23/07/2021

உன் நினைவுகளே என் வாழ்க்கை...

 




நான் எதிர்பார்க்காத நேரத்தில்
உன் காதலை என்னிடம் சொன்னாய் .....

நான் எதிர்பார்க்காத நேரத்தில்
என் கன்னத்தில் முத்தம் பதித்தாய்....

எதிர்பார்க்காத நேரத்தில் கட்டியனைதாய்.....

எதிர்பார்க்காத நேரத்தில் உன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினாய்....

எத்திர்பார்க்காத வினாடியில் நீ
மரணத்தை தழுவினாய்...

என் கண் முன்னே... 
என் மடியில்...

உன்னால் என் வாழ்க்கையில்
இவையெல்லாம் எதிர்பார்க்காமல்
நடந்தது...

நீ இல்லாத என் வாழ்க்கை
எப்படி அமையும் ?

கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...

 


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்...

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக் குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

தமிழகமும் இணையம் வியாபாரமும்...

 


உன்னால் ஏமாற்றப்பட்டவன்...

 




எனக்குள் உன் நினைவும்
உனக்குள் என் நினைவும்
இருந்தும் தனித்தே வாழ்ந்தோம்...

இருவரும் காதலுடன்...

உன் நண்பன் வந்து சொன்னது 
உனக்கு திருமணம் என்று....

கண்களில் கண்ணீர் பெருக்க....

அன்று முதல் உன்னை நானும்
என்னை நீயும் காணாத நாம்...

இன்று உன்னை சந்தித்தேன்
கையில் ஒரு மழலையுடன்....

உன் மழலைக்கு என் பெயரின்
சாயலில் பெயர் வைத்துள்ளாய் ....

ஏனடி பெண்ணே....

நீ மறந்த காதலை எண்ணி
போலி கண்ணீர் விடாதே...

அமைந்த உன் வாழ்கையை
வசந்தமாக வாழ்ந்துக் கொண்டு...

என் முன்னால் நடிக்காதே...
அதுவே போதும்...

உன் நலம் விரும்பும் 
உன்னால் ஏமாற்றப்பட்டவன்.....

தெலுங்கனின் இன வெறி... திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களை காணவல்லை...

 


தமிழர்களின் முதல் எதிரியே தெலுங்கர்கள் தான்...

4வது புருஷனாக பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா...

 


புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி...

 


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது.

இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்..

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்..

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்..

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக் கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்..

இஞ்சி திறம்பட மார்பக புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து..

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்...

அல்வா_ரெடி...

 



                          
ஸ்வீட் சாப்பிட ஆசையா இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்கு ஆன்லைன் ஆர்டர் கொடுக்கலாம்னு போன்ன் பண்ணேன்...

எனக்கு ஸ்வீட் வேணும். உங்களிடம் என்னென்ன ஸ்வீட் இருக்குனு கேட்டேன்..

பதில் வந்துச்சு...

லட்டுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

பூந்திக்கு எண் 2 ஐ அழுத்தவும்..

அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்..

கேசரிக்கு எண் 4 ஐ அழுத்தவும்..

குலோப்ஜாமூன் வாங்க எண் 5 ஐ  அழுத்தவும்..

ஜிலேபிக்கு எண் 6 ஐ அழுத்தவும்..

இவன் எண் 3-ஐ அழுத்தினான்..

பதில் வந்தது...

கோதுமை அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

பாதாம் அல்வாவுக்கு எண் 2 ஐ அழுத்தவும்..

பால் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்..

ரவா அல்வாவுக்கு எண் 4 ஐ அழுத்தவும்..

இவன் எண் 1-ஐ அழுத்தினான்..

பதில் வந்தது...

பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும்..

டால்டாவில் செய்த அல்வாவிற்கு எண் 2 ஐ அழுத்தவும்..

பாமாயிலில் செய்த அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும்..

இவன் எண் 1-ஐ அழுத்தினான்..

பதில் வந்தது ...

கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1ஐ  அழுத்தவும்..

அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2ஐ அழுத்தவும்..

முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3ஐ  அழுத்தவும்..

ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4ஐ அழுத்தவும்..

நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9ஐ  அழுத்தவும்..

நான் தவறுதலாக எண் 9 ஐ அழுத்திட்டு போனை ஆஃப்  பண்ணிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் போனை ஆன் செய்தப்போ அங்கிருந்து அழைப்பு வந்தது...

நீங்க தானே அல்வா ஆர்டர் பண்ணீங்க?

இல்லையே...

இந்த நம்பர்லேர்ந்து 100 கிலோ அல்வா வேணும்னு ஆர்டர் வந்துச்சே..

சார் போன் என்னோடது தான்... ஆனா ஆர்டர் செய்தது நான் இல்ல... என்  இருந்தவர்கள்  யாராவது  செய்திருப்பார்கள்.... எனவே நீங்கள்... 

என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1 ஐ அழுத்தவும்..

என் சின்ன அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2 ஐ அழுத்தவும்..

என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3 ஐ அழுத்தவும்..

என் சின்ன தம்பியை தொடர்பு கொள்ள எண் 4 ஐ அழுத்தவும்..

என் அப்பாவை தொடர்பு கொள்ள எண் 5ஐ அழுத்தவும்..

அதுக்குள்ள லைன் கட்...

நாங்களும்_அல்வா_குடுப்போம்ல. 😂

யாருகிட்ட 😁😁😁

மகிழ்ச்சி...

 


Match Found 😂