01/01/2019

251 வயது வரை உலகில் வாழ்ந்த மனிதன் - நம்பினால் நம்புங்கள்...


உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?

நம்பித்தான் ஆகவேண்டும்..

சீனாவைச் சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர்.

இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில்...

இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக..

இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்....

மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி... உண்மையை வெளியிட்டது நக்கீரன்...


இயற்கைக்கு மாறுவோம்...


சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல,‍ கொசுவை ஒழிக்க.. முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்...

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால்  தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது . முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்...

நெகிழிக்கு தடை வர வேண்டும் அதற்கு மாற்று நம் கையில் தான் ஒவ்வொருவரும் திருந்தினால் மாற்றம் நிச்சயமே...


புது ஆங்கில வருடத்திலிருந்து உறுதிமொழி ஏற்று கடைபிடிக்க தொடங்குவோம்...

என்றும் இளமையோடு வாழ எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே...

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்...

ஐ.நா சபையும் இலுமினாட்டி களும்...


அமைதிக்காக போராட கூட நம்மை விட மாட்டார்கள்...

எண்ண அலைகளின் சக்தியும் ஆழ்மன ஈடுபாடும்...


உலகில் நாம் காணும்அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன..

இந்த உண்மையை அணு
விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி
இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.

எதை சாதிக்க விரும்புகிறோமோ
அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காண தீர்வு வழி முறைகள் ஆழ்மனம் பெற்றுத் தரும்..

ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அதுவெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை.

அந்த விருப்பமானது நிறைவேற்ற
முயற்சி தேவை. சரிமுயற்சி செய்கிறோம். எப்போது சாத்தியப்படும்.

விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்திய மாகிறது.

மின்அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.

அணைத்து பொருள்களும் அலை
வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

நமது எண்ணங்களும் அலை வடிவில்
நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.

வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும்.

ஆழ்மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக
இருக்கிறது.

ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

மனிதனின் எண்ண அலைகள்
தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை. ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன்
தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம்.

உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.

ஆழ் மனசக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம்.

அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட..

தனி மனிதனானாலும் சமூகமானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைப் பெறத் தொடங்குகின்றன.

மனதில் அன்பு இருந்தால், அன்பு
மிக்க சமுதாயம் உருவாகும்.
எண்ணுதல் முடிதல் வேண்டும்..
நல்ல சிந்தனை வளம் பெற வேண்டும்..
வெற்றி பெற்றிட வேண்டும்..
உலகிற்கு வேதத்தை உணர்த்திட வேண்டும்.
உடல்நலம் காத்திட வேண்டும்.
சிறந்த மருத்துவம் தேர்ந்திட வேண்டும்.
அன்பும் கருணையும் வேண்டும்.
அதற்கு அறிவை அறிந்திடல் வேண்டும்.
கலைகளை கற்றிட வேண்டும்.
நல்ல நட்பினை பெற்றிட வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் பூரண
உடல்நலம், மனவளம் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், இயற்கையை பற்றியும் தெளிந்த அறிவை பெற வேண்டும்.

பேறாற்றலான இறைநிலைப் பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும் எல்லா மனிதரும் உணர வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை
உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கி உதவி செய்து வாழ வேண்டும்.

தனிமனித அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக அமைதி பெற வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய இறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். (வள்ளலார்).

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ..
எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம்
முறையாக இயங்குகிறதோ..
அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை...

திமுக வின் திருட்டு பகுத்தறிவு...


துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை...


விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே  வீராமூர் ஏரியில் மணல் அள்ளி கொண்டிருந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு மாட்டின் மீது குண்டு பாய்ந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பதை போலிசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென  பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்...



நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத் தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது. என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. நாடி ஓட்டப் பாதை என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்..

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்.

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்.

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்...