03/10/2021

பழைய சாதத்தில் இவ்வளவு விஷயமா?

 


திரைப்படங்களில் கிராமத்து சீன் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.  இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு.

உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும்..

ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது.

பழைய சாதத்தின் நன்மைகள் சில :

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்,  உடல் எடையும் குறையும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9.  எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்...

புரோக்கர் அண்ணாமலை தனி உலகத்துல வாழ்றான் போல 🤣

 


பாஜக மோடியின் இன்றைய பொய்கள்...

 


இரண்டு நாள் முன்னாடி தான் ஒரு போஸ்ட் போட்டோம்...



இந்தா இப்போ இப்படி ஒரு அறிவிப்பு..

ஆரியன் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் திராவிடன்..

இரண்டுக்கும் நடுவில் தன் அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கும் தமிழன்..

ஒரு குரூப் ராமசாமி நாயக்கரை எதிர்த்து பேசாது..

இன்னொரு குரூப் ஹிந்துத்துவத்தை எதிர்த்து பேசாது..

சாதியும் சரி, மதமும் சரி இரண்டுமே தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று..

உடனே ஒரு குரூப் வரும், அப்போ தமிழில் பிரிவினை இல்லையா என்று..

எல்லா இடத்திலேயும் பிரிவினை இருக்கு..

அதை ஒரு சிலர் தங்களின் சுய அரிப்புக்காக பயன்படுத்துகிறார்கள்,

அப்படி தமிழர்களிடம் இருந்த பிரிவினையை பயன்படுத்திய இரண்டு சொறி நாய்கள் தான் இந்த ஆரியமும், திராவிடமும்..

அவ்வளவே...

ஆசிரியர் Vs மாணவன்...

 


ஆசிரியர் : டேய் ஒரு சராசரி மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகள் என்ன என்னன்னு சொல்லு..?

மாணவன் : ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 2 லிட்டர் தண்ணீரும், 2500 கலோரி உணவும், 1.5 ஜிபி டேட்டா வும், சார்ஜ் போட தினமும் இரண்டு மணிநேரம் கரண்டும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது சார்..

ஆசிரியர் : உன்னைய எல்லாம் பெத்தாங்களா... இல்ல செஞ்சாங்களானு தெரியல...

🤣🤣🤣🤣

காக்கா Vs அம்மா...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




நீ..
என் கூட இருந்தாலும், இல்லையென்றாலும்
என்னால் ஆயிரம்
கவிதை எழுத முடியும்...

ஆனால்..
உன் நினைவு இல்லாமல்
ஒரு சொல் கூட.
எழுத முடியாது...

திமுக சுயமரியாதை கட்சி இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

 


02/10/2021

முருங்கைப் பூ மருத்துவம்...

 


முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கைப் பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.

முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.

மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.

நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.

உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.

உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.

முருங்கையில் உள்ள பூ, காய், வேர், கீரை, பிசின் என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இயற்கை நமக்களித்த இத்தகைய உன்னதமான முருங்கையை நம் எளிதாக வீட்டிலே வளர்த்து பயனடையலாம்...

குடல் புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்...

 


சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்...