30/08/2018
உடல் நலத்தை பாதுகாக்கும் புடலங்காயின் மருத்துவ குணங்கள்...
புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு.
புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது.
புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். விதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.
மருத்துவப் பயன்கள் :
100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரதச்சத்து புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளி யேற்ற வல்லது.
மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது. புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ் கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. புடலங்காய் முறைக் காய்ச்சலை போக்க கூடியது.
எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் முறைக் காய்ச்சல் மறைந்து போகும். புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.
பேய்ப்புடலின் மருத்துவப் பயன்கள்:
இது இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது-. தோல் நோய்களை விரைவில் குணப்ப டுத்த வல்லது. கிருமிகளை அழிக்கவல்லது. பசியைத் தூண்டக்கூடியது. மலத்தை இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது, பித்தநோய்களைத் தணிக்ககூடியது. ஈரலைப் பலப்படுத்த வல்லது. இதனுடைய வயிற்றுப் புழுக்களைக் கொல்லக்கூடியது.
காய்ச்சலைத் தணிக்ககூடியது. இலைகள் மேற்பூச்சாக பூசுவதால் தலையில் திட்டுதிட்டாக முடி உதிர்ந்து ஆங்காங்கே வழுக்கை போல் தோன்றுகின்ற புழுவெட்டு குணமாகும். டிரைகோ சாந்தஸ் குகுமெரினா என்பது பேய்ப்புடலின் தாவரப்பெயர் ஆகும். அமிர்தபலா, வனபட் டோடா என்பவை அதன் வடமொழிப் பெயர்கள் ஆகும்.
பேய்ப்புடலின் இலைகளை மைய அரைத்து பசைபோல் ஆக்கி தோல் நோய்களின் மீது பூசி வர எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தோலில் நீர் வடியச் செய்யும் கொப்புளங்களோடு நமைச்சலும் தருகின்ற துன்பம் விரைவில் குணமாகும்.
பேய்புடல் இலைகள் நான்கு அல்லது 5 இலைகளை எடுத்து சுத்திகரித்து ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறவைத்து எடுத்து வடிகட்டி ஆறாதபுண்கள், நாற்றமெடுத்து புழுக்கள் வைத்த புண்கள், சர்க்கரை நோயால் வந்த கட்டிகள் ஆகியவற்றின் மீது ஊற்றிக் கழுவி வர விரைவில் குணமாகும்.
இலைப் பசையை நாட்பட்ட கட்டிகள், சீழ்வடியும் ஆறாப் புண்கள் ஆகியவற்றின் மேல் பூசும் மருந்தாகவும் பயன்படுத்த விரைவில் அவை ஆறிவிடும்.
பேய்ப்புடல் இலையைக் கொழுந்தாக எடுத்து நான்கைந்து இலைகளை ஓர் டம்ளர் அளவு நீர்விட்டு கொதிக்கவைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுப்போக்கினை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யும்.
இலையை அரைத்துப் பிழிந்த சாறு 5 முதல் 10மி.லி வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியாகி பித்தம் வெளியேறும்.
இலைச்சாற்றை தலையில் தேய்த்து வைத்திருந்து சிறிது நேரம் சென்று குளித்துவிட தலைமுடி கொட்டுவது நிற்கும்.
இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும். புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.
இந்நிலையில் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் புடலம் இலையைக் கசக்கித் தயாரித்த சாற்றை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வைத்திருந்து பின் தலைக்கு குளிப்பதும் என்கிற பழக்கம் விரைவில் குணம் தர ஏதுவாகும்.
உடலில் பித்தம் அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, குமட்டல், ருசியின்மை என்ற தொல்லைகள் தொடர்ந்து துன்பம் தரும் போது புடலங்கொடியின் இலைச் சாற்றை தீ நீராக்கி அத்துடன் கொத்துமல்லிச்சாறு அல்லது தனியாத் தூள் சேர்த்துக் காய்ச்சி சுவைக்க பனங்கற்கண்டு சேர்த்து பருகுவதால் பித்தம் தணிந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கடுமையான காய்ச்சல் ஏற்படும் போது 50கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் அதில் சம அளவு சேர்த்து மல்லி இலையையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறலைக் குடித்து வர கடுங்காய்ச்சலும் தணிந்து போகும். இந்த தீநீர் பித்த சம்பந்தப்பட்ட நோய்களையும் நாவறட்சி, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணமாக்கும்.
கீல்வாதம் என்னும் மூட்டுவலி என்னும் நோயால் பாதிக்கப்படுவோர் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி உள்ளுக்கக் குடிப்பதாலும் வலிகண்ட இடங்களில் மட்டுமின்றி உடல் முழுதும் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் நாளடைவில் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு கல்லீரலிலும் ஆரோக்கியம் திகழும்.
30முதல் 50கிராம் வரை எடையுள்ள புடலங்காயைக் கொடியின் இலைகள் இளசாக தேர்ந்தெடுத்து சமபங்கு கொத்துமல்லி இலை சேர்த்து நீரிலிட்டு ஊறவைத்து காலையில் அதன் தெளிந்ந நீரைக் குடித்து வருவதால் நாளடைவில் மஞ்சள்காமாலை மறையும்.
புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.
நன்கு முற்றிப் பழுத்த புடலையின் விதைகளை மட்டும் நீக்கி விட்டு விதையை உலர்த்தி வைத்து கொண்டு இரவில் நீரிலிட்டு ஊற வைத்திருந்து காலையில் அதன் நீரைப் பருக பேதியாகும். இதனால் குடல் சுத்தமாகும். புடலங்காயின் விதைகளை பேதி மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
புடலம் வேரை 5முதல் 10 கிராம் வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி குடிக்க பித்தத்தைப் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றும்...
பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய் விடுமாம்...
பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும்.
கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.
எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.
நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
1 : அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.
2: உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
3: உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.
4: தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
5: தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.
6: சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.
7 : உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.
8: 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்...
கேரளாவில் வெள்ளத்தால் நின்று போன திருமணம்.. இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்...
கேரளாவின் மூணாறில் உள்ள சுப்பிரணியசாமி கோயில் அருகே விஜயன் மற்றும் முனியம்மா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் சரண்யாவிற்கு செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அவர்களது வீடு மற்றும் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதில் சரண்யாவின் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகளும் அடக்கம்.
இதனால் சரண்யாவின் திருமணம் நின்று போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட மூணாறில் டீக்கடை வைத்திருக்கும் மரியான் என்பவர் திருமணத்திற்காக ரூ 10 ஆயிரம் நிதி அளித்தார். இதனை தொடர்ந்து மேலும் பலர் உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.
இதனால் மகளின் திருமணத்தை குறிப்பிட்ட தேதியில் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர் சரண்யாவின் பெற்றோர்...
பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள்...
பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ?
அது மட்டுமின்றி, பர்மாவின் புகழ் உலகமெங்கும் கோடிகட்டி பறந்த காலமும் இருந்தது.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், உலக சமாதானமும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஒங்கவேண்டும் என்பதற்காக ஐம்பெரும் தலைவர்கள் செயலாற்றினார்.
இந்திய உபகண்டத்தின் பண்டித நேரு, சீனத்து சூயேன்லாய் இவர்களுக்கு இணையாகப் பணியாற்றிய பர்மிய நாட்டு தலைவரும் ஒருவர்.
ஆசிய ஆபிரிக்க மாநாடு பாண்டாங் மாநாடு என 20 ஆம் நுற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த வியக்கத்தக்க உலக சாமாதான செயல்பாடுகளாகும்.
1975 இல் இயற்கை அடைந்த ஏந்தல் ஊத்தான் எனும் பெருமகன் உலக நடுகல் மன்றத்தின் பொதுச் செயலாளாராக இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு போரிலிருந்து உலகை மீட்டவர்களை குறிப்பிடத்தக்கவர் இவர் என்பதை உலகம் அறியும்.
இரண்டாம் உலக போரின் கொடூரம் ஆசியாவை உலுக்கி எடுத்ததை யாரும் இன்று வரை மறந்திருக்க முடியாது.
நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லிக் கொள்வதில் பயனில்லை என்பது எங்களுக்கு படுகிறது.
அதன் வழியில் 50 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட இடத்தில் தள்ளாடித் தள்ளாடி எங்கள் வலுவுடன் எழுந்து நிற்கின்றோம் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உணர்வோடு கால்நூற்றண்டுகளுக்கு மேலாக பர்மிய நாட்டு தமிழர்கள் புத்துணர்வுபெற வேண்டும் என்பதற்காக கடும் நெருக்கடிக்கிடையிலும் கட்சி பேதங்கள் காட்டாது சமய வெறி கொள்ளாது.
தன்மான உணர்வுடன் சுயமரியாதை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக முற்போக்காளர்கள் அணிதிரண்டு செயலற்றியதன் விளைவால் இன்று பல பிரிவில் தமிழுணர்வும் தன்மான எழுச்சியும் பெற்று வருவது குறிப்பிடதக்கதாக இருந்தாலும் முழு மன நிறைவு கொள்ள இயலாது தவிப்புடன் இருப்பதை காண முடிகிறது.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது முற்போக்கு அணியினரின் நம்பிக்கை சுடராகும். 1962 ஆம் ஆண்டிற்குப்பின் பர்மா தமிழர் வெளி உலகில் இருந்து ஒதுங்கி விட்டனர் எனபத? ஒதுக்கி வைக்கபட்டு விட்டனர் என்பதா? எதுவும் விளங்க வில்லை இருப்பினும் உலகெங்கும் பறந்து வாழும் தமிழர்களுக்கு இணையாக இருக்க முடியாது போனாலும் பர்மாவில் தமிழர்கள் தமிழர்களாகவே கலை கலாச்சாரம் பண்பாடு குன்றாது வாழ்ந்து வருகின்றனர் பர்ம தமிழர்கள் கலை கலாச்சாரம் பண்பாடுகள் மாறாமல் வாழ்த்து வருகிறார்கள் என்று உலகமும் தமிழ் சமூகமும் அறிய வேண்டும். உலக மயமாக்கல் மத்தியிலும் இந்த சமுதாய சீரழிவுகள் மத்தியிலும் பர்மா தமிழர்கள் தமிழர்களாகவே வாழ்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்திய விடுதலைக்கு நேதாஜியின் தலைமையில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தில் உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈந்து விடுதலைப் போராட்டத்தில் குழுப் பங்கு கொண்ட தியாகத்தின் சிகரங்களாக தமிழர்கள் இருந்தபடியால்தான் எனக்கு மறுபிறவி இருக்குமானால் அப் பிறவியில் நான் ஒரு தமிழனாக பிறக்கவேண்டுமென நேதாஜி கூறினார் என்றால் தமிழரின் விடுதலை வேட்கையும் நாட்டு பற்றும இனப்பாசம் இவைகளையும் குறைத்து மதிப்பீடு செய்து விட முடியாது. இப்படி நேரு உரையில் குறி இருப்பதுடன் ஈழத்து இனப்படுகொலை நடைபெற்றதையும்.
தமிழ் உள்ளத்தோடு தொலை நோக்கிறோம் பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ? மொரீசியஸ்,பிஜிதீவுகள், ஆபிரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா (தமிழ் நாடு) என தமிழர்கள் தத்தம் சிறப்புகளை அடையாளப்படுத்தும் பொழுது எங்களுக்கு (பர்மா தமிழர்கள்) சின்ன இடம் கூட கிடைக்க வில்லையே என்பது எங்கள் மனதை வாட்டி எடுக்கிறது.
தமிழைப் பேசி தமிழை வளர்ப்போம் என்று பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம் என முழங்கி வருவதுடன் கோவில்களிலும் தமிழ் போதிகப் பட முயற்சிகள் மேற்கொள்கிறோம்.
இத்தனை காரியங்கள் தொடர்ந்து செய்தாலும் எங்களை அடையாளம் காணப்படாது போய் கொண்டு இருப்பது ஊமைகள் பேசுவதாக பார்கிறார்கள் என்றோ தோன்றுகிறது ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பதே உறுதி..
Subscribe to:
Posts (Atom)









