24/07/2017

குமரிக்கண்டம் உண்மையா - 5..?


தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் 18 மீட்டர் கடல் நீர் குறைந்தால் போதும் கிடைக்கும் நிலப்பரப்பைப் பாருங்கள். வாடகை சைக்கிளில் இலங்கை சென்று விடலாம். 20 கி. மீ. தூரம் தானே.மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 21 தீவுகள் இருக்கின்றன. இவை பழைய தமிழகம் கடலில்   மூழ்கியது போக மீதமுள்ள பகுதிகள்.


மேலும் தனுஷ்கோடியிலிருந்து ஈழ தலைமன்னாருக்கு தரைவழித்தொடர்பே இருப்பதைக்காணலாம். இதை ராமர் பாலம், ஆடம்ஸ் பிரிட்ஜ் என எப்படி சொன்னாலும் அது இணைந்திருந்த தமிழ்-ஈழ நாட்டின் நிகழ்கால சாட்சியம்.


கீழ்க்காணும் அந்த மண் திட்டுப்பாலத்தின் நீளம் 30 கி. மீட்டர். காண்க:

சேது கால்வாய் என்று வெட்ட நினைப்பது இந்த மண் திட்டைத்தான். கப்பல் செல்ல வழி ஏற்படுத்த நினைக்கிறார்கள்.


1. உண்மையில் கால்வாய் வெட்டப்பட்டாலும் அவ்வழியே பெரிய கப்பல் செல்ல வழியில்லை.

2. வெட்ட வெட்ட கடல் திரும்பத்திரும்ப மண்ணை கொண்டுவரும். மண் அகற்றுபவர்களுக்கு நல்ல வருமானம். திரும்பத் திரும்ப சாலை போடும் வகையில் அரைகொறை சாலை போடுவாங்கள்ளே அது மாதிரிதான்.

3. கப்பல் நிறுவனம் வைத்திருப்பவர் தி.மு.க. T.N. பாலு. காசு கொட்டும் தொழிலைக் கைப்பற்ற நினைக்கிறார்கள், அவ்வளவு தான்.


8) தனுஷ்கோடி..

1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுஷ்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது. இந்தியப்பெருங்கடலில் 12,000 வருடங்களுக்கு முன் நிலப்பரப்பு மூழ்கியதை நம்பாதவர்கள் 50 வருடங்களுக்கு முன் மூழ்கிய தனுஷ்கோடியையாவது நம்புங்க.

தனுஷ்கோடியின் இன்றைய நிலை.
இதே தனுஷ்கோடி 1964 க்கு முன்னாடி எப்படி இருந்தது தெரியுமா ? தனுஷ்கோடி ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்ற ஒரு துறைமுக நகரம். தென்னந்தோப்புகளோடு இருந்த ஒரு ஊர். படத்தைப் பார்த்தாவது நம்புங்க.
அந்த போட் மெயில் 1964 கடும்புயலில் பயணிகளோடு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது.


9)  கடலாய்வுகள்..

இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை

1. 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது.

2. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கடலாய்வு செய்தது.


3. இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது.

அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன  மத்திய மாநில அரசுகளால்.

சிறிதளவே செய்யப்பட்ட கடலாய்வு பூம்பூகார் நகரத்தின் பழைமையை கி. மு. 9,500 என்று சொல்லும் போது, குமரிக் கண்டத்தில் கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும்.


இத்தோடு முடிவதில்லை நமது தேடல். ஏன் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதி மட்டும் தான் கடலில் மூழ்கியதா? இல்லையே. அந்த மூழ்கிய உலகின் பிற நாட்டு பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகள் ஆச்சரியமானவை.

அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.