12/12/2017

படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உடலை எடுக்க 12 நாள்களுக்கு பிறகு கப்பல் அனுப்புகிறார்கள்...


இன்று பொன்னார் போட்ட​ பதிவு இது.

சம்பவம் நடந்து 2 வாரம் ஆகப்போகிறது, மீனவர்கள் உடல்கள் மிதக்க​ ஆரம்பித்து விட்டன. இப்போது தான் இவர்கள் ஆழ்கடல் வரை தேட​ கப்பலுக்கு அனுமதி வாங்கியுள்ளார்கள் (அதுவும் மீனவர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு ).

மீட்புபணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துவது, மீட்புபணிகளை ஏனோ தானோ என்று அக்கறையின்றி செய்வது என்று மீனவர்கள் மீது வெளிப்படையாகவே இனப்படுகொலை செய்து வருகிறது மத்திய​ மாநில​ அரசுகள்.

இந்த​ அரசுகளுக்கு ஆதரவாய் பேசுபவர்கள் தங்கள் கைகளை முகர்ந்து பாருங்கள், அவற்றில் நிச்சயமாக​ மீனவர்களின் இரத்த​ வாடை அடிக்கும்.

மீட்கப்பட்ட​ மீனவர்களில் பெரும்பாலனவர்கள் சக​ மீனவர்களால் மீட்கப்பட்டவர்கள் மற்றும் புயலினால் வேறு வேறு இடங்களில் கரை ஒதுங்கியவர்கள். இறந்த​ போன​ மீனவர்களின்  உடல்களை கூட​ சக​ மீனவர்கள் தான் மீட்கிறார்கள்.

சிறு நாடுகள் கூட​ ஒழுங்காக​ வானிலை அறிவிப்பு செய்கிறது, ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களை புயல் வரும் முன்னரே மீட்கிறது.

ஆனால் இந்தியாவால்  ஒழுங்காக​ வானிலை அறிவிப்பு கூட​ செய்ய முடியவில்லை. மீனவர்களை புயல் வரும் முன்னரே மீட்க​ முடியவில்லை.

இவற்றை தான் செய்ய​ வக்கில்லை என்றால் புயல் வந்து ஒய்ந்த​ பின் கூட​ இவர்களால் மீட்புபணிகளை ஒழுங்காக​ செய்யமுடியவில்லை.

அடத்தூ.. இதெல்லாம் ஒரு நாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.