23/05/2017

இந்தியாவை புறக்கணிக்கும் அரசியல் வாதிகள்...


ஒரு மத அடிப்படையில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நமது நாட்டுக்கென்று சட்ட யாப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அக்காலத்து அம்பேதக்கர் போன்ற அறிஞர்கள்.

இந்தியாவில் உள்ள மதங்களின் பிரதிநிதிகளை வைத்து சமமாக உருவாக்கிய சட்டம் தான் இந்திய சட்டவியல் சாசனம்...

இதில் 4 பெரிய மதங்களை தேர்தெடுத்து அவர்களின் பிரதி நிதிகளை அழைத்து ஆய்வு செய்து கலந்துரையாடல் செய்து அழகான முறையில் உருவாக்கியது மிகச்சிறப்பு...

ஹிந்து மதத்தை கடைபிடிக்கும் மக்கள் ஹிந்து மதத்தில் பிறந்தாலும் நான் ஹிந்து அல்ல என்று சொன்னால் அவர்களுக்கு இந்திய சட்டம் துறை ஹிந்து என்ற அடிப்படையில் தான் குறிக்கும்..

கிருஸ்தவ மக்கள் அவர்களுக்கென்ற பிராதன வெளிநாட்டு நபர்களை அழைத்து வந்து கிருஸ்துவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அனுமதியுண்டு என்ற சட்டம்..

மற்றவகைகளை காட்டிலும் கிருஸ்துவ போதகர்களுக்கு நிலுவை சட்டம் தனியாக உண்டு..

குருகோவித் சிங் தொடக்கம் இந்திய வரலாற்றை சிங் இனத்தவர்களை தவிர்த்து பார்க்க முடியாது.

இஸ்லாமிய மன்னரான அவுரங்க சேப்பிற்கும் அன்றைய காலத்து குரு சிங் குக்குமான நட்புறவே இதற்கு எடுத்துக்காட்டு.

அவர்களுக்கென்று தனி சட்டம் டர்பன், துப்பாக்கி போன்றவகைகளை தனியாகவே அன்றைய காலத்து அம்பேதக்கர்  தொடக்கம் அறிஞர்கள்  உருவாக்கினார்கள்..

அது மற்றுமின்றி.. நீதி மன்றத்தில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து விசாரிக்கும் பொழுது அவரின் மதத்தை அறிந்து அந்த மதத்தின் புனித நூல்களை கையில் கொடுத்து சத்ய பிரமாணம் செய்ய சொல்வார்கள்..

இஸ்லாமியராக இருந்தால் புனித குரானும்.

கிருத்துவராக இருந்தால் புனித பைபிளும்.

நாஸ்திகராக இருந்தால் அவர்கள் மனதில் கைவைத்து சத்யம் செய்ய சொல்லுவார்கள்.

இதெல்லாம் அன்றைய மரியாதைக்குரிய அறிஞர்கள் நமக்கு வழிகாட்டி செய்து வைத்துள்ள சட்ட ஒப்பந்தம்.

இதையெல்லாம் செய்ய காரணம் என்ன?

எந்த மதத் தலைவர்களையும் ஒதுக்கி விடாமல் அனைவரையும் கலந்து ஆலோசித்து உருவாக்க வேண்டிய அவசியம் என்ன ?

காரணம் எக்காலத்திலும் எந்த மதத்தையும் யாரும் ஏசிவிடக்கூடாது என்பதே...

இப்படியிருக்க ஒரு மதத்திற்கு எதிராக பேசுவது எந்த அளவிற்கு தவறு என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

யோகி ஆதித்யநாத்  சாத்வி போன்றோர்கள் சிறுபான்மை மக்கள் என்று சொல்லக்கூடிய கிருஸ்துவ இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசுவது எப்படி சரியாகும் ?

நேர்மையான நெஞ்சுடைய மக்கள் தவறு என்றே சிந்திப்பார்கள்....

இந்திய இறையாண்மைக்கு எதிரானவை. இந்திய சட்ட யாப்புக்கு எதிரானவை. இவர்கள் பேசுவது..

இந்திய சட்டத்திற்கு எதிராக பேசுவது
தான் வாழும் இந்தியாவை புறக்கணிப்பதற்கு சமம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.