03/06/2017

பாஜக மோடியும் தமிழின அழிப்பும் - அணு உலை அமைவதில் ரெட்டை நியாயம்...


குஜராத்தில் மித்திவிர்தியில் அமையவிருந்த அணு உலைக்கு எதிராக போராடிய மக்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு  அந்த அணு உலைகளை ஆந்திர மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிட்டு இருக்கிறது மத்திய அரசு.

ஆனாலும் இந்த அணு உலை இடம்பெயர்வு தகவலை மக்களுக்கு சொல்லாமல் மறைத்ததற்காகவும் போராடிய மக்களின் அலைச்சலுக்காகவும் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்களாம்.

ஆனால் இங்கே கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடிய லட்சக் கணக்கானோர் மீது  தேசத் துரோக வழக்குகள் சித்ரவதைகள் பலர் மரணம் பொருளாதார இழப்புகள் அடக்குமுறைகள்...

ஒரே நாட்டின் இரண்டு மாநிலத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகள். நல்லா இருக்குடா உங்க ரெட்டை நியாயம்..

இவ்வளவு மக்கள் போராட்டத்தையும் தாண்டி தான் அடுத்து இரண்டு அணு உலைகளை கூடங்குளத்தில் புதிதாய் அமைக்க மோடி மஸ்தான் ரஷ்யா போகிறார் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்...

மாநில அரசுகள் சரியாக இருந்திருந்தால் தடுத்து நிறுத்தி இருக்கலாம். குறைந்த பட்சம் புதிய அணு உலைகள் அங்கே அமையாமல் தடுக்கவாவது செய்யலாம். ஆனால் நமக்கு வாய்த்த அடிமைகள் அப்படி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.