02/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 50...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் காலச்சக்கரத்தின் சுழற்சியின் நிகழ்வோடு இணைக்கப்பட்டுள்ளன. யுக மாற்றம், அதன் வருகைக்கு முன் ஏற்படும் அறிகுறிகள், அதனை சார்ந்த பிரபஞ்ச நிகழ்வுகள், உலக நிகழ்வுகள் என அனைத்து சம்பவங்களும் காலச்சக்கரத்தின் நிகழ்கால இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவை என இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

காலச்சக்கரமே இந்த உலகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை நிர்ணயிக்கும் விதிஅமைப்பு என்று தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இந்த உலகம் படைக்கபட்டபோது, அதில் உயிர் என்ற தன்மையை சுமந்த ஒரு அதிசய பிறவியாக மனிதபிறவியே படைக்கபட்டதாக காலச்சக்கர கோட்பாடு விதி கூறுவதாக இறைநிலைச் செய்திகள் கூறுகின்றன.


மனித வர்க்கத்தை மிஞ்சும் ஏதும் இவ்வுலகில் இல்லையென்றும், ஆனால் அந்த மனித வர்க்கத்தை இப்பூமியில் நிலைநிறுத்தும் காலகிராம கோட்பாட்டை தனக்குள் கொண்டதே காலச்சக்கரம் என்று இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மனிதன் வாழும் இப்பூமியே மற்ற கிரகங்களைவிட சிறந்தது என்று இறைநிலைக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. 4000 மில்லியன் வருடங்களை தன் வாழ்நாளாகக் கொண்ட பூமிகள் பல படைக்கப்பட்டன என்றும், அவைகள் ஒவ்வொரு யுகமாற்றத்தின் போதும் மறைக்கப்பட்டு, மீண்டும் உருவாக்கப்படுவதாக காலக்கிராம கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது நாம் வாழும் இப்பூமி மூன்றாவது படைப்பு என்றும், இதுவரை இந்த பூமி அழிவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று இறைநிலைக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


பூமியின் அமைப்பை 8 பாகங்களாக பிரித்தால் அதன் 8வது பகுதி ஒரு ஆரஞ்சு சுளையைப் போன்று இருப்பதாக கற்பனை செய்தால், அதனைப்போன்று பூமியின் நிலப்பரப்பு அமைப்பை ஒத்த ஒரு தேசம் நமது பூமயின் வரைபடத்தில் உள்ளது என்றும், அந்த தேசத்திலிருந்து 3000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பூமிச்சம்பவம் நடந்து முடிந்தது என்றும், அங்குதான் மனிதன் வாழ்ந்த ஒரு அதிசயமிக்க நகரம் அப்பொழுது இருந்தது என்றும், அது தற்போது நிகழும் பூமி சம்பந்தப்பட்ட அதிர்வில் வெளிவரும் என்று 50வது தீர்க்க தரிசனம் ஒரு தெய்வீகக் குறிப்பைத் தருகின்றது.


மன்னர்கள் அதிகமாக வாழ்ந்த இந்திய தேசத்தின் ஒரு நகரில் மகா காளியின் அற்புதம் ஒன்று  ஜுன் மாதம் நிகழும் என்றும், அந்த நிகழ்வு நடக்கும் சம்பவத்திற்கு முன்பாக தமிழகத்தில் தென் மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற ஒரு அம்மன் ஆலயத்தில் மகா அதிசய நிகழ்வு நடக்கும் என்றும், அப்பொழுது ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு ஆலயத்தின் கோபுரம் இடிந்து விழும் என்றும், இதுவே யுகமாற்றம் இப்பூமியில் கால்ஊன்றப்போவதற்கான முக்கிய காரணமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என 50-வது தீர்க்க தரிசனம் நமக்கு மேலும் சில குறிப்புகளை தருகின்றன.

முன்னாள் முதல் அமைச்சர் ஒருவரின் குடும்பத்தில் பல துயரச் சம்பவங்கள் அடுக்கடுக்காக நடந்து முடியும் என்றும், இனி அக்குடும்பத்தை சார்ந்த எவருமே அரசியல் பிரவேசத்தை விரும்ப மாட்டார்கள் என்று இறைநிலை குறிப்புகள் இந்த 50-வது தீர்க்க தரிசனப் பகுதியில் குறிப்பிடுகின்றன.


மாயம்மா என்ற பெண் சித்தரின் ஜீவசமாதியில் ஒரு மகா அதிசயசம்பவம் நடைபெறும் என்றும், அங்கிருந்து சேலத்தை சார்ந்த ஒரு செய்திகுறிப்பு வரும் என்றும், அவரின் பக்தர்கள் சேலத்தை தேடி  வரும் ஒரு மகா நிகழ்வு வரும் ஜுன் மாதம் நடைபெறும் என்று 50-வது தீர்க்க தரிசனப்பகுதி மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

காரைக்கால், வந்தவாசி, திருச்சி, புளியஞ்சோலை, மானாமதுரை, குளச்சல், பயையனூர், மலையாளதேசம் இவைகள் மிக, மிக கவனத்தில் கொள்ள வேண்டிய ஊர்கள் என 50-வது தீர்க்க தரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மலையாள நாடான கேரளத்தில் பிரசித்திப்பெற்ற ஒரு ஆலயத்தில் ஒரு மகா சோகச்சம்பவம் நடைபெறும் என்றும், ஜோதிடர்களின் கணிப்பில் காலக்கேடு என்ற விதிரேகை அங்கு தற்போது நிகழ உள்ளதாகவும், அதனால் தேசம் முழுவதும் ஒருவித பயம் நிகழக்கூடும் என்றும், அதன்பின்னர் அதற்கான விளக்கத்தை இறைவழியில் அவர்கள் அடைவார்கள் என்றும், அதன்பின்னரே அங்கு பலவித முன்னேற்றங்கள் ஏற்படும் என்று 50-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பூமியில் ஒரு வியத்தகு நிகழ்வு நடக்க உள்ளதாகவும், பேச்சி என்ற அடைமொழிக்கு உரிய தெய்வீக சங்கல்பம் ஒன்று அங்கு நிகழும் என்றும், சரித்திரத்தில் ஒரு புதிய உண்மை அந்த ஊரின் மக்களுக்கு தெரியவரும் என்று 50-வது தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


இந்தியா-சீனா-திபெத் இந்த மூன்று எல்லைகளுக்கும் பொதுவான ஒரு ஆன்மீக கலாச்சார உறவு திடீரென்று மக்களிடையே வேகமாக தோன்றி வளரும் என்றும், இதனால் உலக மக்களிடையே பௌத்தம் ஒரு மறுமலர்ச்சியை  அடையும் என்று 50-வது தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.