12/12/2017

இந்திய மானங்கெட்ட கடற்படை லட்சனம் இது தான்...


வங்க கடலில் மையம் கொண்ட
நீலம் புயலால், 31OCT2012 அன்று மிகப்பெரும் கடல் சீற்றம் உருவானது...

அதில் MT Prathiba cauvery என்ற சரக்கு கப்பல் ஒன்று கரை தட்டி அபாயகரமான சூழலில் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை ஓரங்களில் பல நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்தது.

உள்ளே கப்பல் பணியாளர்கள் சுமார் 37 பேர் பசியும் பட்டினியுடன் உயிரை காப்பற்ற வழியில்லாமல் போராடிக்கொண்டிருந்தனர்.

இந்திய கடற்படையின் வீரசூரத்தனத்தை அன்று தான் நேரிடையாக பார்க்க நேர்ந்தது.

புயலின் தீவிரத்தால் ,ஒரு கட்டத்தில் உயிரை காப்பாற்றி கொள்ள அத்தனை பணியாளர்களும் கடலில் குதிக்க நேர்ந்தது.

ஆனால் கரை சேரமுடியாதவாறு கொடூரமாக காற்றின் வேகத்தில் கடல் சீற்றம் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை கடலுக்குள் இழுத்துச் செல்கிறது.

தமிழக காவல்துறைக்கு கடலில் நடக்கும் சம்பவங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை எனவே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பல மணி நேர போராட்டங்களுக்கு பிறகு கப்பல் படை அதிகாரிகள் வருகின்றனர், கரையோரமாக நின்று அவர்களுக்குள் மணிக்கணக்கில் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

பொழுது சாயும் நேரமாகிறது. ஹெலிகாப்டர் வந்து வட்டமிடுகிறது... பிறகு கதைக்கு ஆகாமல் திரும்ப சென்று விடுகிறது.

ஆனால் அதற்குள் கடல் சீற்றத்தால் ஒவ்வொருவராக உள்ளே இழுத்து அடித்து செல்லப்படுகிறார்கள்...

எட்டும் தூரத்தில் மனிதர்கள், கடற்படை இராணுவம், இனி எப்படியும் தாங்கள் காப்பாற்றபடுவோம் என்ற நம்பிக்கையில் கடலுக்குள் போராடி கொண்டிருக்கிறார்கள்...

ஆனால் கடற்படை அதிகாரிகளின் காலணி கூட கடல் தண்ணீரில் நனையவில்லை. இப்பொழுதும் அவர்கள் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

கடலுக்குள் தத்தளிக்கும் மனித தலைகள் ஒவ்வொன்றாக மறையத்தொடங்குகின்றது.

ஆனால் இதற்கு மேலும் பொறுக்க முடியாத அந்த குப்பத்து மீனவமக்கள் தங்களது சிறிய விசைப்படகுகளுடன் உயிருக்கு ஆபத்தான சூழலில் தங்களது உயிரை பணயம் வைத்து கடலுக்குள் இறங்குகின்றனர்.

ஒட்டுமொத்த மீனவ குப்பமே உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டனர். கடல் சூறாவளி இவர்களை உள்ளே வரவிடாமல் வெளியே தள்ளுகிறது. பல மணிநேர போராட்டம்.

கயிறுகளையும்,வலைகளையும் கொண்டு எது கையில் இருக்கிறதோ அத்தனையும் உபயோகப்படுத்தி 27 கப்பல் பணியாளர்களின் உயிரை காப்பாற்றினர்.

ஆனால் ஆறு மீனவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மறுநாள் எங்கெங்கோ பிணமாக கரை ஒதுங்கியது.

அன்று கடற்படை இராணுவமும், அரசு இயந்திரங்களும் மக்கள் கூட்டத்தில் அவர்களில் ஒருவராகத்தான் நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது.

மனித உயிர்களை காப்பாற்றும் முனைப்பில் தன்னை மறப்பவர்கள் மீனவ மக்கள்.

அந்த மக்களைத் தான் மெரினா புரட்சியில் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கினார்கள். அந்த மீனவ மக்களின் உயிரை காப்பாற்ற வக்கற்று தான் குமரியில் வெக்கமற்று நிற்கிறது அரசாங்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.