22/12/2017

ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து ஏன் டி.என்.ஏ. பரிசோதனை ஏன் செய்யக் கூடாது?- உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி...


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என தன்னை அறிவிக்கக்கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு மூத்த நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று விசாரணக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் தான் என்று வழக்கறிஞர் பிரகாஷ் வாதாடினார்.
கீழ்த்தரமான விளம்பரத்துக்காக அம்ருதா வழக்கு தொடுக்கவில்லை எனவும் வாதிட்டார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி, அம்ருதா தொடர்ந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

இடையில் அரசு தரப்பில் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் ஆயிரம் பேர் இதுபோன்று வருவார்கள் என அரசுத் தரப்பு வாதிடப்பட்டது.

இதனையடுத்து, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்களில் கையெழுத்து உள்ளிட்ட பல குளறுபடி உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை(டிச.,22)க்கு ஒத்தி வைத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.