15/11/2020
திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் செய்த சாதனைகள்...
கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு,
கொடியன்குளம்,
தாமிரபரணி,
பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...
சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..
பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த… திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?
பெயர்ப் பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?
இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...
ஆசாரித் தமிழன் வாயில் மண்...
என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில விடயங்களைப் பகிர்கிறேன்.. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை...
ஆசாரிகள் தான் அந்தக்காலத்துப் பொறியாளர்கள் (எஞ்சினியர்ஸ்). தமிழர் தலையெழுத்துக்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கா?
இன்று கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து போனார்கள்.. தமிழகத்தில் இருக்கும் கொத்தனார்கள், நாவிதர்கள், சிற்பிகள், கூலிகள், ஓட்டுநர்கள் எல்லாரும் இப்போது கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கிறார்கள்..
அதாவது தமிழகத்திலிருந்து ஆள்கூட்டிவந்து வேலைவாங்குமளவு மலையாளிகள் உயர்ந்துவிட்டனர், தமிழர் தாழ்ந்துவிட்டனர்..
சபரிமலை ஐயப்பன் சிலையை செய்து தந்ததே தமிழக சிற்பிகள் தான் (ஸ்தபதி என்று அழைக்கப்படும் பெருந்தச்சர்)..
இன்று அதே சபரிமலையில் ஒரு தேநீர்கடை மலையாளி தமிழனை வெந்நீர் ஊற்றிக்கொல்லும் அளவு தரம்தாழ்ந்துவிட்டனர்...
சரி, ஆசாரிகள் கதைக்கு வருவோம்...
மற்ற தமிழரைப் போலவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியறிவு இல்லாமல் (ஆங்கிலம் தெரியாமல் படிப்பைவிட்டோரே அதிகம்) சொந்தமண்ணில் எதிர்காலமும் இல்லாமல் அவர்கள் குடிமூழ்கிவருகிறது.
தமிழர்களின் கலைகள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை அறியப்போகிறீர்கள்; ஊரறிந்த பெருந்தச்சன் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் 'கணபதி ஸ்தபதி'..
குமரிக்கடலில் வானுயரம் நிற்கும் வள்ளுவர் சிலையை கட்டியவர்; இவர் பல்வேறு புகழ்பெற்ற சிலைகளையும் கோவில்களையும் தமிழர் வாழும் பல நாடுகளில் செய்துதந்துள்ளார்.
(பலருக்குத் தெரியாத செய்தி- இலங்கை அரசு 1998ல் பாம்புப்படுக்கையில் இருக்கும் திருமால் சிலை செய்ய முன்பணம் கொடுத்தது; பல இடங்கள் தேடி நீலநிறப் பாறைகளைக் கண்டறிந்து தன் கைக்காசைப்போட்டு அந்த சிலையைச் செய்தார்; சிங்கள அரசுகளைப் பற்றிக் கூறவும் வேண்டுமா, ஆட்சிமாறியதும் அம்போவென விட்டுவிட்டார்கள்; அச்சிலையை அவர் தானியங்கள் நிரப்பிய தொட்டியில் வைத்து புதைத்து வைத்திருந்தாராம், அது இன்றும் அப்படியே இருக்கிறதாம்)..
சென்னையில் சிற்பக்கல்லூரி நிறுவப்பட்டபோது (அதை நிறுவியதும் தமிழ்ப் பார்ப்பனரான ராஜாஜிதான், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு ஆபத்து வரும்போது வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை போல எதையாவது கட்டி விளம்பரம் தேடுவதோடு சரி) அக்கல்லூரியின் முதல்வராக கணபதியார் நியமிக்கப்பட்டார்; வெறும் உளிப்பட்டறையாக இருந்த சிற்பக்கல்லூரியை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு குறைவில்லாமல் கட்டியெழுப்பினார் கணபதி ஸ்தபதி; தமது 84ம் வயதில் 2011 ல் மறைந்தார்.
கணபதி ஸ்தபதி தான் அதுவரையிலும் தலைமுறை தலைமுறையாக வாய்வார்த்தையாக ஆசாரிகள் கற்றுவந்த தொழில்நுட்பங்களை (கட்டுமானம் மற்றும் சிற்பம்) சரியாக தொகுத்து சீராக்கி வார்த்தைகளை உருவாக்கி கோட்பாடுகளை வகுத்து நூலாக வெளியிட்டார்.
அவர் இருந்தவரை ஆங்கில எழுத்துகள் கூட தெரியாத ஆசாரிகள் பட்டறிவை (அனுபவத்தை) நிறுவி 'ஸ்தபதி' பட்டம் வாங்க முடிந்தது; அதாவது
மூன்றாம் வகுப்பு தாண்டாத ஒரு கோவில்கட்டும் ஆசாரி தமது பட்டறிவால் கற்றுத்தேர்ந்ததும் அக்கல்லூரியில் விண்ணப்பித்தால் பட்டறிவை சோதித்து 'ஸ்தபதி' பட்டம் வழங்கினார்கள்.
கணபதியார் மறைந்தபிறகு சிற்பக்கலையில் கல்லூரிப் பட்டம் பெற்றவருக்கு மட்டுமே அப்பட்டம் கிடைக்கிறது.
இதனால் தனியாக தாமே முழுக்கோவிலையும் கட்டிமுடிக்கும் திறமையுள்ள பட்டறிவு வாய்ந்த ஆசாரிகள், பட்டம் வாங்கிய ஒரு மாணவன் இருந்தால் தான் கோயில்கட்ட இசைவே (அனுமதியே) பெறமுடியும்; வெறுமனே புத்தகத்தைப் படித்த ஒரு இளைஞன் உட்கார்ந்த இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு காசு பார்ப்பான்..
இதைவிடவும் கேடு வேறொன்று உள்ளது...
அதாவது வெளிநாட்டு ஆட்களும் அக்கல்லூரியில் சேர்ந்து புத்தகத்தைப் படித்து தேர்வெழுதிவிட்டு தமிழகத்தின் தலைசிறந்த ஆசாரிகளுக்கு தன் பட்டத்தின் மூலம் தொழில் பெற்றுக் கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் தொழில் முறையைப் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு அவன் நாட்டுக்குப் போய் அதற்கான காப்புரிமையை வாங்கிவிடுவான்.
அதன் பிறகு ஆசாரிகள் காலம்காலமாக பயன்படுத்திவரும் தொழில்நுட்பங்கள் அவனிடம் இசைவு பெற்ற பிறகு தான் ஆசாரிகளே பயன்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, இன்று தங்க வளையல்களில் போடப்படும் வேலைப்பாடுகள் (டிசைன்ஸ்) ஆசாரிகள் பயன்படுத்திவந்த அதே முறையை பயன்படுத்தி சிறிய இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகின்றன. அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமைகள் வைத்துள்ளன; அந்த வேலைப்பாடு மற்றும் அதன் அளவீடுகள் வடிவங்கள் என அனைத்தும் ஆங்கிலப்பெயர்களில் மாற்றப்பட்டுவிட்டன. அதாவது வளையல் செய்யும் கலையே வெளிநாட்டிலிருந்து வந்ததாக மக்கள் நம்புவார்கள்.
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் நடைமுறைக்கு கொண்டுவரும் முன் பழைய தொழில்நுட்பம் பயன்படுத்துவோர் அடையும் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்;
பழைய தொழில்நுட்பத்தில் பிழைப் போருக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய மாற்றுவழி அமைத்துத் தரவேண்டும்.
நமக்குத்தான் அரசே கிடையாதே; எப்படி பனினி என்பவரால் தமிழின் புணர்ச்சி விதிகள் திருடப்பட்டு சமசுக்கிருத இலக்கணத்தில் சேர்க்கப்பட்டு இன்று அது தமிழுடன் போட்டிபோடுகிறதோ.
எப்படி தெலுங்கர் ஆட்சியில் தமிழிசையைக் கற்று அதில் தெலுங்கு பாடல்களை அமைத்து மெட்டு, தாளம், இசை ஆகியவற்றின் பெயரை சமசுக்கிருதத்தில் மாற்றி தமிழரின் இசையை திருடி இன்று கர்நாடக சங்கீதம் ஆக்கினார்களோ.
அதே கலைத்திருட்டுதான் இதுவும்...
கலையைப் பாதுகாக்க அக்கறையுள்ள ஆற்றலுள்ள அரசு நமக்கு இல்லை;
தமிழரின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை இந்தியா தனதாக்கிக் கொண்டது;
தோப்புக்கரணத்திற்கு ஆங்கிலத்தில் பெயர்வைத்து அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளது.
இன்று பரதநாட்டியம் என்று அறியப்படுவது தமிழர் கலையான சதிராட்டத்தின் ஒரு வடிவமே..
வாடிப்பட்டி மேளம் என்பது போல பந்தநல்லூர் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியம் (பந்தநல்லூர் தஞ்சாவூர் அருகில் உள்ளது).
இந்த திருட்டு வேலையைச் செய்த சென்னை கலாச்சேத்ராவுக்குப் போய்ப் பாருங்கள் ஒரு தமிழன் கூட அங்கு கிடையாது.
கலையை வளர்க்காமல் அதை வெளிநாட்டாருக்கும் வேற்றினத்தாருக்கும் விற்று பின் அவன் திருத்திய வடிவத்தை நமக்கே கொண்டுவந்து கொடுத்து இரட்டையாக காசு பார்த்து நம்மை சீரழிக்கின்றன இந்த வேற்றின வந்தேறி அரசுகள்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துவருகிறான் தமிழன்...
தமிழகத்தில் பிறமொழியினர் பரவல்...
1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு 1961 இல் வெளிவந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் [Census of india 1961 vol ix A] கொடுக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதி மொழி வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட வரைபடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
எல்லைப் புறத்தில் வேற்றின மக்கள் இருப்பது இயல்புதான்.
அப்படிப் பார்த்தால் மலையாளிகள் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை (இன்றைய நிலை தெரியவில்லை).
இதில் நாம் கவலைப்படவேண்டிய விடயம் எல்லையைத் தாண்டி உட்பகுதி வரை குடியேறியுள்ள கன்னடர் பற்றியும் ஊடுருவி மறுமுனை வரை செறிவாக குடியேறியுள்ள தெலுங்கர் பற்றியும்தான்.
நமது மாநிலம் அமைந்த போது நமது எல்லைப் பகுதிகள் பெரும்பாலானவற்றை இழந்தோம்.
அப்படி நாம் அறுதிப் பெரும்பான்மை யாக இருந்த பகுதி மட்டுமே தமிழகமாக ஆனது.
அதிலும் உட்பகுதியில் குடியேற்றம் 1961 லேயே இந்த அளவு இருப்பது அப்போதே கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால் நாம் இழந்த பகுதிகள் அனைத்துமே அந்நியர் குடியேற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் இழந்தவைதான்.
குறிப்பாக சிங்களவர் இப்படி குடியேறித்தான் நமது நிலத்தை முழுதாக ஆக்கிரமித்தனர்...
எல்லாமே அதிர்வு தான்...
நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.
இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.
கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது. காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.
மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது. வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.
மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.
அணுக்களின் விலக்கு விசை தான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு வகையான அதிர்வுகள் தான்.
நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.
அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.
இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.
வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.
பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.
ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி..
எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.
நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதை விடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.
ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.
அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...









