03/06/2017

அணுஉலைக்கு எதிர்ப்பு.. நஷ்ட ஈடு வழங்கிய குஜராத் அரசு.. தமிழ் நாட்டில் தேசதுரோக வழக்கு...


மக்கள் போராட்டங்களின் காரணமாக, குஜராத் மாநிலத்தில் உள்ள மித்திவிர்தியில் அமையவிருந்த அணு உலைகளை, மத்திய அரசு ஆந்திர மாநிலத்திற்கு இடமாற்றியுள்ளது. இந்த தகவலை எழுத்துபூர்வமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்சொன்ன தகவலை பொது மக்களிடம் தெரிவிக்காமல், போராடும் மக்களை தீர்ப்பாயத்தை நாட வைத்து, மக்களுக்கு அலைச்சல் கொடுத்ததற்காக, மத்திய அரசும், குஜராத் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா 10,000 ரூபாயை மனுதாரர்களுக்கு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடினால், அணு உலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது மட்டுமில்லாமல் போராடும் மக்களுக்கு பணம் கொடுக்க சொல்லி உத்தரவும் வருகிறது.

தமிழகத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடினால், தேச துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பாயும், சிறப்பு பரிசாக மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்படும்.
வாழ்க அயோக்கிய அரசு..

குறிப்பு: படத்தில் நீங்கள் பார்ப்பது, போராடும் மக்கள் சார்பாக வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட காசோலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.