26/11/2017

தமிழா சிந்தித்து எழு...



சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி..

தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது..

விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது ..

கலையும் பண்பாடும் சீர்குலைந்தது..

ஆரிய வைசிய மகாசன சங்கம்,
நாய்டு மகாசன சங்கம்,
தெலுங்கு மகாசன சங்கம்,
கேரளா மகாசன சபை,
சௌராஷ்டிர அமைப்புகள்,

போன்றன முளைத்துவிட்டன..

ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது திராவிடம்...

தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்தியமும் திராவிடமும் தான்..

நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு..

திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..

இன பற்று கொள்ளத வரை எழ முடியாது, எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..

சினம் கொள்ள மறுத்தால்
நீயும் ஒரு பிணம்...

தமிழர்நாடு தமிழர்களுக்கே...

கியூபாவின் தந்தை பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம்...


இவரை  638 முறை கொலை செய்ய  முயற்சித்தார்கள், அனைத்திலும் தப்பித்தார். 

26.11. 2016 இயற்க்கை எய்தினார். சிறந்த போராளி..

விதைத்தவன் உறங்கினாலும்,
விதை ஒரு நாளும் உறங்காது..

-  ஃபிடல் காஸ்ட்ரோ...

எல்லாம் இயற்கை வளங்களை சுரண்டி வெளி நாடுகளுக்கு அனுப்பி இந்தியா வை பாலை வனமாக மாற்றும் திட்டமே சாகர்மாலா...


தமிழினத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



நீ எங்கு இருக்கிறாய் என்று
இன்றளவும் யாருக்கும் தெரியாது...

என்ன ஆனாய் என்று யாராலும்
அறுதியிட்டு சொல்ல முடியாது....

ஆனாலும் நீ இருக்கிறாய்...

ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
இதயமாய்..
வீரத்தின் உதயமாய்...

உலகம் வியந்த மாமனிதனே..
சிங்களவன் பயந்த தமிழனே.

அந்நியனை விரட்ட
அனலாய் திகழ்ந்தவனே..

அகிம்சை போதித்த
அண்ணல் வழி செல்லாதவனே..

நீ எங்கு இருந்தாலும்
இருக்கிறது உன் வீரம்
உன் பிறப்பை போற்றும்
என் போன்ற
இளைங்கர்களிடம்
வித்தாக..

நீ என்ன ஆனாலும் இருக்கிறது
உன் தீரம் உன் பெருமை போற்றும்
ஒவ்வொரு தமிழனிடமும்
சுதந்திரத்தின் சொத்தாக....

வரலாற்றில் எழுதப்பட வேண்டிய
ஈழத்து சிங்கமே..

ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நித்தமுமே..

பிராபகரன் என்று உன் பெயர்
சொல்லும் போதெல்லாம்....

வீரம் என்னில் நிறைகிறது
என் கைகள் தமிழன் என்று சொல்லி
உமக்கு சல்யுட் அடிக்கிறது...

மாணவர்கள் எந்த பிரச்சனை என்றாலும் 1098 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து பேசலாம்...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்காமல்
தமிழ் தேசியம் என்று பேசி..

இந்தியத்தின் அடிமை சிறை நேசிப்பவர்கள்
யாராக இருந்தாலும்..

அவர் எம் இனத்தின்
துரோகியே...

தமிழக அரசால் கோவையில் ஒருவர் மரணம்...


தமிழினமே விழித்தெழு...


சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது..

முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?

நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.. இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்..

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது..

தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்..

வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது.

அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது..

தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்..

கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது..

ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் சமஸ்கிருதமும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன..

இதுதான் திராவிடம் செய்த கோலம்..

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது..

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர.. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்..

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும்..

தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...

திமுக வும் டூபாக்கூர் வாக்குறுதிகளும்...


தமிழினத் தலைவர் மேதகு வே. "பிரபாகரன்" என தலைப்பிடப்பட்ட நூலிலிருந்து....


தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் (1984) தங்கியிருந்த போது பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் முதன் முதலாக நேர்காணல் நடத்த காத்திருந்தார் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்....

சூப்பர்மேன் வருவாரென எதிர்பார்த்திருந்த அனிதா சற்று உயரம் குறைவாக வந்தமர்ந்த தலைவரைப் பார்த்து இயக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்த அனிதா, ஜன்னலுக்கு வெளியே தலைவரைத் தேடி தன் பார்வையை ஓட்டினார்.

புரிந்து கொண்ட தலைவர்.. சற்று மௌனத்திற்கு பிறகு 'நான் தான் பிரபாகரன்' என்றவரின் மென்மையான குரலைக் கேட்டதும் அனிதா வியந்தாராம்.

அவரது நேர்காணலில்..

எதிர்காலத்தையும் எதிரிகளையும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலும், அவருடைய ஒரே இலக்கு தமிழீழத்தை தவிர வேறில்லை என்பதும், அவர் எவ்வளவு கூர்மையாக உன்னிப்பாக நிகழ்வுகளை விடயங்களை உற்று நோக்குகிறார் என்பதும் புரிந்தது.

மேலும் தலைவர் சொன்ன விடயம், (இந்த விடயத்தை அனிதா பிரதாப் வெளியிடவில்லையாம்) என்றாவது ஒரு நாள் நாங்கள் இந்தியாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம்.

(அதாவது இந்திய அமைதிப்படையுடன் பின்னாளில் ஏற்படப்போகும் போரினை முன்கூட்டியே கணித்திருக்கிறார்).

இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சியடைந்து
இந்தியா உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோறூட்டும் கைகளையே கடிப்பீர்களா? என வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த தலைவர், தமிழீழம் அமைவதை இலங்கையை விட இந்தியா விரும்பாது. ஏனென்றால் இந்தியாவில் ஐந்துகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாராம்...