15/05/2018
பொதுத்தேர்வுகள் எழுதி, அதன் மதிப்பெண் பட்டியலுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை ஒருபோதும் யாருக்கும் வழங்கி விடாதீர்கள்.. இது உங்கள் வாழ்க்கை..
நீங்கள் இப்போது எடுக்கப்போகும் முடிவு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள் என்பதே தீர்மானிக்கும்..
அது வெற்றியோ (அ) தோல்வியோ அதைப்பற்றி கவலை படாதீர்கள்..
தோல்வி அடைந்தால் பெருமை கொள்ளுங்கள், வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறேன் என்று,
இந்த பதிவைப்போடும் நானும் அந்த பெரிய தோல்வியை சந்தித்தவனே..
வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் அந்த வெற்றிக்காக, ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.
ஏனெனில் உங்கள் வாழ்க்கை இந்த வெற்றியோடு முடிய போவதில்லை...
மனமும் குடும்பமும்...
இந்த பிரபஞ்சத்தின் அங்கமான நாம் பஞ்சபூத தத்துவமான உடலை எடுத்துள்ளோம். அதன் பாதுகாவலனாக மனம் என்கிற தன்முனைப்பு இயக்கம் செயல்படுகிறது.
இந்த மனம் பல்வேறு பிறவிகளாக பரிணிமித்து ஒரு குடும்பமாக சேர்ந்து வாழ விரும்பியுள்ளது. எனவே நாம் கடந்த பிறவிகளின் உறவுகளோடே மறுபிறப்பு எடுக்கிறோம்.
ஆனால் அதே உறவு முறையில் பிறப்பதில்லை. கடந்த பிறவியில் எனக்கு அண்ணனாக இருந்தவர் தற்போது தந்தையாகவோ மகனாவோ நண்பனாகவோ இருக்கலாம்.
கடந்த பிறவியில் அவரை நான் எப்படி பாவித்தேன் என்பதில்தான் இன்றைய உறவுமுறையே அமையும். நான் யாரை எப்படி பாவித்தேனோ அப்படி.
சமீத்தில் நடைப்பெற்ற முற்பிறவி பற்றிய ஆய்வில் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஒரே சமூகமாகவோ பிறப்பெடுக்கிறோம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த பிறவியில் நாம் சந்திக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் கடந்த பிறவியில் பரிச்சயமானவர்களே. மனதின் செயல்பாடு அவ்வாறே அமைந்துள்ளது.
உங்கள் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த பிறவியில் நீங்கள் ஆசைப்பட்டதால் கிடைத்தவர்களே. ஆம் உங்கள் தாயாகட்டும் தந்தையாகட்டும் மகனாகட்டும் சகோதரராகட்டும் அனைவரும் உங்கள் ஆசையால் உண்டானவர்களே.
இப்பேற்பட்ட இந்த அற்புதமான உறவுகளை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்று நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தயவுசெய்து உறவுகளை நேசியுங்கள். நீங்கள் உதாசீனப் படுத்தினால் அடுத்த பிறப்பில் இவர்கள் வேறு எங்கோ பிறக்க நேரிடும். இந்த புனிதமான உறவு இயற்கை அருளிய வரம்.
யார் என்ன தவறுகளை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து மறந்து அன்போடு பழக கற்றுக் கொள்ளுங்கள். வாழ்கை என்பது எல்லையில்லா பேரறிவால் வழங்கப்பட்ட ஓர் மாபெரும் வரம். இது உங்கள் குடும்பம். தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான பதிவுதான்...
வெண்டையை சாப்பிட்டால்...
புத்தி சரியில்லாதவன் வெண்டையை சாப்பிட்டால் விவரமாகி விடுவான். என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை.
வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வெண்டைக்காயில் உயர்தரமான எரியம் (phosphorus), தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல... மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாசைகளில் ஒன்றான சுவாகிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `பெண்களின் விரல் (Ladies finger)’ என்று அழைக்கின்றனர்.
பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு (Salad) சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி கோப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘விருந்துகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.
இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.
வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது. காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.
பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்... ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.
சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.
வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வெண்டைக்காயை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் நெகிழி (Plastic) பையில் போட்டு காய்கறி வைக்கும் தட்டில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.
வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் உயிர்ச்சத்து சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். வெப்பமான இருமலைக் குணமாக்கும். வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய சேதம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.
நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்...
இதையெல்லாம் என்னிடம் நானே கேட்டுக்கொண்ட பிறகு கிடைத்த பதில் தான் - நான் அடிமை...
இங்கு நடந்த- நடக்கின்ற- நடக்கப்போகும் என எல்லா அரசியல் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வலி எனக்கு நிறையவே இருக்கிறது..
இதில் முதல் குற்றவாளி நானே..
அடுத்த தலைமுறை கேட்கும் ஒவ்வொரு அறிவு மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை..
அந்த கேள்விக்கான பதிலை தற்போது தேடிக்கொண்டு இருக்கிறேன், தேடலின் பயணத்தில்...
Subscribe to:
Posts (Atom)










