27/09/2017

டாட்டா பிர்லா தெரியும்.. அம்பானிங்களைத் தெரியும். ஏன் புதிய அவதாரம் அதானிய கூட தெரியும். நம்ம ஊரு முருகப்பாவைத் தெரியுமா?


தமிழகத்தின் முன்னணித் தொழில் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் தலைவர் M.V.முருகப்பன் தமது 81-ம் வயதில் கடந்த செவ்வாய் (செப்-19) இரவு காலமானார். காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் பிறந்த அவர், இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்.

1900-மாவது ஆண்டில் அவங்க தாத்தா A.M.முருகப்பச் செட்டியார் பர்மாவில் உள்ள அவங்க மாமாவோட வட்டிக்கடையில் தமது 14-வது வயதில் தொழில் கற்றுக்கொள்ள சென்றவர். பின்பு தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்து, மலேசியா, வியட்நாம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் கிளை பரப்பி நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில்... 1941-ல் பர்மாவை ஜப்பான் ஆக்கிரமிக்க... தமது வியாபாரத்தை தாய்த் தமிழகத்துக்கு மாற்றினார். அவருக்குப் பின் அவரது தனயன் வெள்ளையன் செட்டியார்... அவருக்குப் பின் இந்த M.V.முருகப்பா என தமிழகத் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் இந்தக் குழுமம் தமது பங்களிப்பை நிறைவேற்றி வருகிறது.

சென்னையில்... 1949-ல் TI சைக்கிள் கம்பெனி ஆரம்பித்த அவரது குழுமம்,

1954-ல் கார்போரண்டம் யுனிவர்சல் இந்தியா லிமிடெட் என்ற புகழ்பெற்ற தொழிற்சாலையையும்...

1971-ல் கோரமண்டல் சிமென்ட் தொழிற்சாலையையும் நிறுவியதுடன்...

1981-ல்... 150-ஆண்டுகள் பழமை வாய்ந்த வெளிநாட்டு நிறுவனமான EID-Parry நிறுவனத்தையும் கைப்பற்றியது.

இதனால் தமிழகத் தொழில் துறையில்
கட்டுமானத் தொழில், உரம், பூச்சி மருந்து, சுகர் மில், இனிப்பு வகைகள், சிமெண்ட், சைக்கிள், டெக்ஸ்டைல், ரப்பர் இன்டஸ்ட்ரி, இன்ஸ்யூரன்ஸ் எனப் பல்வேறு தொழில் துறைகளில் கால் பதித்து முன்னணி தொழிலதிபராக திகழ்ந்தவர்.

சென்னை parry's கார்னர் அனைவரும் அறிந்த பிரபலமான இடம். அது இவர்களுடைய இடம் மற்றும் நிறுவனத்தின் பெயரால் தான் அழைக்கப்படுகிறது.

சென்னை தொழில் வர்த்தக சபைத் தலைவர், இந்திய தொழில் மற்றும் வர்த்தகர் சபை கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த இவரோ அல்லது இவர்களது குழுமமோ குஜராத்திஸ் அதானி - அம்பானிகளைப் போல் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டதில்லை. Business ethics-லிருந்து விலகியதில்லை. எனவே நம்மில் பலரும் இக்குழுமத்தை அறிந்திருக்கவில்லை.

முருகப்பா குழுமத்தின் தலைவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.