...

சுவாசிக்க காற்று,

குடிக்க நீர்,

வசதியாகவும், ரசித்து அனுபவிக்கவும் நிலம் என்னும் மடியை ஆழ, அகல விரித்திருக்கிறது..

உயிர் ஜெனிக்க வெப்பம்,

அதை குளிர்விக்க குளிர்ச்சியான காற்று,

மனதுக்கு இதம் அளிக்கும் இயற்கை வளங்கள்??

இப்படி எத்தனை எத்தனையோ...

இன்னும்

நாம் அன்றாடம் இந்த பூமியில் சுவாசித்துக் கொண்டு..

அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது..

எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்று நினைத்துப் பார்த்தால்..

நம் வாழ்வின் வசந்தத்திற்கு எதை கொண்டு ஈடு செய்ய முடியும்....

அதை எல்லாம் அனுபவிப்பதை விட்டு விட்டு,

மேலும் இயற்கை வளங்களை முடிந்தவரை அழித்தும் விட்டு..

நாம் இறைவனிடம் இன்னும் வேண்டும், வேண்டும் என்று பேரம் பேசி கொண்டிருக்கிறோம்..

இவைகள் அனைத்தையும் வாழ்வின் வளமாக மாற்றும் அறிவு மனிதனிடம் இருக்கிறது..

இயற்கையின் வளமே வாழ்வின் வளம்..

அன்பின் வளமே வாழ்வின் வசந்தம்..

அதை உணரச் செய்வோம்,

வாழ்வில் வளமும் நிறைவும் பெற்று வளமாக வாழ்வோம்...

பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்...



நீர்... பதனீர் ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம்.

பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்..

செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.

செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன..

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும்.

பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.

இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன..

வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்..

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்..

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்.

பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை..

பதனீரும், கள்ளும் சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள்.

இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.

பதனீரிலே எல்லாம் இருக்கிறது ஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம்.

தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.

250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி
இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும்.

மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும்.

இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை. கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்...

நீட் தேர்வை இந்தி மொழி பேசும் வட இந்திய மாநிலங்கள் ஏன் எதிர்க்க வில்லை என்பதற்கு அடுத்த சாட்சி...


நான் படித்த உளவியலில் இருந்து உங்களுக்காக சில தகவல்கள்...



1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்..

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எழுச்சி...


இந்தி மொழி வரலாறு...


மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்...



மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்..

மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

இதயத் தசைகள் வலுவாக்குகிறது. இதயம் சுருங்கி விரியும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்...

திமுக - அதிமுக இரண்டுமே பிராடுங்க தான் போடா...


இந்திய மக்களிடம் கொள்ளையடித்து அம்பானிக்கு கொடுத்து கொண்டிருக்கிறது பாஜக மோடி அரசு...