17/04/2017

ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...


மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்...

அது போன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.

பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார்.

திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார்.

காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது.

அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது...

திமுக கலைஞர் இதுவரை 130 அணைகளுக்கு மேல் கட்டியுள்ளார் - துரைமுருகன்...


சிதைக்கப்பட்ட தமிழனின் கடல் வளர்ச்சி....


திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுவிட்ட தமிழனின் கடல் சார் வளர்ச்சி...

உணவுக்காய் கடலில் மீன் பிடிக்க ஆரம்பித்த தமிழ் மக்கள் கடற்கலங்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டார்கள். அத்தோடு அவற்றினைக் கட்டவும் சுயமாகவே கற்றுக் கொண்டார்கள். அவர்களினால் அமைக்கப்பட்ட மாபெரும் கடற்கலங்கள் நாவாய்கள் என அழைக்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

கடற்கலங்களில் கடலை அளக்க முயன்ற தமிழன் கடலை முழுதாய்க் கற்றுக் கொண்டான். இதனால்க் காற்று வீசும் திசைகளில் கடற்டகலங்களை செலுத்தவும் இரவினில் திசை மாறாது பயணிக்கவும் கற்றுக் கொண்டான். இதற்கு உதவியாக கலங்கரை விளக்குகளையும் அமைத்துக் கொண்டான்.

கடலில் பிரயாணம் செய்யத் தொடக்கி கடலில் அனுபவம் பெற்றுக்கொண்ட தமிழன் தன் கடற் பிரயாண எல்லைகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினான். இவை வர்த்தகம், ஆக்கிரமிப்பு, படையுதவி எனப் பல வடிவங்களில் விரிந்து நின்றது. ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழன் தன் தொப்புள் கோடி உறவான தமிழகத்துடனேயே பெரும்பாலும் கடல்வழியே ஆனா தொடர்புகளைக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் மேற்கு நாடுகளுடனான வணிகத்தில் ஈழத் தமிழனும், தமிழகத்தவர்களும் மட்டுமே தொடர்பு பட்டிருந்தார்கள். இவற்றுக்கு வசதியாக சேர நாட்டின் பெருந் துறைமுகம் புகாரும், பாண்டிய நாட்டின் முத்துக்குப் பெயர்போன மிகச்சிறந்த துறைமுகம் கொற்கையும் விளங்கின. இவற்றுக்கு நிகராக ஈழத்தின் மேற்கு கரையில் கற்பிட்டி முதல் யாழ்ப்பாணம் வரையான தமிழனின் துறைமுகங்கள் செயற்பட்டு வந்தன.

தூர கிழக்கு நாடுகளான சீனா, யா(ஜா)வா, அரேபியா, எகிப்து, உரோமாபுரி என்பவற்றுடன் ஆரம்ப வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியவர்கள் தமிழர்களே.

பின் காலங்களில் சீனர்கள் மேலைத்தேய வணிகத்தில் பங்கு கொண்ட காலத்தில் இலங்கையின் வடகரையில் இருந்த துறைமுகங்கள் மேலும் முக்கியத்துவம் பெற்றன. அவற்றுள் மாதகல், மயிலிட்டி, காங்கேசன்துறை, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, சாட்டி, பெரியதுறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை, கச்சாய், கொழும்புத்துறை, பண்ணை, மணித்தலை, நாகர்கோவில், தாளையடி, வெற்றிலைக்கேணி என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

7ஆம் நூற்றாண்டளவில் மாந்தையூடான வர்த்தகம் தடைப்பட்டு ஊர்காவற்துறைமுகம் மேற்கிலும், கிழக்கிலும் இருந்து வந்த கப்பல்களுக்கு பிரதான துறைமுகம் ஆனது. இதுவே போர்த்துக்கேயர் வரும் வரை ஐரோப்பிய முகமதிய வர்த்தகர்களால் பயன்படுத்தப் பட்டது.

இலங்கை சுகந்திரம் அடைந்து சிங்கள அரசு ஆட்சிக்கு வரும் வரை ஈழத்தின் வல்வெட்டித்துறையும், ஊர்காவற்துறையும் கடற்கலங்களை உருவாக்கும் இடங்களாகவும்; பழுது பார்க்கும் இடங்களாகவும் பிரசித்தி பெற்றிருந்தன.

1938 இல் அமெரிக்காவின் மசாசுசெட் மாநிலத்தைச் சேர்ந்தவரால் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட அன்னபூரணி என்னும் கப்பல் விரும்பி வாங்கப்பட்டது.இது அக்காலத்தில் தமிழன் கப்பல் கட்டும் தொழிலில் கொண்டிருந்த திறமைக்குச் சான்று பகிர்கின்றது.

1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பாராளுமன்ற ஆட்சி ஏற்பட்ட போது தமிழனின் கடல் மார்க்க அறிவையும், திறமையையும், அவனின் கடல் வணிக வளர்ச்சியையும் சிதைக்கும் நோக்குடன் வட இலங்கைத் துறைமுகங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடற் போக்குவரத்துப் பாதை சட்டரீதியாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதனால் கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. இதன் மூலம் தமிழனின் கடல் சார் உரிமைகள் பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் அரச ஆதரவுடன் ஒப்படைக்கப்பட்டது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். யுத்தங்கள் ஓய்ந்துவிட்ட நிலையில் வடக்கில் இயற்கையாக அமைந்த எண்ணற்ற துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதனைத் தவிர்த்துவிட்டு சிங்களவர்களாலேயே மிகப் பெரிய நீச்சல் தடாகம் என நகையாடப்படும் ஓர் துறைமுகத்தை செயற்கையாக நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

மேலும் கடற்கலன்களை கட்டவும், ஓட்டவும் உலகிற்கே கற்றுத் தந்த தமிழன் இன்று கப்பல்களில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? இதற்குக் காரணம் தான் என்ன?

ஆந்திரா vs தமிழ்நாடு...


திமுக ஸ்டாலினும் நமக்கு நாமே நாடகமும்...


வெறும் முப்பது ரூபாய் கூலி உயர்வு கேட்டு,  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலி ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க பேரணியாகச் செல்கிறார்கள்..

அவர்கள் மீது காவல்துறையை ஏவி, தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகள் வீசி, தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்துச் சாகடித்தது அப்போதைய கருணாநிதி அரசு...

அந்தச் சர்வாதிகார கருணாநிதியின் சீமந்த புத்திரன் தான் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகிறார்...

முதலைக் கண்ணீர் ஸ்டாலின்...

மோதிரம் அணிவது ஏன்?


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்...

திமுக - விசிக எனும் மானங்கெட்ட கட்சிகள்...


விசிக ஒரு சாதிக் கட்சி என்று திமுகவும்,
கருணாநிதியை கட்டுவிரியன், கருநாகப்பாம்பு என்று  திருமாவளவனும் மாறி மாறி திட்டிக் கொண்டார்கள்..

இன்று எல்லாவற்றையும் மறந்து, தேர்தலை மட்டும் நினைத்து, மனம் மாறி மருதானி போல் ஒட்டிக் கொண்டார்கள்...

காலத்தை வென்று, இன்றும் முணுமுணுக்கப்படுகிறது கவுண்டர் சொன்ன அந்த வசனம்..

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

வெளிவராத அப்பல்லோ ரகசியம்.. உடல்நலம் தேறிய ஜெ. உயிரை பறித்த அந்த பழச்சாறு...


அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பழச்சாறு தான் அவரது உயிரை பறித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. ஓபிஎஸ் அதிமுக, திமுக உள்ளிட்டவை ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய கோஷம் ஆர்கே நகர் தேர்தல் ரத்தோடு முடிந்து போய் விட்டது.

ஜெயலலிதாவின் நினைவிடமும் அவர் வசித்த போயஸ் கார்டன் பங்களாவும் ஏதோ ராசியில்லாத இடம் போல கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளைத் தெரிந்தவர்கள் எவரும் இதுதான் நடந்தது என பட்டவர்த்தனமாக இன்னமும் கூறவில்லை.

விஜயபாஸ்கருக்கு குறி அதே நேரத்தில் டெல்லியோ, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது சசிகலாவின் அடியாள் போல வலம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து இப்போது வருமான வரித்துறை மூலம் வளைத்துக் கொண்டிருக்கிறது.

விஜயபாஸ்கரை மீண்டும் வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்தும் உள்ளது.

விஜயபாஸ்கர் விவகாரத்தை கிளறிய போது அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது நடந்த கூத்துகளும் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. ஆனால் ஜெயலலிதா கைரேகையைப் பதிவு செய்த மருத்துவர் பாலாஜியோ இதை நிராகரித்துள்ளார்.

ஜெ.வுக்கு கொடுத்த பழச்சாறு தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நல்ல உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்தாராம். அப்போது மருத்துவர்கள் அனுமதியின்றி வழக்கமாக ஜெயலலிதா அருந்தும் பழச்சாறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பழச்சாறை கொடுக்கக் கூடாது என நர்சுகள் கண்டித்தும் அதைக் கண்டு கொள்ளாமலேயே வழக்கமாக சாப்பிடுவது தானே என கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதுதான் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட காரணமாம்...

அந்த பழச்சாறு மட்டும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படாமல் இருந்தால் எந்த சிக்கலும் இருந்திருக்காது என அப்போதே மருத்துவர்கள் கூறியிருந்தனராம்.

இந்த தகவல் இப்போது பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது...

சித்தர் ஆவது எப்படி - 20...


அதுவாய் இருப்பதும், அதைப் பற்றி இருப்பதும்...

ஆன்மீகம் இரண்டாய் பிளந்து போய் இருக்கிறது.. ஒன்று அதுவாய் இருக்கும் மிக உன்னத நிலை.. மற்றொன்று அது என்ற ஒன்றை மறந்து விட்டு அதனால் காரியப் பட்ட விசயங்களையும், அதைப் பற்றிய விசயங்களில் மூழ்கி போய் அது என்ற அந்த ஒன்றின் தொடர்பை முற்றிலும் இழந்து விட்ட நிலை..

அதுவாய் இருக்கும் அந்த நிலையில் பல கோடி மக்களில் ஒருவர் தான் இருக்கிறார்..

மற்றவர்கள் எல்லாம் அது என்ற ஒன்றை பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு இருக்கும் நிலை....

சத்திய நிலையில் அதுவாக இருக்கும் சத்திய மகான்கள் உலக மக்கள் தொகையில் சிலர் மட்டுமே..

ஆனால் பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு அசத்திய நிலையில் உண்மை அற்ற நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்களே மற்ற அனைவரும்..

கடவுளை யாரும் நினைப்பதில்லை..
கடவுளை பற்றிய விசயங்களில் பற்றி பற்றி அதனால் தோன்றியவற்றில் மூழ்கி கடவுள் நினைப்பே இழந்து போய் விட்டனர்..

கடவுளை சொல்லுகின்ற போது அது பல பேருக்கு வியப்பை தரும்.. ஆனால் புரிவதில்லை..

கடவுளை பற்றி சொல்லுகின்ற போது புரிவது போல தோன்றும்.. ஆனால் சத்தியம் விளங்குவது இல்லை..

அது சத்தியமாக இருக்கிறது.. அது என்பதை விளக்க வந்தவைகள் சித்தாக உள்ளது..

அப்படி விளக்க, விவரிக்க வந்தவைகளில் சிக்கி கொள்ளாமல் விளக்க வந்தவைகள் சுட்டி காட்டும் அந்த சத்தியத்தை பிடிப்பதே புத்தி அறிவு..

ஆனால் இன்றைய நிலையில் அந்த சத்தியத்தை பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை..

காரணம் விளக்க வந்தவைகளின் பிடிப்பு மிக வலுவாக உள்ளது..

அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் மனிதன் தவிக்கின்றான்.. அந்த தவிப்பின் வெளிப்பாடே மதவெறியாக மாறி விட்டது..

சித்து சுட்டிக் காட்டும் சத்தை பிடிப்பவர்கள் தான் சித்தர்கள்..

சித்து சுட்டி காட்டுபவைகளில் சிக்கி கொண்டவர்கள் பித்தர்கள், மன நோயாளிகள், மத வெறியாளர்கள்..

சத்தை பிடிப்பவர்களிடம் மட்டுமே அன்பு என்ற புனிதம் இருக்கும்..

விளக்க வந்தவைகளில் சிக்கி கொண்டவர்கள் விடுதலை பெற வேண்டுமானால் சத்து நிலையை மட்டுமே அனுபவப் படும் தோன்றா நிலையை அனுபவப் படும் போது மட்டுமே விடுதலைக் கிடைக்கும்..

கடவுளை பற்றிய விசயங்கள் அங்கே தொலைந்து போய் கடவுளையே அறியும் உன்னதம், புனிதம் கிடைக்கும்..

அந்த தோன்றா நிலையையும் அங்கே கிடைக்கும் சத்தியமான பிரபஞ்ச பேராற்றலை பெறுகின்ற புனித நிலையையும் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு நம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்வோம் என்றால் சித்தர் ஆவது திண்ணம், உறுதி....

வாழ்க்கை ஒரு வட்டம்...