10/10/2017

கடவுள் படைத்தாரா ?


கடவுள் மனிதரை படைத்தாரா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ கடவுளை படைத்தது மனிதன் என்பது மட்டும் உண்மை.

அதிலும் மற்ற கடவுளைவிட பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது.

மற்ற எல்லா கடவுளுக்கும் குறிப்பிட்ட அவதாரமுண்டு. ஆனால் பிளேக் மாரியம்மன், மைதான மாரியம்மன், தண்டு மாரியம்மன், வேலை கொடுக்கும் பிள்ளையார், இரட்டை விநாயகர், வினை தீர்க்கும் பிள்ளையார் என தெருவுக்கு ஒரு அவதாரம் எடுப்பது இவர்கள் மட்டும்தான். இப்படி மனிதனுக்கு வழிபட கண்டிப்பாக ஒரு உருவம் தேவைப்படுகிறது.

கி மு 483 ல் புத்தர் இறந்தபோது, அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம்.

புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆரதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிபட மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம், மறைந்த இடம், பல், செருப்பு.... இப்படி ஒரு அடையாள ஸ்தலம் இல்லையென்றால் மனித மனம் தவிக்கிறது.

உங்கள் வாழ்க்கை சீராக Highway ல் கார் செல்வதுபோல் சென்றால் பதசஞ்சலிலும் வேண்டாம்; பாதராயணரும் வேண்டாம். ஆனால் அந்த பயணத்தில் சிறு பிரச்சனையை வரும்போதுதான் கடவுளை பற்றிக்கொள்ள மனம் பதப்பதக்கிறது. மனித மனத்தை பொறுத்தவரை, ஒரு கண் கண்ணாடி or ஒரு கைதடி போன்றது கடவுள்.

பக்தி vs ஆன்மீகம்...

பக்திக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.

பக்தி ஒன்றை பற்றிக்கொண்டு திரும்ப, திரும்ப அதையே செய்வது. பல ஆண்டுகளாக பக்தி பாடல்களையும், ஸ்லோகங்களும் பாடி பூஜை செய்யும் பலரை நமக்கு தெரியும்.

ஆனால் தாம் தினமும் சொல்லுகின்ற , ஸ்லோகங்களுக்கு அர்த்தம் அவருக்கு தெரியாது. இது போன்ற பக்தியைத்தான் கடவுள் நம்பிக்கையென்று நம் வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.

ஆன்மீகம் என்பது தன் நிலை உணர்தல். தனக்குள் இருக்கும் கடவுளை தேடுவதாகும் (அகம் பிரம்மாஸ்மி).

யார் கடவுள்...?

நம் மக்களிடையே எஞ்சி நிற்பது வெறும் பக்திதான். மற்ற மொழிக்கில்லதா தனிச் சிறப்பு தமிழுக்கு உள்ளது. தமிழை வளர்த்ததில் பெரிய பங்கு பக்திக்கு உண்டு. தமிழில் உள்ள சிறப்பான நூல்கள் யாவும் பக்தி இலக்கியங்களே. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், ஆண்டாள் பாசுரம் என தமிழை வளர்த்தது பக்திதான்.

இதுபோன்ற விஷயங்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து ஜோதிடம், ஜாதகம், வாஸ்து என மனிதரை பயப் படுத்துகின்றவற்றை தான் நாம் கட்டி காப்பாற்றுகின்றோம். மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பகால காரணங்கள் விலகிப்போய், அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும்நிலை, எல்லா மததிற்க்கும் வெவ்வேறு அளவில் உண்டு.

கடவுளை எப்படி உணர்வது..

நாம் எப்படி கடவுளை வணங்குகின்றோம்? வழியில் கடந்து செல்லும்போது வருகின்ற பிள்ளையார்; வண்டியில் செல்லும்போது ஒரு நொடிப் பொழுதில் கடக்கும் முருகன்; சினிமா அரட்டை அடித்துக்கொண்டு கடவுளை தரிசிக்க செல்வது; பிரசாதத்திற்காக கோயிலுக்கு செல்வது இவைதான் பக்தியா ?

திருச் சிற்றம்பலம்..

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.

கடவுளை பார்த்தவுடன் உடலும் மனமும் நடுங்கி உடலெல்லாம் வியர்த்து, கண்ணீர் ததும்ப்பி, பொய்களை தவிர்த்து கைகளை நெகிழ்ந்து கடவுளை கும்பிடுவதாக மணிக்கவாசகர் கூறுகிறார்.

இந்த உணர்வு எனக்கு கடவுளை பார்த்தவுடன் வரவில்லையே? ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்படும் போதும், அந்த ஆட்டத்தை என்னுடைய அணி வெற்றிப் பெறும்போது என்னால் அதை உணர முடிகிறதே (மணிகவாசகருக்கு ஏற்பட்டதுபோல்). அப்போது கிரிக்கெட் தான் கடவுளா? எது ஒன்று மனிதனை மனம் நெகிழ செய்கிறதோ அதுதான் கடவுளாக இருக்க முடியும்.

பாரதியின் பார்வை..

நாம் எதையெல்லாம் கடவுள் வழிபாடு என்று நினைக்கிறோமோ அந்த எல்லாவற்றையும் உடைத்து எறிகிறான் பாரதி.

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தால் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா.
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா.
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா.

கடவுளை உணர்வதற்கு எந்த வகையான உடையோ , அணிகலனோ தேவையில்லை. உன்னை உணர்ந்தால் போதும் என்கின்றான் பாரதி.

எந்த தோத்திரங்கள் தேவையில்லை அவனை உன் மனதால் வணங்கி நின்றால் போதும் என்கிறான்...

கர்நாடக சங்கீதம் தமிழிசையே..


கர்நாடக சங்கீதம் தமிழிசையே..


நிறுவிய கிறித்தவரும்
ஆராய்ந்த இசுலாமியரும்

தமிழிசையே இப்போது 'தென்னிந்திய இசை' என்றும் 'கர்நாடக சங்கீதம்' என்றும் வழங்கப் படுகிறது..

வட இந்திய இசை அல்லது 'ஹிந்துஸ்தானி இசை' இந்தத் தமிழிசையின் ஒரு 'வளர்ச்சி நிலையே' என்றும் தெரிய வருகிறது..

தமிழ்நாட்டு வரலாற்றை நாம் கூர்ந்து பார்க்க வேண்டும்..

கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை இங்கே களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறி மாறி பிறமொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இடைக் கால சோழர் ஆட்சியும் இடைக் கால பாண்டியர் ஆட்சியும் சிறு இடைவெளிகள் தான்.

இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

பல்லவர்கள் வடமொழிக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம்.

பிறகு மாரட்டியரின் காலகட்டம்.

இந்தக் கால கட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு சரிவும், தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன..

பிற மொழியினர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதினார்கள்.

வடமொழி என்பது இந்தியா முழுக்க தொடர்பு ஏற்படுத்தித் தரும் தொடர்பு மொழியாக இருந்தது. தெலுங்கு ஆட்சி மொழி. இன்று ஆங்கிலம் நமக்குக் கவர்ச்சியான மொழியாக இருப்பது போல வடமொழியும், தெலுங்கும் உயர்குடி மொழியாகவும் கருதப்பட்டன..

இசை முற்காலத்தில் அரச சபைகளையே பெரிதும் நம்பியிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அரச சபை தெலுங்கிற்கும், வடமொழிக்கும் முக்கியத்துவம் தரும் போது பாடகர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை..

சரி, இந்த இசையமைப்பு தமிழ்நாட்டுக்கு உரியது என்பதற்கு என்னஆதாரம்?

நமது பண்டைய இலக்கியங்களே முதல் ஆதாரங்கள்.

ஆபிரகாம் பண்டிதர் அதை விரிவாக நிறுவியிருக்கிறார்.

நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தது தமிழ் மரபு.

நான்கிற்கும் கருப்பொருள், உரிப் பொருள் வகுத்தது.

இது நமது கலை இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவான இலக்கண அடிப்படையாகும்.

நான்கு நிலத்திற்கும் தனியாக நான்கு பெரும் பண்கள் கூறப்பட்டுள்ளன.

நான்கு பெரும் பண்களும்.நான்கு சிறு பண்களும் வகுத்துக் கூறப்பட்டுள்ளன.

நான்கு நிலங்களும், பாலையாகத் திரிபு கொள்ளும் போது அதற்கும் பெரும் பண் சிறு பண் வகுக்கப்பட்டுள்ளது.

பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன..

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்களை பாலை
என்கிறோம்..

நமது பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஏழ்பெரும் பாலை' என்பது அடிக்கடி குறிப்பிடப் படுகிறது.

சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.

ஏழ்பெரும் பாலைகளாவன:

1. செம்பாலை
2.அரும்பாலை
3.கோடிப்பாலை
4.மேற்செம்பாலை
5.படுமலைப்பாலை
6.செவ்வழி
7.விரிம்பாலை

இந்த ஏழு பண்களையும் வட்டப் பாலை முறையில் அமைத்துக் காட்டியவர் பண்டிதரே.

வட்டப் பாலை முறையில் ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்..

எல்லாருக்கும் புரிகிற,தெரிந்த உதாரணம் சொல்கிறேனே.

சிலப்பதிகாரத்தில் 'ஆய்ச்சியர் குரவை' என்ற பாடல் பகுதி வருகிறது.

அது "முல்லைத் தீம்பாணி" என்று குறிப்பிடப் படுகிறது..

‘சரிகபத ‘ என்பது அதன் சுரம்.

இந்த முல்லைத் தீம்பாணி தான் இன்றைய"மோகனராகம்"

கர்நாடக இசை என்ற பெயர் எப்படி வந்தது?

தியாகராஜர் சென்னையைத் தாண்டிப் போனதே இல்லை.

ஒருமுறை திருப்பதி போனதாக தகவல்.

அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே?

கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.

பெயர் மாறினால் என்ன?

ருக்மிணி தேவி அருண்டேல் சின்னமேளம் அல்லது சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார்.

பெயர் மாறினால் மரபு மாறுமா?

கேரளத்திலிருந்து திருவிழா ஜெய்சங்கரும்,ஆந்திராவிலிருந்து லால்குடி ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள்?

ஆபிரகாம் பண்டிதர் பற்றி...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் மங்கியிருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்..

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்திய இசை ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக,
தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர்..

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள் இன்றைய கருநாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.

இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார்.

இராகங்களை உண்டு பண்ணும் முறை,பாடும் முறை ஆகியவற்றை
பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கிக் காட்டினார்.

அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன..

பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917இல் பெரும் இசை நூலாகக் 'கருணாமிர்த சாகரம்' என்ற பெயரில் வெளியிட்டார்.

1395 பக்கங்கள் உடையது இந்நூல்.

இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது...

பழந்தமிழர் திருமண மரபு...


திருமணம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது..

பழந்தமிழர் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர்.

மணச்சடங்கினை பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில், பழந்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்..

எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன; பின்னர் இந்தச் செயல்பாட்டில் பொய்மையும், வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மணத்தைக் குறிக்க பல்வேறு சொற்கள் பழந்தமிழரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடி, மணம், மன்றல், வதுவை, வதுவை மணம், வரைவு என அவை நீளும்.

சான்றாக, கல்யாணம் என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக் கோவையிலும் அமைந்துள்ளது.

கடி என்ற சொல்லுக்கு காப்பு என்று பொருள் கூறுவர். கடிமகள் வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து என்ற குறிப்பால் காப்பு என்ற பொருளில் கடி என்ற சொல் இடம் பெறுவதையும் காணலாம்.

சீவக சிந்தாமணியில் கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும், கடிமணம் எய்தும் களிப்பினால் என்றும் வருகிறது.

சங்க இலக்கியங்கள் வாயிலாக தமிழரின் மணமாக மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவிய மணம், மடலேறிய மணம் ஆகிய மண முறைகளைக் காணமுடிகிறது.

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம்பெற்ற மண முறைகளைத்தவிர, பொருத்தம் பார்த்தல், மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்களுக்கு உணர்த்துதல், மணவினை நிகழும் இடத்தை அலகங்கரித்தல், சிறப்பு இறைவழிபாடு செய்தல், மங்கல ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர் திருமணத்தை பெண் வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டனர்.

களவொழுக்கம் காரணமாக உடன்போக்கு நிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்துகொள்வதும் மரமாக இருந்துள்ளது.

கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. இதை,

நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே!

என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம்.

ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது.

பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின்படி பரிசம் போடுதலும், பெண் வீட்டில் திருமணம் செய்தலும் இடம்பெறுவது தமிழர் வழக்கமாக இருந்திருக்கிறது.

காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்துள்ளது.

இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப இறைவன் முன்னிலையில், திருமணக்கூடம், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம்பெறுகிறது.

பழங்காலத் தமிழரின் மண மரபில் இடம்பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் காணப்பட்டாலும் புதியவைகளும் இடம்பெற்றுள்ளன.

பழந்தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம், பெருங்கதையில் காணப்படுகிறது. காப்பு நூல் கட்டுதல், மங்கல நீர் கொண்டு வருதல், மண மக்கள் ஒப்பனை, மணமகன் அழைப்பு, அம்மி மிதித்தல், பாத பூசை செய்தல், அருந்ததி காட்டல், அறம் செய்தல், மங்கல அணி, சீதனம் கொடுத்தல் முதலிய புதியவைகளும் இடம்பெற்றன.

தமிழர்கள் திருமண முறைகள் பலவாக இருந்தாலும், இருமணம் ஒத்தே வாழ்க்கை நடத்திக் குடும்ப முறைகளைப் பாரம்பரியமாகப் பறைசாற்றி வருகின்றனர் தமிழர்கள்...

இன்று பிறந்த நாள் காணும் நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்துக்கள்...


பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது..

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்...

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும்.

திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக் கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்க முடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்...

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்...

விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு.. உஷார் மக்களே...


கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்..

இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?

மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன..

அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை.

அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே..
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்..

அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து. மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக் கொள்வதே சிறந்தது...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்தியா தான் என்பதை புரிந்துக் கொள்ளாதவரை தமிழனை யாராலும் காக்க முடியாது...


சூரிய கிரகணத்தை பற்றி நாங்கள் சொல்லும் போது கேலி செய்தவர்கள் ஒருவன் அதை கதை களமாக வைத்து ஒரு படம் எடுத்து வெளியிடுகிறான்...


அதுவும் நமது கருப்புகளை தவறாக சித்தரித்து வெளியிடுகிறான்...

எதிரி எவ்வளவு வேகமாக இருக்கிறான் என்று கொஞ்சம் யோசித்து பின்பு நாங்கள் சொல்லுவதை சிந்தித்து பாருங்கள்...

கலவரத்தை தூண்டு விதமான அறிக்கை , பாஜக எச். ராஜா சர்மா மீது வழக்கு பதிவு செய்யலாம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்ட நபரை, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் கொலை செய்தார்கள் என எச். ராஜா சர்மா அறிவிக்கை விடுத்தார்.

போலிஸ் விசாரனையில் கொலை சொத்து தகராறில் நடைபெற்றுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே இரு மதத்தினருக்கிடையே கலவரத்தை தூண்டும் விதத்தில் எச் ராஜா சர்மா அறிவிக்கை விட்டது கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு உள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் , புகாருக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் எச். ராஜா சர்மா மீது வழக்கு பதிவு செய்யலாம் என திருவல்லிக்கேணி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது...