26/07/2020

திருட்டு தெலுங்கு திமுக வில் 38 பேர் MP ஆன கதை...


தமிழக இடஒதுக்கீட்டில் திருட்டு திராவிடர்களின் பித்தலாட்டம்...



1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை. அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில்

இடம் பெற வகை செய்யப்பட்டது.
இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம்" 1972 - இல் மு.கருணாநிதி (தட்சிணாமூர்த்தி) தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம்...

அனைத்து பட்டியலில் உள்ள
தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்...

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...



தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு.. கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது..

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.

கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.

அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்.
(வரி.26 - 28)

இப்பாடலடியில், மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
(புறம் - 18,28 - 30).

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.
(புறம்.118).

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார். (83).

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,

யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (25).

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற கலிங்கு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும். (1384 - 87).

என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும்.

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை கற்சிறை எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...

நோய்களும் உணர்வுகளும்...



நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம்.

இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் (தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திமுக மறுத்துவந்த நிலையில்...



தற்போது கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் திமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியது போலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது...

பெண்களே உஷார்...


தேவை...



காட்சிக்கும் பார்வைக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

மனித கண்களால் காண கூடியவை அனைத்துமே காட்சியாகும்.

ஆனால் எது தேவை என்பதை பொறுத்துத்தான் பார்வை முடிவாகும்.

பார்வை நம் மனதின் தேவையால் கிடைப்பது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்ந்து அறிந்தோர்க்கு, தேவையானவை தெரியும்.
தேவையானவை மட்டுமே தெரியும்...

கோன் கருங்காப்பு...



கி.மு க்கு முன்னர் கபாடபுரம் தலைநகராக இருந்த போது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான கோன் கருங்காப்பு மூலம் அரசாண்டனர்...

அதாவது கோன் என்றால் அரசன், கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும்...

குலதெய்வ வழிபாட்டை புரிந்துக் கொள்ளுங்கள்...



இந்த குறிப்பிட்ட அதிர்வெண்களுடன் அதிரும் பொருளை மட்டும் தான்... மனித கண்களால் காண முடியும்...

இதைவிட அதிகமாக அதிரும் பொருளையோ குறைவாக அதிரும் பொருளையோ காண முடியாது...

எனவே  என் கண்களுக்கு தெரியாத எந்த பொருளுமே இல்லை என சொல்லுவது தான்... நவீன ஈ.வே.ரா சிந்தனை...

குலதெய்வ வழிபாட்டை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் மற்றும் தன் முன்னோர்களின்  அரச அடிமைதனத்தை மொத்த தமிழர்களின் அடையாளமாக்க துடிப்பவன் கூறுவதை எல்லாலாம் நான் காதில் வாங்கி கொள்ளுவது இல்லை...

தமிழர்கள் விரோதி அதிமுக எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...



மக்களுக்கு உதவி செய்ங்கடான்னா நிதி இல்ல...

ஆனா ஊரான் வீட்டு காச ஊழல் செஞ்சி மாட்டிகிட்டு தண்டனை வாங்குன குற்றவாளிக்கு அபராத தொகையை அதுவும் 68 கோடிய கட்ட காசு இருக்கு?

ஏன்டா அவ்ளோ அக்கறை இருந்தா உங்க கட்சி பணத்துலேருந்து கட்ட வேண்டியதுதானடா?