17/07/2017

இதுவரை உலகில் ஏற்பட்ட மிக பெரிய மின் தடைகள்...


July 31, 2012: வடஇந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.  உலகிலேயே மிக பெரிய மின் தடை என்ற பெயரும் பெற்றது.

July 30, 2012: வடைண்டியாவிற்கு மின்சாரம் வழங்கும் வடக்கு பவர்  செயலிழந்தது, 8 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. 370 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Nov. 10, 2009: Paraguay-Brazil எல்லையில் உள்ள நீர் மின் நிலையத்தை புயல் தாக்கியது. இதனால் பிரேசிலில் 60 மில்லியன் மக்களும் பராகுவேயில் 7 மில்லியன் மக்களும் மின்சாரம் இன்றி தவித்தனர்.

January-February 2008: சீனாவில் உள்ள Chenzhou நகரத்தில் புயல் தாக்கியதால் 4 மில்லியன் மக்கள் இரண்டு வாரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் 11 தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

November 2006: ஜெர்மன் பவர் கம்பெனியின் உயர் மின் கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் இல் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 18, 2005: இந்தோனேசிய வில் பவர் கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 100 மில்லியன் மக்கள் 5 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 12, 2004: Greece இல் 7 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Sept. 28, 2003: Switzerland இல் உயர்  மின்கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 95% இத்தாலி மின்சாரம் தடைபட்டது. 55 மில்லியன் மக்கள் 18 மணிநேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 14, 2003: மத்திய அமெரிக்காவில் மின்கடதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவின் 8 மாநிலங்கள் மற்றும் கனடாவில் 50 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 11, 1999: Brazil’s Sao Paulo மாநிலத்தில் துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதால் 97 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 1989: கனடா மற்றும் அமெரிக்காவின் சிலபகுதிகளில் சூரிய மின்காந்த புயல் தாக்கியதால் 6 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 13, 1977: நியூயார்க் நகரத்தில் துணை மின் நிலையத்தில் மின்னல் தாக்கியதால் மின்தடை ஏற்பட்டது 8 மில்லியன் மக்கள் 25 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்

Nov. 9, 1965: துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மின்தடை ஏற்பட்டது. 25 மில்லியன் மக்கள் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை தழுவி  “Where Were You When the Lights Went Out?” பிரபலமான திரைப்படமும் எடுக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.