12/07/2017

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக முதல் செய்தி கூறுகிறது...


(தாக்குதல் தொடுத்தது ஒரு 'இஸ்லாமிய' பயங்கரவாத அமைப்பு என்பது பொதுக்கருத்து)..

லஸ்கர்-இ-தொய்பா என்ற 'இஸ்லாமிய பயங்கரவாத' அமைப்பின் உறுப்பினர் சந்தீப் சர்மா காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாக இரண்டாவது செய்தி கூறுகிறது.

(இது முஸ்லிம்களின் பயங்கரவாத அமைப்பு என்பதும் பொதுக்கருத்து).

இஸ்லாமிய அமைப்பு என்ற பெயரில் ஒரு பயங்கரவாத இயக்கம், அதில் இந்து மதத்தைச் சார்ந்தவன் உறுப்பினர்.

இதுபோலத்தான் ஐஎஸ் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பில் கிறிஸ்தவர்களும், யூதர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு மதம் முக்கியமல்ல. மதத்தின் பேரைச் சொல்லி அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதும், உள்நாட்டில் அமைதியைச் சீர்குலைப்பதும், ஆளும் அரசுகளை ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நிற்கும் நிலைக்குத் தள்ளுவதும், ஆயுத விற்பனைக்கான சந்தைகளை உருவாக்குவதுமே இவர்களின் அசைன்மெண்ட்.

இடையிடையே உள்நாட்டு ஆட்சியாளரின் அடியாளாகவும் இருந்து, மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து ஒரு பதட்டநிலையைத்  தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இவ்வகையான தாக்குதல்களை வெறும் மத வெறுப்புத் தாக்குதல்களாக மேம்போக்கான கண்டனங்களைப் பதிவு செய்வதை தவிர்த்து, ஏகாதிபத்திய, ஆயுத வியாபார கார்ப்பொரேட்டுகளின் நுண்ணரசியலை அம்பலப்படுத்த அறிவுசார் சமூகம் முன் வர வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.