21/09/2020

கார்ப்பரேட்களின் கை ஓங்கும் - மக்கள் விரோத பாஜக மோடியின் 3 மசோதாக்கள் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

 


கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண்மை தொடர்பான மூன்று மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உணவு பதினீட்டுத்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்காகவே கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், இது விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடியதென மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கண்டனம் தெரிவிக்கிறார்.

இன்றியமையாப் பொருள்கள் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு மசோதா, ஒப்பந்த பண்ணைய மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வால், அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில்தான் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, இச்சட்டத்தை எதிர்த்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், பஞ்சாபை சேர்ந்த மத்திய அமைச்சர்

இன்றியமையா பொருள்கள்' என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட இன்னும் பல விளைபொருள்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில், விவசாயிகளின் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையும் இனி நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பில்லை. இதனால் தனியார் நிறுவனங்களின் கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி தவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. `வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்ட'த்தின் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் சந்தையை முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான ஆபத்தும் உருவாகியுள்ளது. மூன்றாவதாக, `பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர மசோதா' என்ற பெயரில் ஒப்பந்தப் பண்ணையச் சட்டமும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களுமே விவசாயிகளின் கழுத்தை நெரிக்கக்கூடியது.

அரிசி, கோதுமை உள்ளிட்டவை, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால்தான், இவை அரசு கொள்முதல் செய்து வந்தது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணம் செய்யப்பட்டதால்தான், தனியார் வியாபாரிகள், இந்த விலைக்கு கீழ், விலையைக் குறைக்க முடியாத பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால், இனி அப்படியிருக்காது. தனியார் வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்லக்கூடிய விலைக்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிடும். விவசாயிகள், தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் தங்கள் விளைபொருள்களைப் பேரம் பேசி இலாப விலைக்கு விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது, இது சாத்தியமே இல்லை. பெரும்பாலான விவசாயிகள், சிறு, குறு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள். இவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்பவர்கள். இன்னொருபுறம், விளைவித்த விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக் கொள்ளும் அளவுக்கு, சேமிப்புக் கிடங்கு வசதிகள் நம் விவசாயிகளிடம் இல்லை. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியையும் சமாளிக்க வேண்டும்.

இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கும் விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்” 

உணவுப் பொருள்களின் பதுக்கலை தடுக்கத்தான், அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இவை இடம்பெற்றிருந்தன. வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நாட்டில் எங்கெல்லாம் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ, அவற்றை அரசு பறிமுதல் செய்து, பொதுமக்களுக்கு நியாமான விலையில் வழங்கியது.

இனி அதுபோல் பறிமுதல் செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தனியார் வியாபாரிகளும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து, வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் பார்ப்பார்கள். விளைபொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல இனி எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களைப் பெரும்பாலும் அரசின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலமாகவே விற்பனை செய்தார்கள். குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல்தான் வியாபாரிகள் ஏலம் கேட்க முடியும். ஆனால், இனி தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பம் போல் சந்தைகளை உருவாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த முக்கிய அவசரச் சட்ட மசோதாக்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால்,

மின்சார திருத்த மசோதா 2020: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இலவச மின்சாரம் நடைமுறையில் இருக்கிறது. புதிய சட்டத்தால் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கும். அதனால், விவசாயம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிகமான தொகை செலுத்த நேரிடும். 

இந்த இலவச மின்சாரத்தைப் பிடுங்குவதால் விவசாயிகள் மாதம் ரூ.2,000 முதல் 5,000 வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே அதலபாதாளத்தில் இருக்கும் விவசாயம், மேலும் நலிவடையும்.

இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் நிலத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள்...

பலூன் தான் பறக்க விடனும் 🤣


 

தமிழின விரோதி மராட்டிய வந்தேறி ரஜினி எனும் பிராடு...


 

வால்நட் (அக்ரூட்)...

 


வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.

உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே, இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்.

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்த போது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்...

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா.

சுருக்கங்கள்...

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்று நோய்கள்...

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி...

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்...

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்

தேவையானவை...

ஓட்ஸ் 1 கப்

பாதாம் பருப்பு 10

வால்நட் 10

முந்திரிபருப்பு 10

பிஸ்தா பருப்பு 10

கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த திராட்சை 10

தேன் 1 டேபிள்ஸ்பூன்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை...

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட், முந்திரிபருப்பு, பிஸ்தா நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை

சேர்த்து கொதிக்க விடவும். கம்பி பாகு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் பொடி பண்ணிய ஓட்ஸ் ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை, வறுத்த எள், பொறித்த திராட்சை, தேன், நெய் சேர்த்து அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.

வால்நட் முந்திரி பர்ஃபி

தேவையானவை...

வால்நட் பருப்பு - ஒரு கப்,

முந்திரி - கால் கப்,

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

சர்க்கரை - ஒன்றரை கப்,

நெய் - அரை கப்.

செய்முறை..

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.

கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது.

வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

வால்நட், பாதாம் பாயாசம்..

வால்நட் : 25 gm

பாதாம் : 10 pcs

சர்க்கரை : 100 gm

நெய், ஏலம் : சிறிது

வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையை சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வந்தவுடன் அதில் சர்க்கரையைப் போட்டு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும்...

இந்து விதவைகள் மறுமணச்சட்டம் 1856 ல் பிறப்பிக்கப்பட்ட போது பொட்டுக்கட்டி புகழ் பொம்பளை பொறுக்கி ராம்சாணி பிறக்கவே இல்லை!...


 

அதிமுக விற்கு ஊஊஊ...


 

நியூட்டனின் F = MA என்ற விதியை தெளிவாக போதிக்கும் திருமூலர்...

 


அகார முதலா அனைத்துமாய் நிற்கும்

உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்

அகர வுகார மிரண்டு மறியல்

அகார உகார மிலிங்கம் தாமே.

- (திருமந்திரம்: 1753)

பொருள்:

அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும், உகரம் சத்தி என்றும் அறிந்தால், அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

அறிவியல்:

நியூட்டனின் F(Force) = M(Mass) * A(Acceleration) போதிப்பது யாதெனில் திடப்பொருளுடன் சக்தி சேரும் போது அங்குதான் இயக்கம் ஏற்படுகிறது என்பதாம்.

அதாவது ஒரு கல் ஒரு இடத்தில் அசையாதிருந்தால் அது வெறும் திடப்பொருள்தான் அந்த கல்லை ஒருவன் உருட்டி செல்கிறான் எனில் அங்கு உந்து சத்தி (Acceleration) ஏற்பட்டு கல்லானது இயக்கத்திற்கு உள்ளாகிறது.

இங்கே கல்லானது இயங்கும் திடப்பொருளாக உருமாறுகிறது.

இதைத்தான் திருமூலர் M(Mass) ஐ சிவமாகவும், A(Acceleration) சத்தியாகவும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சத்திதான் உயிர் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு பொருளின் இயக்கித்திற்கு தேவை சத்தி மட்டுமே..

சிவசத்தியின் கூட்டு சேர்கையே உயிரோட்டத்தின் அச்சானி...

தில்லு முல்லு செய்து வென்ற தமிழின துரோகி அதிமுக ஓபிஎஸ் மகன்...


 

பாஜக மோடி அரசு எனும் கொள்ளைக்கார கூட்டம்...


 

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...

 


மண்டை மேல இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டார் பலிசா நாய்டு, சாதி வெறியன், தமிழின அழிப்பின் ஆணிவேர், பெரியார் என்று பொய்யாக அழைக்கப்பட்ட கன்னட தெலுங்கன் ஈ.வே.ராமசாமி..

ஆதி தீராவிடர்கள் (மறையர்கள்) தமிழ் அரசர்கள், மூவேந்தர் காலத்தில் தான் மிக கேவலமாக நடத்தப்பட்டனர் என்கிறார்,

சரி தமிழ் அரசர்களின் ஆட்சிக் காலம் எதுவரை இருந்தது?

சோழர்கள் கி.பி 1100 வரையே, அதற்க்குப்பின் தெலுங்கர்கள்  ஆண்டனர் (தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களை அழித்து), இடையில் சிற்றரசர்களாக பாண்டியர்கள் சிறிது காலம் ஆண்டனர்.

பின் முகமதியர் ஆட்சிக் காலம், இவர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்ற, கி.பி.1336 ல் விசயநகர வடுக தெலுங்கு அரசு உள்நுழைந்தது (வீர நாயக்கர் இன வரலாறு) இது கிட்டத்தட்ட கி.பி 1746 வரை நீடித்தது, அதற்க்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.

பின் 1920 ல் இருந்து இன்று வரை தீராவிடர்கள் (தெலுங்கு வந்தேறி, மலையாள வந்தேறி, கன்னட வந்தேறி) ஆட்சி (இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்).

இப்போது ராமசாமியார் (தமிழின அழிப்பின் ஆணிவேர்) தமிழ் அரசர்கள் தான் மறையர்களை மிக கேவலமாக நடத்தினர் என்கின்றார்.

சுமார் அவர் காலத்துக்குக்கு 1000 வருடங்களுக்கு முந்தைய மூவேந்தர்களின் வரலாற்றை பேசியவர், இந்த தெலுங்கு, வடுக விசயநகர அரசைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இவர்களுடைய ஆட்சி நல்லாட்சியாக இருந்திருந்தால் மூவேந்தர் காலத்தில் அடிமைகளாக இருந்த (பலிசா நாய்டு பொய்யாக கூறுவதைப் போல)..

மறையர்கள் இக்காலத்தில் விடுதலை அடைந்திருக்கலாமே? எழுச்சி அடைந்திருக்கலாமே?

இன்று இவர் இதைப் பற்றி பேச வேண்டிய நிலை வந்திருக்காதே? ஏன் நிகழவில்லை?

மழை விடாது பெய்த காரணத்தால் தெலுங்கு, கன்னட, மலையாள பிராமணர்களுக்கு உணவளிக்க முடியாது போனது..

அதைக்கண்டு வேதனையடைந்து தன் அரண்மணையின் ஒருப்பகுதியை இடித்து அதிலுள்ள தூண்கள் மற்றும், இதர மரங்களை வைத்து சமைத்து உணவளித்தது இந்த விசயநகர அரசு காலக்கட்டத்தில் தானே?

ராச ராச சோழன் காலத்தில் கோயில்களில் தமிழில் தானே பூசை செய்யப்பட்டது?

பின் வந்த வடுக தெலுங்கு அரசு அம்முறையை மாற்றி கோயில்களில் சமசுகிருத தெலுங்கு பேரிரைச்சலை உண்டாக்கியதே?

புலவர்க்கெல்லாம் புலவரான கிருட்டிண தேவராயராயர் சமசுகிருத, தெலுங்கு நூல்களை இயற்றி மகிழ்ந்தாரே?

கிருட்டிண தேவராயரின் அமைச்சர் தெனாலி ராமன் தெலுங்கு பிராமணர் தானே?

அரண்மணைகளிலும், செல்வந்தர் வீடுகளிலும் மலம் அள்ளுவதற்க்கென்றே வரும் போது ஒருச் சாதியினரை கொண்டு வந்தனரே?

தேவதாசி முறையை கொண்டு வந்ததும் இவர்கள் தானே? (ஆதாரம் 1113ல் கர்நாடக அலஹனப் பள்ளியில் உள்ள கல்வெட்டு -மருதம் நூல்).

மூவேந்தர் காலத்தில் மறையர்கள் இழிவாக இருந்திருந்தால் அவர்கள் தானே மலம் அள்ளியிருக்க வேண்டும்?

அவ்வாறு இருந்ததால்? அப்படி இருந்திருந்தால் இந்த வடுக தெலுங்கு அரசின் காலக்கட்டத்தில் புதிதாக ஒரு சாதியினரை கொண்டுவர அவசியம் இல்லையே?

பின் முகமதியர் காலத்தில் சிறிது இழிவு நிலை மாறியது என்றுள்ளார்,

(துலுக்கர்களின் ஆட்சி கொடுமையை எதிர்த்து விசய நகரை உருவாக்கின்றது வெற்றி கொள்கின்றது, மேற்கும் தெற்கும் தங்கள் இனத்தை பரப்புகின்றது.).

இது வீர நாயக்கர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது, ஆதி தீராவிடர்கள் இழிவுநிலை துலுக்கர்களால் நீங்கும் போது..

அதை விசயநகர அரசு தடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று போராட வேண்டிய நிலை உண்டாகுமா?

அப்புறம் கிறித்துவ அரசர்கள், கும்பினிப் படை செய்த அட்டூழியத்தை மறைக்க முயலுகிறாரோ?

இன்னும் பத்தாண்டுகள் அவகாசம் கொடுத்தால் அனைவரையும் கருப்பு ஆங்கிலேயராக மாற்றி விடுவேன் என்றது இவர்கள் தானே?

கால்டுவெல் முதன் முதலில் திருநெல்வேலியில் தானே கால் வைத்தார்?

அங்கு தானே சாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆடியது? பலரும் கிறித்துவத்துக்கு மாறியது இங்கு தானே?

சரி அங்கு அதற்க்கு முன் ஆண்டது யாரு? வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று பொய்யாக அழைக்கப்பட்ட தெலுங்கு வந்தேறி கொள்ளைக்காரன்  கெட்டி பொம்முலு தானே?

அப்புறம் முருகனை சுப்பிரமணியனாக மாற்றியது, தை ஒன்றை சித்திரை ஒன்றாக மாற்றியது, சாதியக்கொடுமை, தீண்டாமை கொடுமை, இரட்டை குவளை என பல அட்டூழியங்களை அரங்கேற்றிய தெலுங்கன் திருமலை நாயக்கர் போன்றோரை, நம்ம பலிசா நாய்டு, சாதி வெறியன் ராமசாமி நாயக்கருக்கு தெரியாமல் போனது ஏனோ? தெலுங்கு இனப்பாசமோ?

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை பேசத்தெரிந்த ராமசாமி நாயக்கருக்கு, அதற்க்கு பிந்தைய வரலாறு தெரியாமல் போனது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் உள்ளது..

இன்னும் தகவல் உள்ளது கை வலிப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்...