20/11/2021

ஆண்கள் தின வாழ்த்துக்கள் 😁

 


அகத்திக் கீரையீன் சிறப்பு...

 


அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..

சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;

கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.

உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .

அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,

வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்..

இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.

நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...

இப்போலாம் பொறக்கும் போதே கேடிகளா பொறக்குதுங்க 😏 நான் தான் அப்பாவியா பொறந்துட்டேன்😏

 


செந்தில் Vs கவுண்டமணி கலாட்டா...

 


செந்தில் : அண்ணே காதல்னா என்ன னே...

கவுண்டமணி: டேய். உன்ன மாதிரி கடலை மிட்டாய் திருடி திங்கிறவனுக்கு சொன்னாலம் புரியாதுடா.

 செந்தில்: அட சொல்லுங்கண்ண.

கவுண்டமணி: சரி சொல்றேன் கேளு. நீ எப்படி இன்னொரு வாழபழம் எங்கடான்னு கேட்டா அதாண்ண இதுன்னு சொன்னியோ. 

அதே மாதிரி அவன, நீ யார்ரானு கேட்டா நான் தான் அவள்னு சொல்றதும்.

அவள, நீ யார்றினு கேட்டா நான் தான் அவர்னு சொல்றதும் தாண்டா காதல்..

🤣🤣

நோய் தீர்க்கும் ஆடாதோடா...

 


சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு (ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

திமுக ஸ்டாலின் அரசே... எச்ச. ராசாவை கைது பண்ண துப்பில்ல...

 


அறவழியில் போராடிய மாணவர்கள் மீது வழக்கு போட்டு கைது பண்றது...

இதுல பேரு வேற விடியல் அவியல்னு...

இனிய இரவு வணக்கம் 😁

 


பிராடு பாஜக மோடி அரசின் பொய்கள்...

 


இனிய இரவு வணக்கம் மக்களே 😁

 


திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

 


கூகுளை கொண்டு வலிமை சிமெண்ட் பற்றிய உண்மையை உடைத்த கோவை சத்யன்...