10/07/2017

பாஜக மோடியை யாரும் திட்டாதீங்க - மோடிஜி யதார்த்தங்கள்...


MODIJI VS NEW INDIA (GST, DEMONETISATION, CLEAN INDIA)
Team Masala Mafia...

இலுமினாட்டி - கமல் பிக் பாஸ் நாடகத்தை பற்றி எவ்வளவு தெளிவாக பேசுகிறார் பாருங்க...


குட்டை பாவாடை பின்னுள்ள அரசியல் வணிகம், மக்கள் முட்டாளாக்கபடும் உண்மையை உரக்க சொல்லும் தமிழன்...


தமிழ் நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்...


தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது.

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது.

வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது.

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.

எருமையூர் -மைசூர், (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது).

ஒத்தை கால் மண்டபம் - உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.

ஒகேனக்கல் - உகுநீர்க்கல், புகைநற்கல்.

விருதாச்சலம் (வடமொழி) - முதுகுன்றம் (தமிழ்).

வேதாரண்யம் (வடமொழி) -திருமறைக்காடு (தமிழ்).

தி. நகர் என்பது தியாகராய நகர் ஆகும். இதை அனைவரும் அறிந்ததே, (தியாகராயர் - இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

கே.கே நகர் என்பது கலைஞர் கருணாநிதி நகர்.

பாண்டிபசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி. ( சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

மதுரை என்பது மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்).

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

நீலகிரி - குன்னூர் என வழங்குவது குன்றூர்.

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.. (ஆர் என்பது ஆத்தி மரம்).

ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. (காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்).

நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர் சூட்டினார்கள்...

ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் உள்ளது...

தமிழகத்தில் நடக்கும் கொலைகளை தடுக்க தமிழகத்தின் புதிய காவல்துறை தலைவராக சங்கராச்சாரியார் IPS பதவியேற்றார்...


இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் அடையாளம் /பாரம்பரியத்தை அழிக்க வெளிநாடுகளின் கைக்கூலிகள்...


புளு கிராஸ் மற்றும்  விலங்கு நல வாரியத்தின் தலைவர் சின்னி கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி...

கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்...


கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.

இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது...

அதிமுக ஓபிஎஸ் உத்தமருக்கு இம்பூட்டு பணம் எங்கிருந்து வந்தது...


பாஜக வும் ஏமாற்று வேலையும்...


தமிழக ஊழல் மற்றும் பதவி வெறி அரசிடம் அமைதி போராட்டம் செல்லாகாசு தான்...


அதிகாரத்தை நம் கையில் எடுப்பது தான் ஒரே தீர்வு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்...