24/12/2017

89013 வாக்குகளை பெற்று டிடிவி தினகரன் வெற்றி...


திமுக பாஜக உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு...

அதிமுக 47115 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது...

அதிமுக வளர்மதியை காணவில்லை...


மக்களுக்கு எங்க மேல ஏதோ கோபம் போலருக்கு - செல்லூர் ராஜு...


எங்களை எதிர்ப்பதாக இருந்தால் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டிருக்க வேண்டும் , தினகரனுக்கு நாங்கள் தான் சென்ற முறை வாக்கு கேட்டோம் , எங்களுக்கு தோல்வி அல்ல - செல்லூர் ராஜு பேட்டி...

ஒபிஎஸ் இபிஎஸ் அணி எம்பி செங்குட்டுவன் டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு...


பாஜக இறுதிவரை நோட்டாவுடன் போட்டி போட்டு.. 1000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது....


நோட்டா - 2203
பாஜக. - 1236

வைகோ நாயூடு மற்றும் விசிக கூட்டணி என்றால் சும்மாவா...?


சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் முன்னிலையாம்  ஆனால் பல கட்சி சேர்ந்த திமுக மூன்றாமிடமாம்...

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஓகேனக்கல் க்கு சுற்றுலா வந்த போது காவிரி ஆற்றில் முழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி...


கர்நாடக மாநிலம் பெங்களுரு மாவடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமண் இவருடைய மகன் சந்தோஷ் வயது (18 பெங்களுரு உத்தர அள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவருடைய மகன் எஸ்எஸ் 18 இவர்களுடைய நண்பர் கள் நந்தகுமார்  , சூர்யா, அருள், பிரதீல், காத்திக், இவர்கள் அனைவரும் ரகுனஅள்ளி பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்த நிலை நேற்று முன்தினம் பாலிடெக்னிக் தேர்வு முடிவடைந்து, 8 பேரும் நேற்று ஓகேனக்கல் சுற்றுலா வந்தனர்  பின்னர் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நண்பர்கள் 8 பேரும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்து கொண்டு இருந்தனர்...

அப்போது மாணவர் சந்தோஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு  தண்ணிரில் இலுத்து செல்லப்பட்டு  தத்தளித்தார், இதனால் பாலாஜி எஸ் எஸ் ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர் இதில் நன்பர்கள் 3 பேரும் அடுத்து அடுத்து தண்ணீரில் முழ்கினர் இதைக் கண்ட மற்ற நண்பர்கள், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்,

மேலும் இது குறித்து ஓகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் போலிஸ் நிலைத்திற்கும் அவர்கள் தெரிவித்தனர்...

அதன் பேரில் போலிசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 3 பேரையும் பரிசல் ஓட்டிகள் மீனவர் கள் உதவியுடன் பரிசலில் சென்று தேடினர் காவிரி ஆற்றில் 3 கல்லூரி மாணவர்கள் மூழ்கிய சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ், தாசில்தார் சேதுலிங்கம் , போலீஸ் இன்பெக்டர் முனுசாமி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு நண்பர் களிடம் விசாரனை நடத்தினர்...

மேலும் அவர்கள் தேடும் பணியை துரிதப்படுத்தி ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன, பின்னர் அவர்களுடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் இது குறித்து ஓகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

விழித்துக்கொள் தமிழா...


அரசு தரவேண்டிய தண்ணீரை தனியார் விற்பதும், தனியார் விற்க வேண்டிய டாஸ்மாக்கை அரசு விற்பதும் அவர்களின் முட்டாள்தனம் இல்லை... நம் முட்டாள்தனமே...

என்னைக்கு இந்த தண்ணீர் பாட்டில் வந்துச்சோ.., அன்னைக்கு ஆரம்பிச்சது தான் தண்ணீர் பஞ்சம்.. என்ற வசனத்தில் ஆழமான உண்மை உண்டு...

தாமிரபரணி நாடு...


குறவருக்கும் (கௌரவர்).
பாண்டியருக்கும் (பாண்டவர்).
நடந்த போரே மகாபாரதம்.

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.

பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரைபடத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்..

குந்தியின் மகனே..
மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்ட போது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு...

இசைத் தோற்றம்...


ஓசையுலகம் : கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்க பெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை: மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்து கொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு: இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு: இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்...