26/05/2017

தம் நாட்டை தாமே ஆள்வது தான் உரிமைகளில் முதலாய உரிமை...


தமிழனே தமிழனை ஆள வேண்டும்...


சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி வாங்கி தருவதாக ரூ 50 லட்சம் மோசடி, முன்னால் அமைச்சர் நத்தம் விஸ்வனாதன் மீது வழக்கு பதிவு செய்ய திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு...


ரஜினியை பாஜகவிற்கு வருமாறு நான் அழைக்கவில்லை, அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் - பாஜக தலைவர் அமித்ஷா...


நாடு முழுவதும் பசு மாடு , எருமை மாடு, ஒட்டம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்க தடை , மத்திய அரசு அறிவிப்பு...


மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் , இவைகள் விவசாய தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் இறைச்சிக்காக அல்ல எனக் கூறப்பட்டுள்ளது..


பசு மாடு, எருமை மாடு, ஒட்டகம் ஆகியவற்றை வாங்குபவர்கள் நான் இதை விவசாய தேவைக்கு தான் பயன்படுத்துகின்றேன் என அஃபிடவிட் தாக்கல் செய்த பிறகே வாங்கவோ விற்கவோ முடியும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது...

குறிப்பு : மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு இந்தியா வை கொண்டு வந்த பெருமை பாஜக மோடியை சேரும்.. அந்த மாட்டிறைச்சியை தயார் செய்யும் முதல் 6 நிறுவனமும் பாஜக தொடர்புடைய நிறுவனமே ஆகும்... ஆகையால் பாஜக சார்ந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் தடை...

களக்காடு கலுங்கடியை சேர்ந்த முத்துராஜ் என்ற விவசாயி வாழைகள் கருகியதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...


நன்மைகள் பல தரும் நுங்கு...


மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைரமும் ஒன்றாக உள்ளது.

தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.

வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம்...

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.

பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.

நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.

நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே.

மேலும் நுங்கை சாப்பிட்டவுடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்த சோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.

நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.

வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜுன் 7 ஆம் தேதியாக அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்...


பாஜக மோடியின் சாதனை...


பால் நிறுவனங்களில் ரசாயனம் கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது குறித்து தேமுதிக வெளியிடப்பட்ட அறிக்கை...


தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பால் நிறுவனத்தில் தண்ணீர் கலப்படம் செய்து குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் வழங்கப்படுவதில் பல முறைகேடுகள் நடந்தது. இந்த முறைகேடுகள் குறித்து பலமுறை தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கண் இருந்தும் குருடனாய், காது இருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருந்தாரோ?  என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.

அப்போது செவிசாய்க்காத இந்த அதிமுக அரசு, இப்பொழுது திடீர் என்று ஞானோதயம் வந்தது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி, ஆதாயம் பெறுவதற்கான முயற்சியோ? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே ஆவின் பால் நிறுவனத்தில் சுமார் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அதிமுகவை சேர்ந்த லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் லாரி டெண்டர் விடுவதிலும், பால் கொள்முதல் செய்வதிலும், பால் விற்பனை செய்வதிலும் பல முறைகேடுகள் நடைபெற்றதையும், அதேபோல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது பால் விலை உயர்வை கண்டித்து சட்டசபையில் ஏற்பட்ட விவாதத்தை நாடறியும்.

பாலின் தரத்திலும், விற்பனையிலும் ஏற்படும் முறைகேடுகளை தேமுதிக எப்பொழுதும் சுட்டிக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

பாலில் மட்டு்மல்ல அனைத்து உணவு பொருட்களிலும் ரசாயனம் கலக்கப்படுவதையும், முறைகேடுகள் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்தி தனியார் நிறுவனங்கள் தவறுகள் செய்து இருந்தால் அந்த நிறுவனங்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...