03/10/2017

எதிர்காலத் தமிழகமும் : ஆட்சி நிர்வாகத்துறை...


1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்பட வேண்டும்.

2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.

3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்பட சிந்திக்கலாம்..

(ஆனால் அனைத்து உடைமையும் தமிழகத்தில் இருக்க வேண்டும்)

பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்பட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.