26/08/2017

மூல நோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு...


கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது..

இந்த கிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது, ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.

எனவே இக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் உரித்து புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

பயன்கள்...

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம் ஆகியவற்றை குணப்படுத்துகின்றது. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்ப்பதில் பயனுள்ளதாக உள்ளது.

மூல நோயை குணப்படுத்தி, ஆசன வாயிலில் உள்ள முளைகளைச் சிறுது சிறிதாக கரைத்து மூலத்தை அடியோடு குணமாக்குகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர்கள் இந்த கருணைக்கிழங்கை தினமும் சாப்பாட்டிற்கு பதில் உணவாக உட்கொண்டால் நல்ல பலனைக் காணலாம்.

கருணைக்கிழங்கு பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கின்றது.

பெண்களின் கர்ப்பக் காலங்களில் கருத்தரிதலின் போது ஏற்படும் பிரச்சனைக்கு உகந்ததாக கருணைக்கிழங்கு உள்ளது.

குறிப்பு...

மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.