26/08/2017

இலங்கையைக் காட்டி தமிழகத்தை துண்டாடத் திட்டம்… ஆற்றில் கை வைத்து அழிவு பாதையில் தள்ளி, இனி கடல் மார்க்கமாக அரங்கேறப்போகும் நாசகரம்...


இலங்கை, ஆஸ்திரேலியாவில் கடல் மணலில் இருந்து எடுக்கும் தாது மணல் தொழில் நடந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன் ?என்று தாது மணல் தொழில் அதிபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாது மணல் தொழில் மூலம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

ஆனால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தடைபட்டுள்ளது என்றும் தமிழக கடற்கரைப்பகுதியில் சேரும் தாது மணலுக்கு வெளிநாட்டுச் சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களின் சதியும் தடைக்கு ஒரு காரணமாக உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தமிழக கடற்கரைப்பகுதியில் தாது மணல் எடுக்கப்படாததால், அந்த மணல் வேறு பகுதிக்கு கடல் வழியாக இடம்பெயர்ந்து சென்றுவிடும்.

இதனால் இலங்கை, ஆஸ்திரேலியாவில் தாது மணல் தொழில் ஜோராக நடந்து வருகின்றன. எனவே, தாது மணல் பிசினஸில் உள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் அந்நிய செலாவணி, வரியினங்கள், ராயல்டி உள்ளிட்டவை மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.

அதோடு தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்று காரணம் கூறி உள்ளனர்.

ஏற்கனவே தமிழக ஆற்று மணலையும் இது போன்று தான் ஆசை வார்த்தைகள் கூறி அபகரித்து கொண்டிருகின்றனர்.

இந்த நிலையில் கடல் மணலையும் எடுக்க ஆரம்பித்து விட்டால், கடற்கரையை சுற்றி இருக்கும் நீராதாரங்கள் முழுவதுமாக பாதிப்படையும்.

நிலத்தடி நீருடன் கடல் நீர் கலப்பு ஏற்படும். இது போன்ற இன்னும் பல பாதிப்புகள் இதனால் எதிர்கொள்ள வேண்டி வரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.