20/02/2019

2019 மக்களவைத் தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி ஏன்? - பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை...


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது தான் 2011-ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வந்தது. எனினும், இடைப்பட்டக் காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 2018-ஆம் ஆண்டு திசம்பர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில்  2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவலநிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. பா.ம.கவினர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தொடர்வண்டித்துறை இணை அமைச்சராகவும் இருந்த போது தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசில் பா.ம.க. வலிமையாக இருந்தபோது ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.

இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை பாட்டாளி மக்கள் கட்சி வகுத்து வருகிறது. இதற்காக ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது’’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர்  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, ‘‘தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப் பட வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது’’ ஆகிய மூன்றும் தான் மிக முக்கியக் காரணிகளாக அமைந்தன. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். நாடாளுமன்ற மக்களவைக்கானத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக இருந்தது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன.

2011-ஆம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய  பிரதிநிதித்துவம்  பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான  திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட  இரு கட்சிகளின் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன். மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும்,  கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்? என்ற வினாவுக்கு கிடைக்கும்  விடை தான், யாருடன் கூட்டணி என்ற வினாவுக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன் கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில் அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம், நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டன. ஆனாலும், மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், அது கடந்த 10 ஆண்டுகளில், இப்போது கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட பெரிய உச்சநிலை மருத்துவமையமாக உருவெடுத்திருக்கும்.
அதேபோல், சென்னையில் ரூ.150 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்,  ரூ.50 கோடியில் மெட்ரோ  ரத்த வங்கி, ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு இரு ஆண்டுகள் நீடித்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றில் பல திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்தபோது அவர்களுக்கு நான் பிறப்பித்திருந்த கட்டளை ‘‘தமிழகத்தில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர்கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது’’ என்பது தான். அதைப்போலவே, அனைத்துப் பாதைகளையும் அகலப் பாதைகளாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பா.ம.க. அமைச்சர்கள் ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டது. ஆனால், 2009-ஆம் ஆண்டு தொடர்வண்டி  இணையமைச்சர் பதவியிலிருந்து அரங்க.வேலு விலகிய பின்னர் தமிழகத்திற்கான தொடர்வண்டித் திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. 2009-14 காலத்திலும் திமுக மத்திய அமைச்சர் பதவியில் நீடித்த போதிலும் அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத் தரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை. இக்காலத்தில் தொடர்வண்டித்துறையில் தமிழகம் பின்னடைவை சந்தித்தது.

அதிமுக மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் ‘இல்லை’ என்று பதிலளிக்க முடியாது. ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த பல்வேறு யோசனைகளை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை  செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்தது, பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது, கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பா.ம.க.வும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு  தமிழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது. கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படி, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. பாடுபடும். அதேநேரத்தில் பா.ம.க. அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து  கொள்ளாது. கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பா.ம.க. விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்...

அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது...


தற்போது திமுக ஸ்டாலின் நிலை...

சுகர் வந்தவன், பைல்ஸ் வந்தவன்லாம் எனக்கு பாடிகாடு.

இவனுகள வச்சி நான் சண்ட செய்யணும்...

பாமக + அதிமுக கூட்டணி: மக்கள் நலனுக்காக 10 கோரிக்கைகள்...


ஏழு தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது மிகமுக்கியமான கோரிக்கை - மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு...

கூட்டணி கோரிக்கை : https://goo.gl/xxLWH4

1. காவிரி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.

2. தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள்.
& கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்.

3. இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.

4. ஏழு தமிழர்கள் விடுதலை.

5. படிப்படியாக மதுவிலக்கு.

6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.

7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.

8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.

9. வேளாண் கடன்கள் தள்ளுபடி
& உழவர் ஊதியக்குழு அமைத்தல்.

10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 + 1 இடம்...

1.தருமபுரி 2.கிருஷ்ணகிரி 3.சிதம்பரம் 4.கடலூர் 5.ஆரணி 6.அரக்கோணம் 7.கள்ளக்குறிச்சி ஆகிய தெகுதிகளில் பாமக போட்டி...

பாமக வின் மாற்றம் முன்னேற்றம் பாதை மாறியது...


காரணம்... தமிழர் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் கட்சிகள் கூட்டணிக்கு வராமல்.. தனித்து நிற்போம் என்று சொல்வதால் தான்...

அப்படி தனித்து நிற்பதால் அவர்கள் வென்று விடுவார்களா..?

கட்டாயம் இல்லை...

தமிழர் நலன் முக்கியம் என்றால் தமிழராக கை கோர்த்து இருக்க வேண்டுமே..? ஏன் இனையவில்லை..?

காரணம் ஒன்றே... தமிழர்கள் வாக்குகளை பிரிக்க வேண்டும்... தமிழர்கள் வெல்லக் கூடாது..

ஆகையால் தான் பாமக இம் முடிவை எடுத்துள்ளது...

1 எம்.பி வைத்துக் கொண்டு தமிழகத்திற்காக போராடி எத்தனை திட்டத்தை கொண்டு வர முடியும்... முடிந்தவரை தனி ஆளாக அன்புமணி மக்களுக்கு நன்மை செய்துக் கொண்டிருக்கிறார்...

இருப்பினும் இன்னும் சில எம்.பி கள் பலம் இருந்தால் தான் நன்மை என்பதால் தான் பாமக இம்முடிவை எடுத்துள்ளது...

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் 19.2.1855...


'தமிழ்தான் என் அறிவுப் பசிக்கு உணவு' என்பார் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர். ஆம்.. அது உண்மை தான். 19ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடியில் செல்லரித்துப் போகவிருந்த தமிழை அச்சு வாகனத்தில் ஏற்றி பிழைக்க வைத்த பெருமை இவருக்கே உண்டு.

ஏட்டில் இருப்பதை அப்படியே பெயர்த்து காகிதத்தில் அச்சிடுவது எளிது. ஆனால் ஓலைச் சுவடியில் இருப்பதை அச்சாக்கி வெளியிடுவது கடினமான பணியாகும். அவரின் கடும் உழைப்பினால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அச்சு வடிவம் பெற்றன. இதனால் ஓலைச் சுவடிகளில் புதைந்து கிடந்த தமிழர்களின் மூல வரலாற்றை தமிழர்கள் அறிந்தனர். தலை நிமிர்வு பெற்றனர்.

உ.வே.சாமிநாதய்யருக்கு தமிழ் மீது கொண்ட காதலையும் பிற மொழி மீது ஈடுபாடு இல்லாததையும் அவரே எனது சரித்திரம் நூலில் விளக்குகிறார்.

"கல்யாணத்திலும் பொருள் வருவாயிலும், ஊர்ப் பிரயாணத்திலும் எனக்கு லாபம் இருந்ததாகத் தோன்றவில்லை. எனக்கு ஒன்றுதான் நாட்டம்; தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு எவ்வளவுக்கு எவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி இந்த நிலைமை மாறவே இல்லை.

"எனது தந்தையாரிடம் கும்பகோணம் வக்கீல் வேங்கட்ராவ் அவர்கள் என்னை இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள்  என்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்க வில்லை. அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை.  அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று. தியாகராச செட்டியாரிடம் படிக்க வழி கேட்டால் இவர் இங்கிலீஷ் படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீஷும் வேண்டாம், அதனால் வரும் உத்தியோகமும் வேண்டாம்.

"எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த் தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவர வில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக் கூட அடைந்தேன்.

"சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன்பால் அன்பு இருந்தது. ஆனால், அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக் கொண்டது. அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்து கொள்ளத் தமிழ் காத்திருந்தது."

தமிழை அடுத்த தலைமுறைக்கு அச்சு வாகனத்தில் ஏற்றிய தமிழ்த்தாயின் அரும் புதல்வராம் தமிழ்த்தாத்தாவை இந்நாளில் தமிழர்கள் நினைவிலேற்றி கொண்டாடுவோம்...

பாமக தொண்டர்கள் இந்த வீடியோவை கடந்து செல்லும் படி கேட்டுக்கொள்கிறேன்..


https://youtu.be/QtASfiKdkrI

Subscribe the channel for more news...

பாமக - அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது...


ஆனால் ஒன்று.. பாமக எந்த கட்சியையும் தேடி செல்லவில்லை... பாமக வை தேடி தான் திமுக, அதிமுக அலைந்தது...

இறுதியில்... ஆட்சி என்றால் என்னவென்று தெரியாத ஊழல் அதிமுக கட்சி பாமக விடம் கெஞ்சி கூட்டணியை வைத்துக் கொண்டது...

மனித மூளையை பாதுகாப்பது எப்பிடி...


100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா?

ஆம், பத்தாயிரம் கோடி.. இவ்வளவு கலங்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு கலங்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், கலங்களைக் கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல்.

இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் இயற்கைக்கு மாறான ஆழ்ந்த உறக்க நிலை (coma) நிலைக்குச் செல்வதற்கும் இது தான் காரணம்.

கொல்லாதீர்கள்...

ஆம், உங்கள் மூளையில் உள்ள கலங்களைக் கொல்லாதீர்கள். என்னது, நமக்கு நாமே மூளை கலங்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது.

எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "சமநிலையாக" ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், "பதற்றம்" என்றே சொல்லிக் கொண்டிருப்பர். சரியாகத் தூங்கமாட்டார்கள்; சாப்பிட மாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை கலங்களை "கொல்"கின்றனர். அதாவது, கலங்கள் செயலிழந்துபோகின்றன.

தூக்கம் அவசியம்...

மூளை கலங்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேரத் தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

மன அழுத்தம் இருக்ககூடாது...

தூக்கம் வராமல் இருக்கக் காரணம், பலருக்கும் உள்ள "பதற்றம்" தான். மன அழுத்தம் பல வகையில் இவர்களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது."பதற்றம்" பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை கலங்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், "பதற்றம்" என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்கள்.

மதுவா? போ, போ...

மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதைத் தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்குப் பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. மது செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை கலங்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

எக்சோடாக்சின்...

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்புச் சத்துள்ள "ஜங்க் புட்" வகை உணவுகளில் "எக்சோடாக்சின்" என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "ஜங்க் புட்" தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை கலங்கள் அதிகமாக குறைவதே.

மலிவான பான உருப்படிகள்...

அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சில்லுகள் (Chips) போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதைத் தவிர்ப்பது நல்லது; ருசிக்குச் சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.

தண்ணீர் குடியுங்கள்...

தண்ணீர் தாராளமாகக் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.

உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்குக் காரணம் மூளை தான்; மூளை கலங்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.

தரை சுத்தமாக…

இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை “திவலைகள்’(spray) செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை கலங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

இது போலத்தான் வர்ணங்கள் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

காய்கறி, பழங்கள்...

இந்த மூளை கலங்கள் பாதிப்பை தவிர்க்க, எளிமையான வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; மருத்துவரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.

பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்...

பாமக வின் கெத்து...


கூட்டணி எப்படி அமையத போகிறது என்று யாருக்கும் தெரியாது..

ஆனா ஓண்ணு இனிமே எவனும் பா.ம.க கூட்டணிக்காக அந்தப்பக்கமும், இந்தபக்கமும் அலைஞ்சுதுனு சொல்ல முடியாது...

ஏன்னா அலையிறது நீங்க தானடா...

எதையும் கற்றுக் கொள்ளலாம்...


எப்போதும் கற்றுக் கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக் கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.

ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன.

இவைதான் அந்த வாசகங்கள்...

ஒரே ஒரு கருத்தைத் தேர்வு செய்யுங்கள். அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.

அது பற்றியே சிந்தியுங்கள்; அதையே கனவு காணுங்கள். அதற்காகவே வாழுங்கள்.

உங்கள் மூளை, தசைகள் நரம்புகள்… ஏன்.. உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் அக்கருத்தே நிரம்பியிருக்கட்டும். மற்ற எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள்.

இதுவே வெற்றிகான் வழி...

இந்த இணையற்ற மந்திர வரிகளைச்சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.

சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.

சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்ற காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.

இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும்.. செயல் துவங்கும்...