25/05/2017

பாஜக மோடி ஆட்சியின் 3 ஆண்டுகளின் வேலை வாய்ப்பின் நிலை...


ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பு என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜம்பமடித்தவர்கள் அதை நோக்கி என்ன செய்தார்கள்? என்று கேட்டால்...

பாஜகவினர் ‘மேக் இன் இந்தியா’ ‘ஸ்கில் இந்தியா’ ‘ஸ்டார்ட்டப் இண்டியா’ என்று திட்டங்களின் பகட்டான பெயர்களைச் சொல்வார்கள்.

பெயர் தான் பெத்த பேரு, தாகத்திற்கு எங்கே நீரு??

கடந்த ஓராண்டில் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு 2.3 லட்சம். அதுவும் சமூகப் பாதுகாப்பான வேலைகள் அல்ல. மேலும் கல்வி, சுகாதாரம் என்ற இரு துறைகளில் தான் வேலைகள் உறுவாக்கப்பட்டுள்ளன.

எந்தத் துறையை தங்களின் முன்னுரிமைத்துறை என்று அறிவித்தார்களோ, அங்கே தான் இந்த நிலைமை.

கிராமப்புற வறுமை அதிகரிக்கிறது, விவசாய விலைபொருட்களுக்கு விலையில்லை. 4.65 குடும்பங்களுக்கு ஊரகவேலை உறுதித் திட்டத்தில் வேலை தேவைப்பட்டது - மோடி ஆட்சியின் முதல் ஆண்டில், அடுத்த ஆண்டில் இது 15 சதவீதம் அதிகரித்தது. சென்ற ஆண்டில் மேலும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

விண்ணப்பிக்கும் குடும்பங்களில் சுமார் 11 சதவீதம் பேருக்கு வேலை கொடுப்பதை அரசு மறுத்திருக்கிறது. 58 லட்சம் குடும்பங்கள், வேலை கேட்டு மீண்டும் வந்திருக்கின்றனர்.

இப்படித் தான் இருக்கிறது ஊரக வேலை நிலமைகள்.

உற்பத்திசார்ந்த வேலைகள் கவலையளிக்கின்றன. செல்லா நோட்டு அறிவிப்பினால் சுமை மேலும் அதிகரித்துள்ளது.

15-29 வயதில் உள்ள இளைஞர்களில் 30 சதவீதம் பேர் வேலையற்று இருப்பதாக சொல்கிறது ஆய்வு.

வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளுக்கு வங்கிக் கடனும் கிடைப்பதில்லை. சிறு குறுந் தொழில்களுக்கு மிகக் குறைந்த கடனே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் திட்டமிடாத இந்த அரசின் பார்வையைக் காட்டுகிறது.

நிரந்தர மூலதன உருவாக்கம் 6.1 சதவீதமாக இருந்தது தற்போது 0.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதாவது கார்பரேட் நிறுவனங்கள் புதிய உற்பத்திகள் எதிலும் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.

வேலை வாய்ப்பை உருவாக்க முதலீடு செய்வோரும் முயலவில்லை. அரசும் அதனை கவனிக்கவில்லை. சலுகைகளை மட்டும் அள்ளிக் கொடுக்கிறார்கள்.

வேலையிழப்பு வளர்ச்சி என்பதும், அதுபற்றி கவலையற்ற அரசாங்கம் என்பதே நாம் இப்போது பெற்றுள்ள மோடி அரசு...

நன்றி - சவேரா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.