21/09/2018

நாம் இருவர்... நமக்கு நால்வர்...


குழந்தைகள்  பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கிறார்களா, அவர்கள் நம் குலத்தை அழிப்பதற்கும் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்..

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்லப்படும் பதினாறு செல்வங்களும் குழந்தைச் செல்வமும் ஒன்று.

குழந்தையே ஒரு வீட்டின் முதல் செல்வம். குழந்தைச் செல்வமில்லாமல் பெரும் பணமிருந்து யாருக்கு என்ன பயன் ?

குழந்தைகள் அதிகமிருக்க அதிகமான  செல்வம் அந்த வீட்டில் சேரும். அந்தக் குழந்தைகள் தங்கள் காலங்களில் அந்த வீட்டை தலைநிமிர செய்து விடுவார்கள்.

எந்த செல்வமும் இல்லாத ஏழை சந்தோஷமாக இருக்கிறான் என்றால் அவனது குழந்தை செல்வங்களே காரணம்.

ஆகவே நிறைய குழந்தகில் பெற்றுக் கொள்ளுங்கள்...

அறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்...


கடினமாக உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை பூச்சிகளும், எலிகளும் தின்று சேதப்படுத்தி விடுகின்றன. அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் தானியங்களை தான் இந்த உயிரினங்கள் குறிவைக்கின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வந்த தானியங்களை தகுந்த வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

நெல்மணிகள் அறுவையின் போது 62 சதவீதம் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டும். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் காய வைக்க கூடாது. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, நெல் மூடைகளை அடுக்க வேண்டும். அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

பாஜக கொத்தடிமை அதிமுக கலாட்டா...


18 வயது மாணவியை இழுத்து கொண்டு ஓடிய 17 வயது மாணவன்.. பின்னர் நடந்தது என்ன தெரியுமா...


திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் ஒரு புகார் அளித்தார். அதில், கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், எப்படியாவது தனது மகளை மீட்டுத் தருமாறும் கூறியிருந்தார்.

 இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதன்படி கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்டவரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்றனர். அங்கு போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது பெண்ணை கடத்தியவருக்கு வயது 17 என்றும், பெண்ணிற்கு வயது 18 என்றும் தெரியவந்தது.

 கடத்தப்பட்டவரின் வயதை அறிந்ததும் போலீசாருக்கு ஷாக்! பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரண்டு பேரும் கடந்த 31-ம் தேதியே கல்யாணம் செய்து கொண்டு குடும்பமும் நடத்தி வருவது தெரியவந்தது. இது அடுத்த ஷாக்!! இரண்டு பேருக்குமே இது திருமண வயது கிடையாது.

சட்டத்திற்கு புறம்பான முறையில் கல்யாணம் செய்து கொண்டதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிளஸ்-2 தானாம் உடனடியாக கடலாடி போலீசார், இரண்டு பேரையும் அழைத்து கொண்டு, நீதிபதி முன்பு நிறுத்தினார்கள். எதிரில் வந்து நின்றவர்களின் வயது, மற்றும் திருமணம் செய்த விவரத்தையும் கேட்டு நீதிபதியும் ஷாக் ஆனார்.

அந்த பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாராம். அந்த சிறுவன் இப்போதான் பிளஸ் 2-வாம்! நீதிபதி உத்தரவு பின்னர், "17 வயதான சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும், அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று கடலாடி போலீசாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்...

சிலை கடத்தல்காரன் டிவிஎஸ் சீனிவாசன்...


விசிக ஒரு தலித் கட்சியா?


திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.

அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டு பிடித்தனர்.

கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.

ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.

பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.

பிள்ளைமார்களும் கொடுத்து விட்டனர்.

இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போக மாட்டேன் என்று கூறியதோடு, புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.

தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.

அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்து விரட்ட அந்த மோதலில் சிவக்குமார்  என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்து விட்டார் (02.08.2017).

ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,

தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?

இயற்கை...


நம்பிக்கை...


நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதர்களும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே.

ஆனால், தெய்வ சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஒருவன் செயல்படும்போது, அவனது திறமையின்மைகூட திறமையாக மாற்றப்பட்டுவிடும்.

- ஸ்ரீஅரவிந்தர்..

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

- யாக்கோபு 1:27...

நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) மனிதர்களுக்கு எந்தவித அநியாயமும் செய்யமாட்டான். எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றார்கள்.

- திருக்குர்ஆன் 10:44...

தூத்துக்குடியில் காவல்துறை அராஜகம்...


ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.

கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை..

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.

மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை..

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல. அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும் அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...