25/11/2018

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு....


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் வைத்தியரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை...

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ச(ஜ)வ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்...

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்.. மூத்த குடி தமிழன்.. அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ…


பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர்.

இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது.

மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.

உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது.

இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர்.

இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார்..

அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார்.

பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.

தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்..

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்..

அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல..

அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது..

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ..

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்..

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்..

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்..

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு (தெலுங்கு), தா (இலத்தின்)].

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல் (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை).

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்து கொண்டிருத்தல். [எ.கா: இல் (தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்)].

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன].

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத் தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்...

பாஜக தீவிரவாதிகள் அரசு பேருந்துகளை உடைத்துள்ளனர்... இதற்கு அடிமை அதிமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது...


கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்...


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி - அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்து விடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கி விடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்...

தன் சொந்த மண்ணில் ஒருத்தன் தன் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழக்கும் போது அங்கு அவன் மறைமுகமாக அழிக்கப்படுகிறான் ( இனப்படுகொலை ) என்று அர்த்தம்...


ஆனால் அதைத்தான் இங்கு வளர்ச்சி என கூறுகிறார்கள் படித்த அறிவாளிகள்..

சென்னை நண்பர்களே இதை புரிந்துக்கொள்ள முயலுங்கள்..

இது தமிழர்கள் அனைவருக்கும் பொருந்தும்...

கொள்ளைபோன கொள்ளேகால்...


தமிழகத்தின் வடக்கெல்லை என்றாலே எல்லாரும் வெங்கடத்தைக் காட்டுவர். அது வடகிழக்கு எல்லை மட்டுமே. வட மத்திய எல்லை என்பது சங்ககாலத்தில் காடு. (பெரும்பாலை என்றும் குறிக்கப்படும்).

அக்காடுகளில் சிறு சிறு தமிழ் நாடுகள் இருந்தன. (அவர்கள் தற்போது பழங்குடிகளாக, தனி மொழி பேசும் இனங்களாகத் திரிந்துவிட்டனர்).

பிறகு காடுகளுக்கு அந்தப் பக்கம் கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.

பிறகு தமிழர்கள் கன்னடரை விரட்டிவிட்டு தாம் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.

பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.

இன்றும் தென் கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் தமிழர் கணிசமாக உண்டு.

இதனாலேயே இப்பகுதி பற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழருக்கு சாதகமாகவும்,

முதல் குடியேற்ற சான்றுகள் கன்னடருக்கு சாதகமாகவும்,

கோவில் கல்வெட்டுகள் மற்றும் நகரங்களின் பெயர்கள் மற்றும் மையநகர நிலவுடைமை தமிழருக்கு சாதகமாகவும்,

புறநகர் நிலவுடைமை மற்றும் தற்போதைய மக்கட்தொகைப் பெரும்பான்மை கன்னடவருக்கு சாதகமாகவும் உள்ளன.

இவ்வாறாக வடக்கெல்லையில் மத்திய பகுதி இழுபறியில் உள்ளது.

கர்நாடகா அமைந்த பிறகு அப்பகுதி தமிழ்க் கல்வெட்டுகளை அழித்தும் மறைத்தும் வந்துள்ளது.

இதனால் நமக்கான சான்றுகள் அழிந்துவிட்டன.

நம்மிடம் இருக்கும் மண்மீட்பு சான்றுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் வெளிக்கொணரப் பட்டவையே ஆகும்.

இத்தோடு கன்னடருக்கு சாதகமான சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.

கல்வெட்டு தலைமையகம் மற்றும் வைப்பகம் மைசூரிலேயே இருப்பது இதற்கு காரணம்.

தமிழகதிற்கு தனியே கல்வெட்டு தலைமையகமும் வைப்பகமும் தராத ஹிந்திய நடுவணரசு தமிழகத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு தமிழரை தலைவராக நியமிக்காமலும் நிதி ஒதுக்காமலும் காலி பணியிடங்களை நிரப்பாமலும் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்துவருகிறது.

வரலாற்றில் நமது பகுதியாக இருந்த இடங்கள் நம் கையை விட்டு போனதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழர் 90% வாழ்ந்த சில பகுதிகளும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆந்திராவிடம் உள்ள இன்றைய சித்தூர் தென்பாதி, கேரளாவிடம் உள்ள பாலக்காடு கிழக்குபாதி போல 1956 இல் அன்றைய  பெரும்பான்மை தமிழர் வசம் இருந்தும் அநியாயமாக கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்டது சாம்ராஜ்நகர் கிழக்கான கொள்ளேகாலம்.

தமிழர் செறிந்து வாழ்ந்த இப்பகுதிகளை அண்டை மாநிலங்கள் தமது எல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 95% தமிழர் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் கேரளாவிலேயே இருக்கிறது.

தமிழர் நடத்திய மண்மீட்பு போராட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் திருப்பதி நோக்கியே இருந்தன.

இரண்டிலும் பெரும்பாடு பட்டு பாதி வெற்றியே அடைந்தோம்.

கன்னியாகுமரி போராட்டத்தில் கேட்ட 9 தாலுகாக்களில் நான்கரை தாலுகாக்கள் கிடைத்தன.

திருப்பதி வரை கிடைக்காவிட்டாலும் திருத்தணி வரை கிடைத்தது.

கொள்ளேகால் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த,

வீரப்பனார் பிறந்த பகுதியான இது கன்னடரிடம் உள்ளது...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள்,
லாபத்துக்காக மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்கள், எப்படி மக்களை நடைப்பிணங்களாக மாற்றுகிறார்கள் என்பதை தோலுரித்துள்ளார் டாக்டர் ஜான் ரென்ஜென்.

Pharmaceutical companies that target children...

https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html

https://www.vikatan.com/news/health/139934-drug-companies-are-targeting-kids-with-comic.html

தமிழர்களின் தாம்பூலம் தரிப்பதில் உள்ள உண்மைகள்...


பழந்தமிழர் மரம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விசயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோசங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, சா(ஜா)திபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விசயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது...

தன்னம்பிக்கையும் - வெற்றியும் - ஆரோக்கியமும்...


உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில் போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது நியதி.

இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம் எல்லாம் இரண்டாம் பட்சமே .

உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும்.

நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம்.

நீ எதை கண்டும் பயந்து போகாதே . உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே.

உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு . பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல் .முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு.

ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.

யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே . நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய்.

மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல்.

உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை.  தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார்.  தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும்.

மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும் . முயன்று பார் தெறியும் . முடங்கிவிடாதே.

உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன்.

வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா?  வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல்.  மடிவது குற்றமல்ல. அது போர்க்களமாக இருக்கட்டும்...

உலகின் மிக பெரிய மலர் rafflesia...


இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மலைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது..

இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது..

ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு..

அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்...

இப்பூவின் குறுக்களவு 3 அடியையும் தாண்டும்..

முழு வளர்ச்சியடைந்த இம்மலரின் எடை 7 கிலோ வரை இருக்கும்..

5 கிலோவுக்கும் அதிக தேனை அடக்கிக் கொள்ள முடியும்..

இம்மலருக்கு இன்னொரு விசித்திரமும் உண்டு..

இதன் விதைகள் யானைகள் மூலமே பரப்பப்படுகின்றன..

மற்ற செடிகளைப் பற்றியோ, மண்ணுக்கு வெளியேவோ இதன் வேர்கள் நிலை கொள்கின்றன..

மற்ற தாவரங்களின் ஊட்டச்சத்தையும் உறிஞ்சுகின்றன..

இத்தாவரம் இறந்த பிறகு, ஒட்டும் தன்மை கொண்ட விதைகளை அளிக்கும்..


யானையோ, காண்டாமிருகமோ இதை மிதிக்கும் போது, காலில் ஒட்டிக் கொள்ளும் விதைகள் இடம் பெயர்கின்றன..

ஒட்டியுள்ள வேண்டா பொருளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும் போது, இவ்விதைகள் வேறொரு தாவரத்துக்கு அருகில் முளைவிடத் தொடங்குகின்றன.

அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்...